பர்மாவில் பௌத்த-முஸ்லீம் கலவரத்தில் 20 பேர் சாவு – ராகைன் மாதிரி மெய்க்திலாவிலும் தொடர்கிறதா?

பர்மாவில் பௌத்த-முஸ்லீம் கலவரத்தில் 20 பேர் சாவு – ராகைன் மாதிரி மெய்க்திலாவிலும் தொடர்கிறதா?

Kachin rebellion - Burmese problem

பௌத்தமுஸ்லீம் கலவரம்: பிரமதேசம் இந்தியாவின் பகுதியாக இருந்தது. ஆனால், ஆங்கிலேயர் நிர்வாக சௌகரியத்திற்காக அதனை இந்தியாவிலிருந்து பிரித்தனர். இடைக்காலத்தில் வங்காளத்தில், பரவிய இஸ்லாம், வங்காளம் மேற்கு பாகிஸ்தான், பங்காளதேசம் என்று மாறியபோது, இஸ்லாமிய நாடாகியது. உலகத்திலேயே ஏழ்மையில் கடைசியாக வந்தாலும், முஸ்லீம்கள் அதிகம் கொண்ட நாட்டில் பட்டியலில் இரண்டாவதாக வருகிறது. இஸ்லாம் என்றாலே அமைதி என்று முஸ்லீம்கள் பெருமையாகப் பொருள் கூறிக்கொள்கின்றனர். பௌத்தமோ அமைதியான, சாந்தமான அஹிம்சை வழி பின்பற்றிச் செல்லும் மதமாகும். ஆனால், இத்தகைய இருமத நம்பிக்கையாளர்கள் ஏன் அடித்துக் கொள்கின்றனர்? இது மதப்பிரச்சினையா அல்லது மக்கள் பிரச்சினையா அல்லது மியன்மாரில் ராணுவ ஆட்சிற்கு எதிராக உருவாக்கப் பட்டுள்ள பிரச்சினையா என்ற கேல்விகள் எழுகின்றன.

Rakhine - central Burma where riots taking place

மூன்று நாட்களாக நடந்து வரும் கலவரம்: 20-03-2012லிருந்து கடைசண்டையில், அதுவும், நகைகடைசண்டையில் ஆரம்பித்த பிரச்சினை கலவரமாக மாறியுள்ளது. பர்மா / மியன்மாரில் பௌத்தர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட மதகலவரங்களில் 20 பேர் இறந்துள்ளனர். நிலமை மோசமாகி விட்டதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ரேகைன் மாநிலத்தில் ரோஹின்யா முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் பிரச்சினை நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட கலவரங்களில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு லட்சம் பேர் வீடு, உடமைகளை இழந்துள்ளனர்[1].

Rakhine - violence - Musim problem

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[2]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[3] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[4]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[5].

Smoke and flames billow from a burning building set ablaze in Meikhtila, where ethnic unrest between Buddhists and Muslims continues, in Mandalay division, central Myanmar 21-03-2013

அமெரிக்கசைனா விவகாரத்தில் பர்மா சிக்கிக் கொண்டு தவிக்கும் நிலை: 80% பௌத்தர்கள் கொண்டு பர்மா இருந்தாலும், நாடு முழுவதும் சண்டை-போர்-கலவரம் என்றுதான் இருந்து வருகின்றது[6]. பர்மாவைச் சுற்றியுள்ள நாடுகள் பங்காளதேசம், இந்தியா, சைனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகும். இவற்றில் சைனா வடகிழக்குப் பகுதியிலுள்ள கச்சின் என்ற இடத்தில் அங்கு போராடும் புரட்சியாளர்கள் மூலம் தனது அதிகாரத்தை செல்லுத்தி வருகிறது. கச்சின் சுதந்திர ராணுவம் (Kachin Independence Army) தனிநாட்டிற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அதற்கு சைனா மற்றும் அமெரிக்கா உதவி வருகின்றன. கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஆட்சியாளர்கள் இருப்பதனால், அமெரிக்கா, பர்மாவை தென்-கொரியாவுடனான தனது நட்பை முறித்துக் கொள்ளக் கூறுகிறது[7]. அமெரிக்கா பர்மாவில் ஜனநாயக ஆட்சி வந்தால், தனது பொருட்களுக்கான வியாபாரம் பெருகும் என்று தான் கண்வைத்துள்ளது[8]. இப்படி அமெரிக்கா பர்மாவை நெருங்கி வருவதை சைனா சந்தேகிக்கிறது[9]. ஆனால், டாலர்களாக உதவி மற்றும் முதலீடு பர்மாவிற்கு வந்து கொண்டிருக்கிறது[10]. அதே நேரத்தில் பிரிவினைவாதிகளுக்கும் பணம், ஆயுதம் என்று எல்லாமே கிடைத்துக் கொண்டிருக்கிறது[11].

 

புரட்சி, ராணுவம், ஆயுதங்கள், போதைமருந்து என சிக்கித் தவிக்கும் பர்மா: கம்யூனிஸம் என்றாலே அடக்குமுறை இருக்கும். ராணுவ ஆட்சியென்றால், ஜனநாயகம் பெயருக்குத்தான் இருக்கும். ஆனால், எல்லைப் பகுதிகளில் மக்கள் பிரிவிமனைவாதம், தீவிரவாதம் என்று குழுக்கள் வேலை செய்து கொண்டிருந்தால், ராணுவத்தால் என்ன செய்ய முடியும்? போதாகுறைக்கு, போராடும் குழுக்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படுகின்றன. பணத்திற்காக போதை மருந்து உற்பத்தி, விற்பனை என்றும் குழுக்கள் ஈடுபட்டுள்ளன[12]. இதில் பிரிவினைவாதிகளின் பங்கு உண்டு.

 

ராணுவத்துக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெற்றதால் கலவரம்: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. உலக நாடுகளின் வலியுறுத்தலை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து, அதில், ராணுவத்துக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகிய நிலையில் ராணுவத்துக்கும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கரென் மாகாணத்தில் உள்ள மியாவட்டி நகரில் கலவரம் மூண்டதால் கலவரக்காரர்கள் மீது ராணுவம் ஆயுத தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில் பொதுமக்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து மியான்மரில் உள்ள பகோடாஸ் பாஸ், ஷிப்போராசின் ஆகிய மாகா ணங்களுக்கும் கலவரம் பரவியது. கலவரக்காரர்களிடம் துப்பாக்கிகள் விநிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு ராணுவத்துக்கும் “ஜனநாயக கரென் புத்திஸ்ட் ஆர்மி” அமைப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததால், அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்து நாடான தாய்லாந்துக்கு ஓட்டம் பிடித்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் அங்கு சென்று அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த தகவலை மியான்மரின் எல்லையில் உள்ள தாய்லாந்தின் தபிக் மாகாண கவர்னர் சமர்த்லாய்பாக் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மியான்மரில் தேர்தலில் ராணுவமும், அதன் ஆதரவு கட்சிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

பர்மாவிற்கு எதிராக கிருத்துவப் பிரச்சாரம்: மார்ச் 22ம் தேதி, பெலேட்வா என்ற இடத்தில் ராணுவம் 13வயது பெண்ணை கற்பழித்து விட்டதாக கிருத்துவ இயக்கங்கள் [Christian Solidarity Worldwide (CSW) and the Chin Human Rights  Organization (CHRO)] குற்றஞ்சாட்டியுள்ளன. அது மட்டுமல்லாது, கச்சின் பெண்கள் சங்கம், தாய்லாந்து[Kachin Women’s Association of Thailand (KWAT)] ரானுவத்தார் 9 விவிலியன்களைக் கொன்றுல்லார்கள் மற்றும் 12ற்கும் மேலானவர்களை காயப்படுத்தியுள்ளார்கள் என்று அடுக்கிக் கொண்டு போகின்றனர்[13]. இதே மாதிரி ராணுவத்தினர் கச்சின் கிருத்துவர்களைக் கொல்கின்றனர்[14], சித்திரவதை செய்கின்றனர், பெண்ணை கூட்டாகக் கற்பழித்தனர்[15], சர்ச்சுகளில் பெண்களை கற்பழிக்கின்றனர்[16],….என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[17].

 

அமெரிக்கா-சைனா-முஸ்லீம்கள் கூட்டு: பாரம்பரிய பர்மியர்கள் கூறுவதாவது, பர்மாவின் இயற்கை வளங்களுக்காக, இடைக்காலத்தில் ஐரோப்பிய கம்பெனிகள் எங்களது நாட்டை சுரண்டி வந்தன. இப்பொழுது அமெரிக்கா வந்துள்ளது. சைனாவைப் பொறுத்த வரைக்கும், இந்தியா வளுவாக இருக்கும்போது, அடக்கி வாசிக்கும், மற்ற நேரங்களில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து கொண்டு எல்லைகளில் பிரச்சினை செய்து கொண்டிருக்கும். சைனர்கள் எப்பொழுதும் முஸ்லீம்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு எல்லாவிதங்களிலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்கள். வியாபாரம், கப்பல் கொள்ளை போன்றவற்றில் அவர்களின் கூட்டு சொல்லி மாளாது. இப்பொழுது நிலைமாறியுள்ளது.

 

© வேதபிரகாஷ்

23-03-2013

 


[3] said Mark Farmaner of human rights group Burma Campaign UK.

“We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[4] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பர்மாவில் பௌத்த-முஸ்லீம் கலவரத்தில் 20 பேர் சாவு – ராகைன் மாதிரி மெய்க்திலாவிலும் தொடர்கிறதா?”

  1. சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா? | Indian Secularism Says:

    […] [16] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/ […]

  2. அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்ம Says:

    […] [3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: