மே 2026ல் வந்த இரண்டு பௌர்ணமிகள், புத்தபூர்ணிமா இரண்டு தேதிகளில் கொண்டாடியது, அதிகமாதம் முதலியன (2)

ஜூன் 5, 2026

மே 2026ல் வந்த இரண்டு பௌர்ணமிகள், புத்த பூர்ணிமா இரண்டு தேதிகளில்கொண்டாடியது, அதிகமாதம் முதலியன (2)

சரிசெய்யப் படும் கணக்கீட்டு மாதம் என்பதால் மங்கல நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: இந்த மாதம் பெரும்பாலும் அசுபமானதாகக் கருதப்படுகிறது (மாலா/மலம்), அங்கு திருமணம் போன்ற சடங்குகள் நடைபெறாது. முன்னர் தங்கள் மதக் கடமைகளை புறக்கணித்த பக்தர்களுக்கு இது ஒரு ஈடுசெய்யும் காலமாகவும் செயல்படுகிறது, என்றெல்லம் விளக்கம்கொடுக்கப் படுகிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில், புருஷோத்தம்புரி என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது, அங்கு கிருஷ்ணரின் பிராந்திய வடிவமான புருஷோத்தமரின் கோயில் உள்ளது . ஒவ்வொரு அதிகமாசத்திலும், ஒரு பெரிய திருவிழா நடைபெறும், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து தெய்வத்தின் ஆசீர்வாதங்களைப் பெற வருகிறார்கள். எனவே, உண்மையான வானியல், பூகோலவியல், விஞ்ஞான உண்மை, முக்கியத்துவம் முதலியவற்றை அறியாமல், வெறும் நம்பிக்கை அல்லது ஜோதிட ரீதியில் இத்தகைய விளக்கங்களும் கொடுக்கப் படுகின்றன, ஊடகங்களில் பரப்பப் படுகின்றன.

Buddha's skull4
Buddha’s skull4

01-05-2026 மற்றும் 31-05-2026 தேதிகளில் புத்த பௌர்ணமி கொண்டாடியது ஏன்?: இத்தகைய விளக்கங்கள் கொடுத்தாலும் பூகோள ரீதியில் தீர்க்க-அட்சரேகை, இரு நாட்டின் இருப்பிடம், காலக் கணக்கீடு வைத்து ஆசியாவில் உள்ள பல இடங்களில் புத்த பூர்ணிமா ஏன் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் பட்டுள்ளன என்பதை கவனிக்கலாம். புத்த பூர்ணிமா நாடுகளில் 01-05-2026 அன்று இந்தியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 31-05-2026 அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது. தீர்க்க ரேகையை வைத்து தான், ஒரு நாட்டின் நேரம் கணக்கிடப்படுகிறது. முன்பு இந்தியாவில் உஜ்ஜயினியை  அல்லது அதன்வழி செல்லும் தீர்க்கரேகையை மையமாக வைத்து தான் காலம் கணக்கிடப்பட்டது. பல்லாண்டுகள் கழித்து ஆங்கிலேய காலணிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, கிரீன்விச் என்ற இடத்தை மையமாக வைத்து காலம் கணக்கிடும் முறையானது ஏற்படுத்தப்பட்டது. எனவே இருபதாவது நூற்றாண்டுக்கு முன்பாக 3000-5000 ஆண்டுகளில் இவ்வாறு பழையமுறையில் தான் காலக்கணக்கீடு செய்யப்பட்டது என்பதால், அத்தகைய வித்தியாசம் ஏற்படுகிறது என்பதை பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 2018ல்  இவ்வாறு வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் பட்டபோது, எடுத்துக் காட்டியுள்ளேன்.

29-04-2018 மற்றும் 29-05-2018 தேதிகளில் உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கொண்டாட்டப்பட்டது[1]: இன்று புத்த பூர்ணிமா, விஷாக-2018 உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. பௌர்ணமி 29-30 மாலை-காலை வரை, விசாகம்-30-04-2018! புத்தர் பிறந்தது [ஜனனம்], ஞானம் பெற்றது [நிர்யாணம்] மற்றும் காலமானது [முக்தி] எல்லாமே விசாகம்-பௌர்ணமி திதியன்று நடந்துள்ளது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 ஶ்ரீலங்கா, கம்போடியா, மியன்மார், பங்களாதேச நாடுகளில் 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது[2]. புத்த பூர்ணிமா, விஷாக-2018 சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் 29-05-2018 அன்று கொண்டாடப் படுகிறது. திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இரண்டு விதமான பாரம்பரியங்களுக்கு ஏற்றமுறையில் அனுஷ்டிக்கப் படுகிறது[3]. புத்தருடைய தேதி சரியாகக் கணக்கிடப் படவில்லை, ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான தேதிகள் உபயோகத்தில் உள்ளன. புத்தருடைய இறந்த தேதி – 544-543 BCE, 487-486 BCE, 368 BCE, 2420 to 290 BCE மற்றும் அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. 1887-1807 BCE என்பது பாரம்பரிய தேதியாக இருக்கிறது, இது வானவியல் கணக்கீடு மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது[4].

புத்தருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளும், தொடரும் ஆராய்ச்சிகளும்: புத்தருடைய தேதியை அறுதியாக நிலைநிறுத்தமுடியாது என்ற எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் பரவியிருந்த பௌத்த நம்பிக்கையாளர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவை, பௌத்தத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இதனால், இன்றும், புத்தருக்கு பல தேதிகள் உள்ளன என்பதனை அறிந்து, அவற்றை கீழ்கண்டவாறு பகுத்துள்ளனர்:

  1. ஶ்ரீலங்காவில் உபயோகப்படுத்தப் படும் நெடிய காலக்கணக்கீடு [Long chronology (Ceylonese)]: 544-543 BCE.
  2. சரிசெய்யப் பட்ட நெடிய காலக்கணக்கீடு [Corrected long chronology]: 487-486 BCE
  3. குறுகிய காலக்கணக்கீடு [Short chronology (Indian chronology)]: 368 BCE.
  4. பாரம்பரியமாக வழக்கில் உள்ள நெடிய காலக்கணக்கீடு [Buddhist tradition (non-scholar)]: ranges from 2420 to 290 BCE.
  5. அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்ட காலக்கணக்கீடு [Succession of the five patriarchs: Five succession of teachers before Ashoka]: என்றுள்ளது.

இந்தியாவிற்கு வராமலேயே, இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள் முதலியவற்றை வரவழைத்து, லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதங்களை ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர், புத்தருக்கு பல தேதிகள் குற்ப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார் – 2422 BCE, 2148, 2139, 2136, 2135 1366, 1332, 1310; 1058, 1036, 1027; all in BCE. இப்பொழுதோ 300 BCEக்கு முறைக்கிறார்கள்[5]. இதிலிருந்தே, அவர்களது ஆராய்ச்சி முறைகளில் ஏதோ தவறாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி செய்யும் போது, காலக்கிரய ஆதாரங்கள், முன்னது எது, பின்னது எது என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடுகிறது. அதனால், அதில் எந்த குழப்பமும் இல்லை.

புத்தருடைய தேதி மட்டுமல்லாது, இந்திய சரித்திரத்தில் மற்ற தேதிகளும் உறுதிசெய்யப் படவேண்டிய அவசியம் உள்ளது: இந்திய சரித்திரத்தில் பெரும்பாலான தேதிகள் துல்லியமாக, உறுதியாக, அறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த இந்திய சரித்திர புத்தகங்களில் அதாவது circa- தோராயமான எங்கள் ரீதியில் தான் தேதிகளை குறிப்பிட்டு சரித்திரத்தை எழுதி வைத்தார்கள். மேலும் சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்புகள் இந்திய சரித்திரத்தின் செய்திகளை புரட்டிப் போட்டனர் 3000 முதல் 7000 BCE வரை செல்லும் தேதிகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ரக்லதாஸ் பானர்ஜியின் புத்த விஹாரம் கண்டுபிடிப்பின் ஹேதி 1800 BCE சென்றது. இதனால் அவரது அறிக்கையும் வெளியிடாமல் மறைத்தனர். அவர் எடுத்த புகைப்படங்களும் காணாமல் போய்விட்டன. ஆகவே புத்தருடைய தேதி 20ஆம் தேதி நூற்றாண்டிலேயே வரையறுக்கப்படவில்லை. அந்நிலையில் இப்பொழுதும் புத்த பூர்ணிமா ஏன் வெவ்வேறு நாடுகளில் பற்பல தேதிகளில் கொண்டாடப்படுகிறது என்பதை சரித்திரம் முறையாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

© வேதபிரகாஷ்

04-06-2026


[1] வேதபிரகாஷ், புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1), மே 1, 2018.

[2] https://buddhismstudies.wordpress.com/2018/05/01/why-buddha-purnima-celebrated-on-different-dates-in-various-countries/

[3] In 2018, Buddha Purnima (also known as Vesak) was celebrated on different dates across various countries. While the festival typically honors the birth, enlightenment, and death of Gautama Buddha on the first full moon of the Vaisakha month, different regional lunar calendars and astrological calculations caused these variations.The specific dates observed in 2018 include:

  • April 29, 2018: Celebrated in countries like Sri Lanka, Cambodia, Myanmar, and Bangladesh.
  • April 30, 2018: Celebrated in India and Nepal.
  • May 29, 2018: Celebrated in Singapore, Thailand, Malaysia, and Indonesia.The exact date varies each year on the Western Gregorian calendar depending on the specific new and full moon cycles tracked by local Buddhist and Hindu lunisolar calendars.

[4] E.Vedavyas, Astronomical Dating of the Mahabharata War, New Delhi, 1986, pp. 223-229.

[5] Shriram Sathe (born 1920), a noted Indian historian, extensively analyzed the chronological dating of Gautama Buddha in his 1987 book, Dates of the Buddha.  Tibetan Tradition: Sathe also accounts for the Tibetan tradition, which dates the Nirvana to 835 BCE.

மே2026ல் வந்த இரண்டு பௌர்ணமிகள், புத்தபூர்ணிமா இரண்டு தேதிகளில் கொண்டாடியது, அதிகமாதம் முதலியன (1)

ஜூன் 5, 2026

மே 2026ல் வந்த இரண்டு பௌர்ணமிகள், புத்த பூர்ணிமா இரண்டு தேதிகளில்கொண்டாடியது, அதிகமாதம் முதலியன (1)

2026ல் வைகாசி மாதத்துடன் இணைந்து வரும் அதிகமாதம்: 2026ஆம் ஆண்டில் வைகாசி மாதத்தில் “அதிக மாதம்” எனப்படும் அரிய புண்ணிய காலம் மே 17 முதல் ஜூன் 16 வரை நடைபெறுகிறது. இந்த மாதம் வெறும் கால கணித-கணக்கீடு சரிசெய்தல் மட்டுமல்ல; ஆகமங்கள், புராணங்கள் மற்றும் தந்திர சாஸ்திரங்களில் மிகுந்த ஆன்மிக சக்தி கொண்ட மாதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக மாசம் (சமஸ்கிருதம்: अधिकमास), அதிக்-மாசம், மல-மாசம் மற்றும் புருஷோத்தம-மாசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்து நாட்காட்டியில் (calendar) சந்திர-சூரிர நாட்காட்டிகளின் வித்தியாசத்தை சரிசெய்ய சேர்க்கப் படும், ஒரு இடைப்பட்ட மாதமாகும். இது சந்திர நாட்காட்டியை ஆண்டின் மாதங்களுடன் சீரமைக்க இடையில் சேர்க்கப்படுகிறது. அதிக-மாசம் என்பது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் சூரிய நாட்காட்டியில் சேர்க்கப்படும் கூடுதல் சந்திர மாதமாகும் (முப்பது நாட்கள்). இதனால் சந்திர மற்றும் சூரிய ஆண்டுகள், பூகோள – விவசாய சுழற்சி மற்றும் பருவங்களுடன் இயந்து போக சேர்க்கப்படுகின்றன.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்: இரண்டு பௌர்ணமிகள் கொண்ட மே 2026 அரித்திர ரீதியில் பலஆம்சங்களை எடுத்துக் காட்டுகின்றன:

  1. 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் 01-05-2026 மற்றும் 31-05-2026 ஆகிய தேதிகளில் இரண்டு பௌர்ணமி தினங்கள் அமைந்திருந்தன, கடந்து விட்டன.
  • புத்த பூர்ணிமா நாடுகளில் 01-05-2026 அன்று இந்தியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.
  • ஆனால், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 31-05-2026 அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது.
  • சரித்திரத்தைப் புரட்டும் ஜாதிவாரி முகநூல் வித்தகர்கள், இந்துவிரோத முகமூடிகள், திராவிடத்து பகுத்தறிவு ஜீவிகளும் கண்டுகொள்ளவில்லை.
  • இதை இந்துத்துவவாதிகள், பிரஹஸ்பதிகள், சைவப் போராளிகள், வைணவ வீரர்கள் கவனித்தார்களா என்றும் தெரியவில்லை!
  • சந்திரனின் சுழற்சி நிறைவடைய சுமார் 29.5 நாட்கள் ஆவதால், ஒரே காலண்டர் மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவது என்பது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வாகும்.
  • அதிக மாசம் என்பது சூரிய ஆண்டுடன் ஒத்திசைப்பதற்காக, இயைந்து போக, சந்திர நாட்காட்டியில் ஒவ்வொரு 32–33 மாதங்களுக்கும் ஒருமுறை இந்த 13-வது கூடுதல் மாதம் சேர்க்கப்படுகிறது.
  • ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் அகநிலைச் செயல்பாடுகளுக்கு இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
  • நீல நிலவு (Blue Moon): ஒரே மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி வரும்போதோ அல்லது ஒரு பருவ காலத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியாகவோ இது அமைகிறது.
  1. குணப்படுத்துதல், தூய்மையாதல் மற்றும் வலிமையான சங்கல்பங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு ஏற்கனவே புனிதமானதாகத் திகழும் இக்காலகட்டத்தின் ஆற்றலை இது மேலும் அதிகரிக்கிறது.

இந்து நாட்காட்டியில் வரும் கூடுதல் புனித மாதமான ‘அதிக மாசம்’ (Adhika Masa) மற்றும் ‘நீல நிலவு’ (Blue Moon) ஆகிய இரண்டின் அரிய சங்கமத்தைக் கொண்டாடுவது, ஆன்மீக ரீதியாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு காலமாகும்.

அதிக மாதம் சேர்த்து பெயரிடப்படும் முறை: சூரியன் ஒரு புதிய ராசிக்குள் (30° நட்சத்திர ராசி) செல்லாமல், ஒரு சந்திர மாதத்தில் (ஒரு அமாவாசைக்கு முன் ) ஒரு ராசிக்குள் நகர்ந்து கொண்டே இருந்தால் , அந்த சந்திர மாதம் முதலில் வரவிருக்கும் பெயர்ச்சியைப் பொறுத்து பெயரிடப்படும். இது அதிக அல்லது “கூடுதல்” என்ற அடைமொழியையும் எடுக்கும். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுவது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது . உதாரணமாக, ஒரு சந்திர மாதம் சங்கராந்தி இல்லாமல் கடந்து, அடுத்த பெயர்ச்சி மேஷத்தில் (மேஷம்) இருந்தால், பெயர்ச்சி இல்லாத இந்த மாதம் அதிக சைத்ரா என்று பெயரிடப்படும். அடுத்த மாதம் வழக்கம் போல் அதன் பெயர்ச்சியின் படி பெயரிடப்படும், மேலும் நிஜ (“அசல்”) அல்லது சுத்த (“சுத்தம்”) என்ற அடைமொழியைப் பெறும், இந்த விஷயத்தில் நிஜ சைத்ரா. பிரதம் (முதல்) சைத்ரா மற்றும் த்விதிய (இரண்டாவது) சைத்ரா என்ற சொற்களும் பயன்படுத்தப்படலாம். மேலே உள்ள விளக்கம் “அமந்த” அமைப்புக்கானது. அதே எடுத்துக்காட்டில், “பூர்ணிமந்த” அமைப்பில் அது சைத்ராவின் முதல் பாதியாகவும், பின்னர் அதிக சைத்ராவின் இரண்டாம் பாதியாகவும் இருக்கும்.

சந்திரன் – சூரியன் சுழற்சி வைத்து கணக்கிடப் படும் ஆண்டுகளில் வித்தியாசம் வருகிறது: சராசரியாக ஒவ்வொரு 32.5 மாதங்களுக்கும் ஒரு கூடுதல் மாதம் அல்லது அதிக-மாசம் வருகிறது. சூரிய ஆண்டு 365 நாட்கள் மற்றும் சுமார் 6 மணிநேரங்களைக் கொண்டது, சந்திர ஆண்டு 354 நாட்களைக் கொண்டது. இதனால் சந்திர மற்றும் சூரிய ஆண்டுகளுக்கு இடையே 11 நாட்கள், 1 மணி நேரம், 31 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் இடைவெளி ஏற்படுகிறது. சந்திரமாத கணக்கு ஆண்டில், இந்த இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் குவிவதால், இது தோராயமாக 2.7 ஆண்டுகள் முதல் ஒரு மாதம் வரை இருக்கும். மார்கழி முதல் மகம் வரையிலான மாதங்களில் அதிக-மாசம் வராது. கார்த்திகை மாதத்தில் ஒரு அதிக-மாசம் மிகவும் அரிதானது, ஆனால் 250 ஆண்டு காலத்தில் (1901-2150 CE) இது 1963 CE இல் ஒரு முறை நிகழ்ந்தது.

அறிவியல் கணக்கீடு மற்றும் விளக்கம்: பூமியைச் சுற்றி ஒரு முழுமையான சுற்றுப்பாதையை உருவாக்க சந்திரன் சுமார் 27.3 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி ஒவ்வொரு 365.2422 நாட்களுக்கும் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது (= பூமியின் சுற்றுப்பாதை வேகம் வினாடிக்கு 29.79 கி.மீ.). பூமியும் சந்திரனும் 29.53 நாட்களில் சூரியனைச் சுற்றி ஒரு அமைப்பாக 1/12 பங்கு தூரம் நகர்ந்துள்ளன. இதன் பொருள், ஒரு முழு நிலவிலிருந்து அடுத்த முழு நிலவுக்கு, சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையின் வளைவு காரணமாக, சந்திரன் மீண்டும் முழு நிலவாகத் தோன்றுவதற்கு முன்பு 2.2 கூடுதல் நாட்கள் பயணிக்க வேண்டும். இது ஒரு சந்திர ஆண்டுக்கும் ஒரு சூரிய ஆண்டுக்கும் இடையில் ஒரு வருடத்திற்கு 10.87 நாட்கள் மாறுபாட்டை உருவாக்குகிறது. இந்த வேறுபாட்டை ஈடுசெய்ய, சராசரியாக ஒவ்வொரு 32.5 மாதங்களுக்கும் பிறகு கூடுதல் மாதம் சேர்க்கப்படுகிறது.

மத நடைமுறைகள், சம்பிரதாயங்கள், விழாக்கள்: நேபாளத்தில் உள்ள மச்சேகாவ்ன் கிராமத்தில் அதிகமாசத்தின் போது ஒரு மாத கால மேளா (விழா) கொண்டாடப்படுகிறது. மச்சேநாராயண் கோவிலில் உள்ள குளத்தில் குளிப்பதன் மூலம் ஒருவர் தனது அனைத்து பாவங்களையும் கழுவிக் கொள்ளலாம் என்பது பொதுவான நம்பிக்கை. தசரா அல்லது தீபாவளி போன்ற குறிப்பிட்ட பண்டிகைகள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுவதில்லை. புனித மாதமாகக் கருதப்படும் இந்த மாதத்தில், பலர் அதிக மாச விரதத்தை மேற்கொள்கிறார்கள். மக்கள் மாலை ஜபங்கள், பிரதக்ஷிணங்கள், யாத்திரைகள், வேத வாசிப்பு மற்றும் பாராயணங்கள் போன்ற நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள். மரபுரீதியாக ஆழ்ந்த சுயசிந்தனைக்கும் பக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இக்காலம், வேத மரபில் போற்றப்படும் முதன்மைத் தெய்வ சக்திகளைச் சிறப்பிக்கும் விதமாக, சரியாக 33 விளக்குகளை ஏற்றுவதன் மூலம் மேலும் மகத்துவம் பெறுகிறது.

நடைமுறை கட்டுப்பாடுகள்: அதிகமாசத்தின் போது, ​​மக்கள் பல்வேறு வகையான மத சடங்குகளைச் செய்கிறார்கள், அதாவது விரதம் இருப்பது, மத நூல்களை ஓதுவது, மந்திரங்கள், பிரார்த்தனைகள், பல்வேறு வகையான பூஜை மற்றும் ஹவனம் செய்தல் . பல்வேறு கால அளவுகளைக் கொண்ட விரதங்கள் (விரதங்கள்) (முழு நாள், அரை நாள், வாராந்திரம், பதினைந்து நாட்கள், முழு மாதம்) பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன. விரதங்கள் திரவங்களை மட்டுமே உட்கொண்டு அல்லது திரவங்கள் இல்லாமல் முழுமையான விரதமாக இருக்கலாம், பழங்கள் மட்டுமே உட்கொண்டு அல்லது சைவ உணவுடன் விரதம் இருப்பது, தனிநபர் பொறுத்துக்கொள்ளக்கூடியது. இந்த மாதத்தில் நல்ல செயல்களைச் செய்பவர்கள் (சத்கர்மா) தங்கள் புலன்களை (இந்திரியங்களை) வென்று புனர் ஜனனத்திலிருந்து (மறுபிறப்பு சுழற்சி) முழுமையாக வெளியே வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

© வேதபிரகாஷ்

04-06-2026

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னா – பலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

தென்னிந்தியாவில் ஜைனம்–பௌத்தம் குறைந்து வைணவம்–சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஜைன–பௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.

2013ல் – தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:

  • கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
  • தெற்கு : கண்ணனின் உருவம்
  • மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
  • வடக்கு :கிருஷ்ண அவதாரம்

இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.

2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது.  பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள்  எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை  வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை  மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில்  அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.

[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

[3]  பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.

[4]  இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.

[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52

[6] https://m.dinamalar.com/detail.php?id=720040

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

ஒக்ரோபர் 18, 2019

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

Bodhidharma-sculpture in Mahabalipuram

குங்ஃபூவும் போதிதருமனும்: போதி தருமன் பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர். சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு ஒன்று போதிதருமன் பற்றி கூறுகிறது.  டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் அரசரின் மகன் என்கிறது. டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng). தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன-ஜப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர். மகாசன், சுவலபில் போன்ற ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறனர். யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை).

Bodhidharma-Tamil mythologization

ப்ராஃடன்[1] யாங் சுவான்சீ பதிவை மறுப்பது: அக்காலப் பாரசீகத்தை பஹலவர் என்ற அரச மரபினர் ஆண்டனர். அந்த பஹலவர் பெயரும் பல்லவர் பெயரும் ஒற்றுமையாய் உள்ளதாலே யாங் சுவாங்சீ பதிவுகளை எழுதியவர். பல்லவரான போதிதருமரை பஹலவர் என மயங்கி பாரசீகத்தைச் சேர்ந்தவர் என எண்ணியிருக்கக் கூடும். இதற்கு வழுசேர்க்கும் விதமாக போதி தர்மாவின் சீடரெனக் கருதப்படும் தான்லின் போதிதருமரை தென்னிந்தியர் எனக்கூறியதையும் கொண்டு பிராட்டன் என்னும் ஆய்வாளர் போதிதர்மா பாரசீகத்தவர் எனக் கூறப்பட்டதை மறுக்கிறார். போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் II -னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.  கந்தவர்மன் II -னின் மூன்று மகன்கள் என அறியப்படுவோர் – 1. முதலாம் சிம்மவர்மன், 2. இரண்டாம் விஷ்ணுகோபன், 3. இரண்டாம் குமாரவிட்ணு. கால ஒற்றுமையின் படி, போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (475-550 CE விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (340 CE) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (450-500) 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (563 BCE) போதிதர்மா வரை (550 CE). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை. ஆனால், இவர்கள் எல்லோருமே, ஆன்டி பெர்கூசன் ஆராய்ச்சியை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது தெறிகிறது.

Bodhidharma-Tamil mythologization-by Tamil group

போதி தர்மர் பற்றி ஆன்டி பெர்கூஸன் கூறுவது: ஆன்டி பெர்கூசன் என்பவர் 1978களில் போதிதர்மர் சம்பந்தப் பட்ட இடங்களுக்குச் சென்று, சீனமொழியில் உள்ள இலகீயங்களைப் படித்து, ஆராய்ச்சி செய்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் பல விவரங்களைக் கொடுத்துள்ளார். போதிதர்மர் பற்றி அறிய டௌஸ்வான் [Daoxuan pronounced as Dawswan 596-667 CE] என்ற டாங் காலத்தைய பௌத்த சரித்திர ஆசிரியர் மற்றும் பண்டிதர் முக்கியமானவர்.  பிறகு வூ [Wu 502-549 CE] என்கின்ற சீன அரசன். இவர்கள் மூலம் தான் போதிதர்மர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன, ஏனெனில்,  இவர்கள் காலத்தில் தன், போதிதர்மர் அங்கு சென்றுள்ளார். இவர், ஜென் பௌத்தத்தின் ஆரம்ப குரு, பிதாமஹர் என்றெல்லாம் போற்றப் படுகிறார். ஜென் என்பது, சைனாமயமாக்கப் பட்ட, இந்திய பௌத்தம். அவர் இந்தியாவின் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த பிராமணர்[2]. கண்கள் நீல நிறத்தில் இருந்தன [Blue-Eyed Barbrian], அதனால், சீனர் இவரை “நீலக் கண் காட்டுமிராண்டி” என்றே அழைத்தனர். 527ல் குவாங்சௌக்கு வந்து, வூவை சந்திக்க நான்சிங்கிற்கு [Nanjing] சென்றதாக உள்ளது. வூவிற்கு பௌத்தத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், அவர் “போதிசத்துவ மஹராஜா” [Bodhisattva Emperor] என்றே அழைக்கப் பட்டார். உள்ளூர் கதைகளின் படி, போதிதர்மர் யாங்-சீ [Yang-tse] நதியைக் கடந்து, ஷாவாலின் கோவிலை அடைந்தார். அக்கோவில் பின்புறத்தில் இருந்த குகையில் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து 536ல் இறந்ததாக உள்ளது. அவரது உடல், டிங்லிங் [Dinglin] என்ற, “சமாதி காடுகளில்” புதைக்கப் பட்டது. அது லுயோயாங் [Luoyang]  என்ற புராதன நகரில் ஒரு கோவிலில் உள்ளது.

Bodhidharma-Tamil mythologization-books produced

டௌஸ்வான் என்ற சீன சரித்திர ஆசிரியர் கூறுவது: டௌஸ்வான் தொகுத்து வெளியிட்ட, “தொடர்ந்த பிரசித்தி பெற்ற சந்நியாசிகளின் சுயசரிதைகள்” [Continued Biographies of Eminent Monks] என்றதிலிருந்து, போதிதர்மரைப் பற்றி அறிய முடிகின்றது. அத்தகைய விவரங்கள் முன்னமே இருததால், “தொடர்ந்த” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுவதாவது[3]: “போதிதர்மர்: தென்னிந்தியாவிலிருந்து வந்த பிராமணர். அவருடைய ஆன்மீக ஞானம் விஸ்தாரமானது. அவரது (போதனைகளைக்) கேட்டவர், தெளிவு பெற்றனர். மஹாயானபௌத்த முறைகளில் ஆழ்ந்த மனத்துடன் ஈடுபட்டிருந்தார். தியானத்தின் எல்லா முறைகளையு அறிந்து, தெரிந்த வல்லவர். சீனாவைத் தேர்ந்தெடுத்து யோகாசாரத்தை போதித்தார். 479ல் வியூ-சோங் வம்சாவளி காலத்தில் தெற்கு-சைனாவிற்கு வந்தார். பிறகு வடக்கில் உள்ல யூ / வை என்ற வம்சாவளி அரசனிடம் சென்றார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம், ஜென்னை போதித்தார். இவ்விதமாக, நாடு முழுவதும் சென்று அவர் போதித்தார். பலர் அவர் போதித்ததை எதிர்த்தனர், குறை கூறினர். தௌயூ [Daoyu] மற்றும் யூய்கே [Huike] என்ற இருவர் சீடர்கள் ஆகினர்…..அவர் பணி தொடர்ந்தது…………………………..”

Bodhidharma-Tamil mythologization-by Tamil groups

சரித்திரம் எழுதப் படும் முறை: சரித்திரம் [history] என்பது உண்மையில் இப்படித்தான் நடந்தது என்று பாரபட்சமின்றி ஆதாரங்களுடன் எழுதுவது. அது எழுதப் பட்டது, எழுதப் படுவது என்பது இல்லை, ஆனால், உண்மையிலே நடந்தது ஆகும். இகு ஆதாரங்கள் – முதன்மை [primary sources] மற்றும் இரண்டாம் தர [secondary sources] என்று இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. முதன்மை, பிராதான மூலங்கள் நடந்த சம்பவ காலத்தைச் சேர்ந்தவை அல்லது பிறகு குறுகிய ஆண்டுகளில் பதிவு செய்யப் பட்டவை. இரண்டாம் தர ஆதாரங்கள் என்பது, மற்றவர் சொன்னதை, எழுதியை வைத்து எழுதுவது. இங்குதான், பாரபட்சம் போன்றவை நுழைகின்றன. இட்டுக்கதை, கட்டுக் கதை, மாயை [myth] முதலியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உண்டு, இந்தியா, சைனா போன்ற மிகபுராதனமான நாடுகளின் சரித்திரம், தொடர்ந்து வருபவை. அதனால், அவற்றின் தொன்மை சரித்திரத்தை தினம்-தினம் நடந்தது போல எழுத முடியாது. அதனால் எல்லாமே கட்டுக் கதை ஆகிவிடாது, ஏனெனில், அங்கு மாயையே சரித்திரமாக [mythistory] உள்ளது. அதனால், அம்மாயையை நீக்கினால் [demythologization] சரித்திரம் வெளிப்படும். அம்முறை சரித்திரம் எழுதும் முறை [historiography] எனப்படும். அதற்காக, விஞ்ஞான முறையில், மற்ற வர் ஏற்கும்படி, கடைப்பிடிக்கப் படும் முறை, [Historiography methodology] எனப்படும், அதுவும் எந்தவிதமான சித்தாந்தம் [ideology] மூலம் கரைப் படிய / பாதிக்கப் படக் கூடாது.

Bodhidharma-Shaolin temple

பிரச்சாரங்களில் சரித்திரம் ஒதுக்கப் படுவது: தமிழகத்தை, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், இந்த வகை பரிசோதிக்கும் போது தம்மைப் பற்றிய குறிப்பும் கிடையாது இரண்டாவது பருவம் ஏழாம் அறிவு திரைப்படம் பற்றிய கதைகள் தமிழகத்திலும் பல அமைக்கப்பட்டுள்ளது சில குறிப்புகளை வைத்துக்கொண்டு குறிப்பாக காஞ்சிபுரத்திலிருந்து பல்லவர். பிறகு, இணைதளங்களில், பிரச்சார ரீதியில், பதிவுகள், வீடியோக்கள் முதலியன வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுதைய மோடி-லி பிங்க் சந்திப்பிறுகுப் பிறகு, அத்தகைய பிரச்சாரம் அதிகமாகக் கூடும். எல்லாமே தமிழ் என்கின்ற கூட்டங்களும், இதில் சேரக் கூடும், பிரச்சாரம் செய்யக் கூடும்.  எல்லாம் தமிழ்-தமிழ் என்றால், அவர்களுக்கு கண்மூடித் தனமான ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் பொய்கள், கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டாலும், கவலைப் படுவதில்லை. அதாவது, தெரிந்தே அதரவு கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. இவற்றைப் பரப்ப, ஊடகவாதிகளும் தயாராக இருக்கிறார்கள் மற்றும் ஒத்துப் போகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒருவேளை அவர்களுக்கும், இத்தகைய பிரச்சாரங்களினால் பணம், சலுகை, உபசாரம் முதலியவை கிடைக்கின்றன போலும்.

© வேதபிரகாஷ்

17-10-2019

Bodhidharma-Tamil mythologization-travelling by bamboo

[1] Jeffrey Lyle Broughton, The Bodhidharma anthology: The earliest records of Zen. Univ of California Press, 1999.

[2]  Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012, see indtroduction, p.4, 14.

[3]  Ibid, pp.14-17.

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழ் மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [1]

ஒக்ரோபர் 18, 2019

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழ் மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [1]

Date of Buddha 1887-1807 BCE

இந்தியாவில் பௌத்தம் குறைந்தது, சீனாவில் வளர்ந்தது: இந்தியாவில் தோன்றிய பௌத்தம், கால போக்கில், முரண்பட்ட நிலைகளால், அது. பாரதத்தில் கொஞ்சம்-கொஞ்சமாக தேய்ந்து குறைந்தாலும், மற்ற நாடுகளில் வளர ஆரம்பித்தது[1]. பௌத்தத்தின் தொன்மை 1887-1807 BCE வரை செல்கிறது[2], ஆனால், ஆங்கிலேயர் அவரது தேதியை 563-483 BCE, அல்லது 480-400 BCE BCE என்று குறைக்கிறார்கள். கிருத்துவம் பௌத்தத்திலிருந்து பெறப் பட்டது என்ற சித்தாந்தம் இருப்பதால், புத்தரின் தேதியை குறைத்து வருகிறார்கள். பாஹியான், யுவான் சுவாங் போன்றோர், பௌத்த மதத்தின் ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்ல இங்கு வந்து சென்றனர் என்று அவர்கள் அதிகமாகவே எழுதி வைத்தார்கள். சைனாகாரர்கள் அப்படியொன்றும், சோடை போனவர்கள் அல்லர். இதியாவுடனான வியாபார விவகாரங்களுக்கு அதிகமாகவே வந்டு சென்றனர். இந்தியர்களும் சென்றனர். உண்மையில், தென்கிழக்காசிய நாடுகளில், இந்தியாவின் தாக்கம் தான் அதிகமாக இருந்தது. அது, வியாபாரம் மட்டுமல்லாது, எல்லாமும் கலந்து இருந்தது. இல்லை, இந்தியரே, குறிப்பாக பல்லவர்கள் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர். ஆனால், பௌத்தம் அதிகாரத்தில் ஆதிக்கம் வளர, இந்தியரின் தாக்கம் குறைந்தது. சோழர்கள் மறைந்தவுடன், 13ம் நூற்றாண்டு வரை, கடலில் ஆதிக்கம் இல்லாத சைனா, பிறகு கோலோச்ச ஆரம்பித்தது. அத்தகைய உறவுகள் இருவழிகளிலும் இருந்தன.

Bodhidharma-Tamil mythologization-Kambe photo-vaikunda perumal koil

போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை:  போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை. இருக்கின்ற சைன கதைகளிலிருந்து, அவன் 5ம் / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று கருதப் படுகிறது. அவரன் காலத்தைய விவரங்கள் அடங்கிய நூல்கள் இருந்ததாகவும் பிறகு அவை அழிந்து விட்டன அல்லது அதை எல்லாம் ஆதாரபூர்வமான சொல்ல முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இக்கதை தொகுப்புகளிலிருந்து, –

1. பாரசீகத்தில் இருந்து அதாவது மத்திய ஆசியாவிலிருந்து அல்லது 2. இந்திய பகுதியிலிந்து வந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப் படுகிறது. இருப்பினும், சீனாவுக்கு எப்பொழுது எந்த தேதியில் எந்த காலத்தில் வந்தான் என்று, எந்த சரித்திரக் குறிப்பு இல்லை. இருக்கின்ற குறிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒன்று அவன் சீன தேசத்திலிருந்து மேற்கு திசையிலிருந்து, வந்திருக்க வேண்டும் அதாவது மத்திய ஆசியா / பாரசீகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் இல்லை, இரண்டு அவன் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அரசின் வம்சாவளியில் பிறந்த, ஒரு அரசனின், மூன்றாவது மகனாக பிறந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. பல்லவகாலத்தில், ஒரு பிராமண குலத்தில் பிறந்தவன் என்றும் காணப்படுகிறது. இக்குறிப்பு, தமிழர்களின் இப்பொழுதைய கதைகளில் மறைக்கப் படுகின்றது. விகிபீடியாவே மறைப்பது கேவலமாக இருக்கிறது[3], ஏனெனில், ஆங்கிலத்தில் உள்ளதை[4] தமிழில் மறைக்கும் போக்கில் வெளிப்படுகிறது.

Bodhidharma-Tamil mythologization-Kambe photo

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் போதிதர்மனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை[5]: 2011ல் “ஏழாம் அறிவு” என்ற திரைப்படத்தின் மூலம் தான், அவனது கதையை அறியப்பட்டு குறிப்பாக அவன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றதனால், ஆதாரங்களை எல்லாம் இல்லையென்றாலும், அவனை பற்றி இருக்கும் சில குறிப்புகள், பெரிதாக ஊதப்பட்டு ஏதோ பெரிய சரித்திரம் போன்ற குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் ஜனரஞ்சக எந்தவித சரித்திர ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுத ஆரம்பித்துள்ளனர். நேரிடையாக, போதி தர்மனைப் பற்றி பேசாமல், எதையதையோ பேசி, சுற்றி வளைத்து, காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்றான் என்கிறார்கள். சீனக் குறிப்புகளைப் படிக்கும்போதுதான், அவன் சென், சான் அல்லது ஜென் பௌத்த மதத்தை அல்லது அந்த புத்த மதக் கொள்கைகளை சைனாவுக்கு கொண்டுவந்தான் என்றுள்ளது. பிறகு ஜப்பான் வியட்நாம் போன்ற நாடுகளிலும் பரவியது என தெரிகிறது.

Bodhidharma-Tamil mythologization-map

பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்து,  குவாங்சௌ பகுதியில் முத்து நதி கரையில் வந்து இறங்கினான்: சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு படி அவன் இந்தியாவின் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இருக்கும் கடல்வழி  பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்து,  குவாங்சௌ பகுதியில் [முன்னர் canton என அழைக்கப் பட்டது] முத்து நதி கரையில் வந்து இறங்கினான் என தெரிகிறது. அதாவது அவன்  லியூ என்கின்ற சோங் வம்சாவளி [Liu Song Dynasty, 420-479] அல்லது லியாங் வம்சாவளி [the Liang Dynasty, 502-557CE)] காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று பெர்கூசன் [Frgusson] என்ற ஆராய்ச்சியாளர் எடுத்துக் காட்டுகிறார்[6]. அருகில் இருக்கும் குவாங்சௌ மடாலத்தில் அவர் முதன் முதலில் தன்னுடைய போதனை ஆரம்பித்தார் என்றும் அவரால் குறிப்பிடப்படுகிறது[7]. பிறகு, தனது யாத்திரியை வடக்கு திசையில் மேற்கொண்டு, போதிசத்துவர் என்று மதிக்கப் படுகின்ற, அரசராக இருக்கின்ற வூ என்கின்றவனை சந்தித்து உரையாடினார் என்றுஉள்ளது.  இதுவும் ஒரு apocryphal போன்ற கட்டுக்கதை போன்ற குறிப்புகளில் உள்ளது தான் என்று புரிகிறது.

Bodhidharma-Yuwan Swang, Fa-hein

யாங் சுவான்சீ கொடுக்கும் விவரங்கள் – போதிதர்மன் பாரசீகத்திலிருந்து வந்தான்: 17 ஆம் நூற்றாண்டிற் சீனாவில் அரசு செலுத்திய மிங் அரச மரபினரால் அமைக்கப்பட்ட போதி தருமரின் வெண்கல சிலை லுவோயங் (洛陽伽藍記 Luòyáng Qiélánjì) பகுதியில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களின் குறிப்புக்கள் 547 CE ஆம் ஆண்டில் மகாயான பௌத்த ஆக்கங்களைச் சீனமொழிக்கு மொழிபெயர்த்த யுவான் சுவாங் என்பவரால் எழுதப்பட்டவையாகும். அக்காலத்தில் மேற்குப் பகுதியில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரான போதிதருமர் என அறியப்பட்ட ஒரு துறவி இருந்தார். அவர் காட்டு எல்லைகள் வழியாகச் சீனாவை அடைந்தார். கதிரொளியிற் பளிச்சிடும் [யோங்னிங்சி தூபியின்] தங்கத் தட்டுக்களைப் பார்த்தும், அதனூடு செல்லும் ஒளி மேகத்தில் கலப்பது போன்றிருப்பதைக் கண்டும், காற்றில் அசைந்தாடும் மாணிக்கம் பதித்த மணியின் ஓசை வானத்தை அடைவது போன்று இருப்பதைக் கண்டும் அவர் அதன் புகழ் பாடினார். அவர் இப்படி விளித்தார்: “மெய்யாகவே இது ஆவிகளின் வேலை”. அவர் மேலும் கூறினார்: “நான் 150 ஆண்டு வயதானவன். நான் எத்தனையோ நாடுகளைக் கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட நான் போகாத நாடே இல்லை எனக் கூறலாம். தொலை தூரத்திலிருக்கும் இது போன்ற பௌத்த நாடாயினும் சரியே.” அவர் அதனைப் புகழ்ந்தேற்றியதுடன் தன் கரங்களைக் கூப்பி நாட்கணக்காக வைத்திருந்தார். இங்கு குறிப்பிடப்படும் ஆலயமான யோங்னிங்சியில் (永寧寺) உள்ள ஆலயம் அதன் புகழ் ஓங்கி இருந்த காலத்திலேயே லுவோயங்கில் போதி தருமரின் வரவு பற்றி புரௌட்டன் 516 இற்கும் 526 CE இடைப்பட்ட காலத்தினதாகக் குறிப்பிடுகிறார். 526 ஆம் ஆண்டு முதல் யோங்னிங்சி தொடர்ச்சியாக இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளால் தாக்கப்பட்டு அழிவுறத் தொடங்கி, 534 ஆம் ஆண்டு மொத்தமாக அழிந்து விட்டது. அதாவது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாகியது.

Bodhidharma-cave in China

தான்லின் – போதிதர்மன் தென்னிந்தியாவிலிருந்து வந்தான்: இரண்டாவது குறிப்பு தான்லின் (曇林; 506–574 CE) என்பவரால் எழுதப்பட்டது. தான்லின் எழுதிய “தரும போதகரின்” சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்: “தரும போதகர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசரொருவரின் மூன்றாம் மகன். மகாயான வழியிலேயே அவரது குறிக்கோள் இருந்தது. அதனால் அவர் தனது வெண் துகிலை நீக்கிவிட்டு, துறவிகள் அணியும் கருந்துகிலுக்கு மாறினார் […] வேற்று நாடுகளில் மெய்யான போதனை இல்லாமலாவதைக் கண்டு வருந்திய அவர் நெடுந் தொலைவிலுள்ள மலைகளையும் கடல்களையும் கடந்து ஹான் மற்றும் வை ஆகிய இடங்களிற் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு பயணித்தார்.” போதி தருமர் சீடர்களைக் கொண்டிருந்தார் என்னும் தான்லினின் கூற்று, குறிப்பாக அவர் டாஒயூ (道育) மற்றும் ஹூயிக்கே (慧可) என்போரைச் சீடராகக் கொண்டிருந்தார் என்னும் கூற்று இங்கு குறிப்பிடத் தக்கது. மேற்படி இருவருள் பின்னவரான ஹூயிக்கே என்பவர் போதி தருமர் பற்றிய இலக்கிய ஆக்கங்களைப் பின்னர் இயற்றியவராவார். தான்லின் போதி தருமரின் சீடரொருவரென்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் போதி தருமரின் சீடரான ஹூயிக்கேவின் சீடராக இருந்திருப்பதற்கான சாத்தியமே கூடுதலாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2019

Bodhidharma-differs much

[1]  மின்–தமிழ் என்ற இணைதளத்தில், இதைப் பற்றி விவரமாக எழுதி வந்தேன், ஆனால், திடீரென்று அவை மறைந்தன மற்றும்  நானும் தடை செய்யப் பட்டேன். அதனால், அவற்றை மீட்டெடுத்து, தொகுத்து, மறுபடியும் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அப்பதிவுகளை, இங்கு படிக்கலாம்:https://buddhismstudies.wordpress.com/

[2]  இது ரக்கலதாஸ் பானர்ஜியின் அகழ்வாய்வு முடிவுகளை ஒத்திருந்ததால், அவரது அறிக்கை மற்றும் புகைப் படங்கள், ஆங்கில அரசால் மறைக்கப் பட்டன, அச்சில் ஏறவிடால் தடுக்கப் பட்டன. புகைப் படங்களும் மற்ற ஆதாரங்களும் மறைந்து விட்டன.

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

[4] https://en.wikipedia.org/wiki/Bodhidharma

[5] While Bodhidharma is virtually unknown in India,apart from the controversial 2011 film, 7am Arivu, his legacy in China, Japan and Vietnam is very considerable. As mentioned, he is honoured for bringing ‘Chan’ (pronounced ‘Chen’) Buddhism to China, and ‘Zen’ thereafter – by a succession of hands – to Japan, though contemporary scholarship suggests a much earlier introduction of Zen to the East (Red Pine, 1989).

[6] Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012.

[7] By contrast, for Bodhidharma, there are virtually no records, and what we lose by way of fact is made up by a wealth of invention. On the banks of Guangzhou’s Pearl River where Bodhidharma is said to have landed from his long sea voyage on the maritime silk route via Sumatra (in either the Liu Song Dynasty, 420-479, or the Liang Dynasty, 502-557CE), a gateway identifies the spot where he stepped ashore (Ferguson, 2012:25). Similarly, the nearby Hualin Temple in Guangzhou marks the place where Bodhidharma began his teaching.

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

Rakhladas Banerjee and John Msrshall, IVC controversy

புத்தரின் தேதியை குறைப்பது, இந்திய சரித்திர காலத்தைக் குறிப்பது: “அலெக்சாந்தரின் படையெடுப்பிற்கு முன்னர் 326 BCE, இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை,” என்று[1] எதேச்சதிகாரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், மஹாவீரரும், புத்தரும் அவர்களை அடக்கினர். அவர்களது சரித்திர ஆதாரங்களை அழித்து, அவர்களை மறைக்கவே மேனாட்டவர் முயன்றனர். ஆனால், பெரிய சிலைகள், மடாலயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் முதலியவை மறைக்க முடியவில்லை. மேலும், எகிப்திய லக்ஷாரில் இருந்து புத்தர் சிலை அவர்களை அடக்கியது. ஏனெனில், அது புத்தரின் தேதியை 1887-1807 BCEக்கு எடுத்துச் செல்கிறது, அது, புத்தரின் பாரம்பரிய தேதியுடன் ஒத்துப் போகிறது[2]. சந்திர, சூரிய, சந்திர-சூரிய வருடக்கணக்கு பின்பற்றப்பட்ட முறைகளினால், புத்தருடைய தேதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பகாலங்களில் சந்திரமாதக் கணக்கைத்தான் மக்கள் பின்பற்றி வந்தனர். சந்திரனை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அது பூமியை சுற்றி வரும் போது, தேய்பிறை-வளர்பிறை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு, ஆண்டிற்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொண்டனர்.  அந்த 15 நாட்களை “பஞ்சாங்க முறைப்படி[3]” வாரம், திதி[4], கரணம்[5], நட்சத்திரம் மற்றும் யோகம்[6] என்றும் பிரித்துக் கொண்டனர். பௌத்தர்களும் இம்முறையினை உலகம் முழுவதும் பின்பற்றி வந்தனர். இதனால், பௌத்தத்ததின் தொன்மையினை ஏற்றுக் கொண்டால், அத்தகைய காலக்கணக்கீட்டுமுறை, வானவியல் முதலிய ஜானங்களின் தொன்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அது இந்திய வரலாற்றுத் தொன்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், அவர்கள் இதனை எப்படியாவது எதிர்த்து, மறைத்து, காலத்தைக் குறைப்பது என்று முடிவு கொண்டனர்[7].

Dipavamsa, Mahavamsa

தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை உருவாக்கி காலக்கணக்கீட்டை கெடுத்தது: தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை ஆங்கிலேயர் பண்டிதர்களை வைத்து உருவாக்கி, பௌத்தத்தின் தொன்மையினை குறைத்தனர். இதனை, உண்மையான ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்தனர். “இந்தியர்களுக்கு சரித்திர அறிவு இல்லை,” என்ற போது, “ராஜதரங்கனி” அவர்களை மிரட்டியது. அதில் உள்ள ஜைன அசோகன் அவர்களை பயமுருத்தினான். ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே[8]. மகாபாரத தேதியும் திகைக்க வைத்தது. அதாவது, “கட்டுக்கதை, புராணம்” என்பவை எல்லாம் சரித்திரம் ஆனது. இவற்றை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், ஜைன அசோகன் மறைக்கப் பட்டான், அவனது “தேவநாம் பிய திஸ்ஸா” கல்வெட்டுகள், பௌத்த அசோகனுடையது என்று மாற்றி எழுதினார்கள். அதன்படி, அசோகனுடைய காலத்தை 1200 வருடங்கள் குறைத்தனர்.

buddha-at-luxor

புத்தருடைய தேதி, இந்திய சரித்திரத்திற்கு முக்கியமானது: புத்தர் எந்த காலத்தில் இருந்தால் என்ன, நிறைய புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறவர்கள், சரித்திரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். புத்தருடைய தொன்மை, இந்திய சரித்திரத்தின் தொன்மைக்குள்ள ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு படிவுகளின் கீழ், ஒரு பௌத்த சைத்தியத்தை, ரக்லதாஸ் பானர்ஜி கண்டு பிடித்ததை, ஜான் மார்ஷல் மறைத்து, புகைப்படங்களையும் மாயமாக்கி விட்டு, அவருடைய கட்டுரையினையும் வெளியிடாமல் செய்தார்[9]. சில பௌத்த கட்டுமானங்களின் சில ஆடிகள் கீழே 5000 வருட தொன்மையான நாகரிகம் இருந்தத்தை பானர்ஜி கண்டு பிடித்தார். சங்கராச்சார்யா போன்று, புத்த மடாதிபதிகள் தொடர்ந்த போது, அவர்கள் “புத்தர்,” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆதி-தீர்த்தங்கரர், ஆதி-புத்தா போன்ற தத்துவங்கள் ஜைன-பௌத்தங்களில் உள்ளன. “ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் / 1616ம் ஆண்டில் பேரறிவாளன் தோன்றுவான் / புத்தன் தோன்றுவான், என்று மணிமேகலை சொன்னது, என்ன வருடம், என்றால் தெரியவில்லதேன்கிறார்கள். நிச்சயமாக அது மணிமேகலைக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதால், மற்ற காலக்கணக்கீட்டில் வருகின்ற வருடமாகவேண்டும். எப்படியிருந்தாலும் BCEல் தான் வரவேண்டும் என்பதால், அதன் சரித்திர உண்மைநிலயை மறுக்க முடியாது.

Pre-christian Buddhism in Britain - Ireland

பௌத்தமும், மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். உதாரணத்திற்கு, ஏ.ஏ.ஃபூரர் என்பரது வழக்கு திகைப்படைய வைப்பதாக இருக்கிறது[10].  இத்தகைய அந்நியர் எழுதிய சரித்திரத்தை இந்தியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது[11]:

  1. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  2. 2,500 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
  3. 1000 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்

உண்மையில், குழப்புவதற்காகவே, இவ்வாறான தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம், ஏனெனில், முதல் மற்றும் மூன்றாவது தேதிகள் தவறு என்பது பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது, ஆனால், இரண்டாம் தேதி, மேனாட்டவர்ளுக்கு ஒத்துப் போகிறது.

© வேதபிரகாஷ்

30-04-2018

Buddhas skull, China

[1] Referred to as “sheet anchor of Indian history” and denying history before it and mentioning IVC as “Proto-historic,” further historical evidences are also discredited.

[2] R.G.N . Prasad, “The Date of Buddha’s Mahäparinirväna“, Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1986), pp. 77-88. A version of this paper was also read in 1985 at the 7th Conference of the International Association of Buddhist Studies in Bologna.

[3]  வளர்பிறை-தேய்முறை, சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கவனித்து, பதிவு செய்து, கணித்து தயாரிப்பது பஞ்சாங்கம் ஆகும்.

[4] திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன.

[5] ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

[6] சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[2] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

[7] John Bentley, Hindu Astronomy,

[8] http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

[9] Rakhladas Banerjee,

The first round of excavations revealed a Buddhist stupa belonging to the Kusana period (2nd and 3rd centuries). As the area around the stupa was dug up, the archaeological team came upon microliths (tiny flints, part of a bigger tool) and pieces of pottery that did not match anything found earlier. Further excavations revealed a 5,000-year-old civilisation only a few feet below the Buddhist structure. Rakhaldas received a letter from the then director-general of the ASI, H. Hargreaves. The letter came along with a 166-page typewritten document – the article on Mohenjodaro that Rakhaldas had sent Marshall four years ago. The letter read: “Sir John thinks it could be unkind to not let you know that many of your theories are quite untenable and your statements incorrect.” Hargreaves also urged Rakhaldas to get his “report” printed before the book by Marshall was out so “there are no misunderstandings”. The photographs, he informed, had gone missing. The book, Mohenjodaro and the Indus Civilisation, edited by Sir John Marshall was published in 1931. In the foreword, Marshall mentions Rakhaldas’s name as something he “can’t pass over in silence” and says “to him belongs the credit of having discovered if not Mohenjodaro itself, at any rate its high antiquity”.

[10] Alois Anton Führer – Führer had an unusual religious career. He served as a Catholic priest but in 1887 converted to Anglicanism. Following his expulsion from government service in India, Führer made plans to become a Buddhist monk. Quoting the Ceylon Standard, the Journal of the Mahabodhi Society noted: “Much interest has been excited in Buddhist and other circles at the prospect of Dr Führer coming to Ceylon to join the Buddhist priesthood. The Press notices recently made regarding this gentleman have given rise to grave suspicion. We understand that Dr Führer will have an opportunity given him of refuting the charges made against him before he is accepted by the leading Buddhists here as an exponent of the religion of Buddha.” These plans seem to have come to nothing because in 1901 Führer re-converted to the Christian Catholic Church of Switzerland. Führer’s archaeological career ended in disgrace. Under official instructions from the Government of India, Führer was relieved of his positions, his papers seized and his offices inspected by Vincent Arthur Smith on 22 September 1898 Confronted by Smith about his archaeological publications and his report to the Government, Führer was obliged to admit “that every statement in it [the report] was absolutely false.” These activities were presaged by Führer’s publications on Sanskrit texts and law which, as shown by Andrew Huxley, are effectively works of plagiarism, large portions being copied from the writing of Georg Bühler.

[11] வேதபிரகாஷ்,  புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது,

https://buddhismstudies.wordpress.com/2010/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1)

Buddha Purnima 2018

உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: இன்று புத்த பூர்ணிமா, விஷாக-2018 உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. பௌர்ணமி 29-30 மாலை-காலை வரை, விசாகம்-30-04-2018! புத்தர் பிறந்தது [ஜனனம்], ஞானம் பெற்றது [நிர்யாணம்] மற்றும் காலமானது [முக்தி] எல்லாமே விசாகம்-பௌர்ணமி திதியன்று நடந்துள்ளது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 ஶ்ரீலங்கா, கம்போடியா, மியன்மார், பங்களாதேச நாடுகளில் 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் 29-05-2018 அன்று கொண்டாடப் படுகிறது. திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இரண்டு விதமான பாரம்பரியங்களுக்கு ஏற்றமுறையில் அனுஷ்டிக்கப் படுகிறது. புத்தருடைய தேதி சரியாகக் கணக்கிடப் படவில்லை, ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான தேதிகள் உபயோகத்தில் உள்ளன. புத்தருடைய இறந்த தேதி – 544-543 BCE, 487-486 BCE, 368 BCE, 2420 to 290 BCE மற்றும் அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. 1887-1807 BCE என்பது பாரம்பரிய தேதியாக இருக்கிறது, இது வானவியல் கணக்கீடு மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது[1].

Jesus myth - J M Robertson

பௌத்தத்தின் தொன்மையினை மேனாட்டவர் ஏன் மறைத்து, குறைக்க வேண்டும்?: மேனாட்டு, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், புத்தருடைய சரித்திரத்தைப் படித்த போது,– கன்னித்தன்மை பிறப்பு, குடும்பத் துறப்பு, சீடன் காட்டிக் கொடுத்தது-இறப்பிற்கு காரணம் ஆனது, கடவுளை-தேவனை மறுத்தது – என்று பலவிசயங்களில் கிருத்துவத்திற்கும், அதற்கும் பொருந்தி போவதைக் கண்டனர். கிருத்துவத்திற்கு சரித்திர ஆதாரங்களே இல்லாத நிலையில், பௌத்தத்திற்கு உலகில் பலநாடுகளில் ஆதாரங்கள் இருப்பதை கண்டு கொண்டனர். தவிர, பௌத்தத்தின் தொன்மையினால், கிருத்துவமே பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது என்று கூட அவர்கள் தங்களது ஆராய்ச்சிகளில் முடிவுக்கு வந்தனர்.  இதனால், கிருத்துவ சார்புடைய, கிருத்துவ விசுவாசிகளான மற்றும் கிருத்துவப் பாதிரி-ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படியாவது மறுக்க, மறைக்க மற்றும் மறக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். “கிறிஸ்து கட்டுக்கதை” போப்புகளுக்கே, இடைகாலத்திலிருந்து தெரிந்துள்ளது. போப் லியோ, கார்டினல் பெம்போவிடம், “அந்த கிறிஸ்து கட்டுக்கதை என்ன லாபத்தைத்தான் கொடுக்காமல் இருக்கிறது?,” என்ற கேட்டது தெரிந்த விசயமாக இருக்கிறது[2]. மேலும் ஐரோப்பியாவில் ஜே.எம். ராபர்ட்சன் போன்றோர் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து பற்றிய கட்டுக்கதிகள் பற்றி எழுதினார்கள், அப்பொழுது அவையெல்லாம் இந்தியர்களுக்குத் தெரியாது. “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது[3]”ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ–மன்னிப்புக் கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய வாத-விவாதங்களை கிருத்துவர்கள் விரும்பவில்லை.

Nicolas Notovitich- Myth refuted by Swami Vivekananda

நிக்கோலஸ் நோட்டோவிட்ச் விசயத்திலும், நன்றாகவே அசிங்கப் பட்டனர்: திபெத்திய பௌத்தத்தில் பல ரகசியங்கள் இருப்பதாக, ஐரோப்பியர், கிருத்துவர்கள் நினைத்தனர். அதனால், மாறுவேடங்களில் அங்கு சென்று விசயங்களை அறியச் சென்றனர். நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[4]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[5]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[6].

Mahavira and Buddha.looking alike

ஜைனமும், பௌத்தமும்: ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்டஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும். ஆக மகாவீரரும், புத்தரும் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது. இதிலேயே, காலஜ்கணக்கியல் உதைக்கிறது. ஆனால், மேற்கத்தைய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஜைனத்தை தனி மதமாகவே கருதவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்[8]. மெகன்ஸி ஜைன மதத்த்ஐப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிறகு தான் அது பிரபலமாகியது.

Date of Buddha 1887-1807 BCE
புத்தருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளும், தொடரும் ஆராய்ச்சிகளும்: புத்தருடைய தேதியை அறுதியாக நிலைநிறுத்தமுடியாது என்ற எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் பரவியிருந்த பௌத்த நம்பிக்கையாளர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவை, பௌத்தத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இதனால், இன்றும், புத்தருக்கு பல தேதிகள் உள்ளன என்பதனை அறிந்து, அவற்றை கீழ்கண்டவாறு பகுத்துள்ளனர்:

  1. ஶ்ரீலங்காவில் உபயோகப்படுத்தப் படும் நெடிய காலக்கணக்கீடு [Long chronology (Ceylonese)]: 544-543 BCE.
  2. சரிசெய்யப் பட்ட நெடிய காலக்கணக்கீடு [Corrected long chronology]: 487-486 BCE
  3. குறுகிய காலக்கணக்கீடு [Short chronology (Indian chronology)]: 368 BCE.
  4. பாரம்பரியமாக வழக்கில் உள்ள நெடிய காலக்கணக்கீடு [Buddhist tradition (non-scholar)]: ranges from 2420 to 290 BCE.
  5. அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்ட காலக்கணக்கீடு [Succession of the five patriarchs: Five succession of teachers before Ashoka]: என்றுள்ளது.

இந்தியாவிற்கு வராமலேயே, இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள் முதலியவற்றை வரவழைத்து, லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதங்களை ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர், புத்தருக்கு பல தேதிகள் குற்ப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார் – 2422 BCE, 2148, 2139, 2136, 2135 1366, 1332, 1310; 1058, 1036, 1027; all in BCE. இப்பொழுதோ 300 BCEக்கு முறைக்கிறார்கள். இதிலிருந்தே, அவர்களது ஆராய்ச்சி முறைகளில் ஏதோ தவறாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி செய்யும் போது, காலக்கிரய ஆதாரங்கள், முன்னது எது, பின்னது எது என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடுகிறது. அதனால், அதில் எந்த குழப்பமும் இல்லை.

© வேதபிரகாஷ்

30-04-2018

Vajrapani as Heracles or Zeus, second-century-violence

[1] E.Vedavyas, Astronomical Dating of the Mahabharata War, New Delhi, 1986, pp. 223-229.

[2] Pope Leo X (1475-1521) was privy to the truth based on his high rank, when the bishop recounts an alleged exchange between Cardinal Bembo (1470-1547) and Pope Leo X, with the latter supposedly exclaiming, “What profit has not that fable of Christ brought us!”

Encyclopedia Britannica, XXIII, 87. (Emph. added.) See also Walker, 471; Taylor, 35. Bale’s original Latin is as follows: “Quantum nobis nostrisque ea de Christo fabula profuerit, satis est omnibus saeculis notum.” (Roscoe, III, 339.)

[3] Edward J. Thomas, Life of Buddha, 1927, p.2

[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[5] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta, (1987).

[6] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

[7] Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

[8] Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

Annala and antiquities of Rajasthan - TOD

ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு முன்னமே விளக்கப்பட்டது [பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (4) தேதி 17-09-2009]. இனி ராஜபுத்திரர்களின் வளர்ச்சி, பௌத்தத்தைப் பாதித்ததா என்று பார்ப்போம். எப்படி ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் குழப்பம் உள்ளதோ, அது மாதிரி ராஜபுத்திரர்களுக்கும், ஜைனத்திற்கும்; ராஜபுத்திரர்களுக்கும், மார்வாரிகளுக்கும்; ராஜபுத்திரர்களுக்கும் அஹிம்சைக்கும் இடையேயுள்ள குழப்பங்கள் உள்ளன. ஆனானப்பட்ட காலனெல் ஜேம்ஸ் டோட் என்பாருக்கே அத்தகைய முரண்பாடான சிந்தனையிருந்ததை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர் ராஜஸ்தான் மக்களைப் பற்றி ஆய்ந்து விவரமாக எழுதியுள்ளார்.

Col. James Tod, Annals and Antiquities of Rajasthan, (in three volumes), Motilal Banarasidas, New Delhi, 1971 (1920).

ராஜஸ்தானில் உள்ளவர்கள் எல்லாம் ராஜபுத்திரர்களோ, ஜைனர்களோ, அஹிம்ஸாவாதிகளோ அல்லர்; மார்வாரில் வாழும் ராஜஸ்தானியர், அதிலும் ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்களே அஹிம்ஸாவாதிகள்; அதிலும் திகம்பர ஜைனர்கள் மிகக்கட்டுப்பாடுள்ளவர்கள். ஆனால், ராஜபுத்திரர்கள், வீரர்கள், பராக்கிரமசாலிகள், சண்டை-போர் விரும்பிகள். அவர்களுக்கும் அஹிம்சைக்கும் சம்பந்தம் இல்லை. 8-11வது நூற்றாண்டுகளில் வட-இந்தியாவில் ஏற்பட்ட அவர்களது வளர்ச்சி, முகமதியரது படையெடுப்பு காலத்துடன் இணைந்திருப்பதைக் காணலாம். இருப்பினும், முகமதியர்களின் படையெடுப்புகளால்தாம் அவர்கள் வளர்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. மஹாபாரத யுத்தத்திற்கு பிறகு க்ஷத்திரிய வம்சங்கள் பிரிந்தன. ஒரு அரச பரம்பரையிலேயே வித்தியாசங்கள் ஏற்பட்டு தனித்தனி வசங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. சில காரணங்களால் விலக்கப்பட்ட ராஜவசத்தினர்தாம் கிரேக்கர்கள் என்று எட்வர்டு ஈ, போக்கோக், காலனெல் ஜேம்ஸ் டோட் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். கிரேக்கத்தின் மீதான “திகம்பரத்தின் தாக்கம்” முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது.
Edward Pococke, Indian in Greece, Cosmos Publications, New Delhi, 1975.

The Hindu Temple in Bandar Abbas is a historical monument that was constructed in 1892
ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது: ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது சரித்திரம் மூலம் அறியலாம் (7ம்நூற்றாண்டு BCE முதல்). சேதகா (7ம் நூற்றாண்டு BCE), ஸ்ரீநெக் (601-552 BCE), அஜாதசத்ரு (552-518 BCE), நந்த வம்சத்தினர் (4ம் நூ.BCE), சந்திரகுப்த மௌரியன் (320 BCE), சம்பிரதி (220 BCE), காரவேல (174 BCE), முதலிய ராஜாக்கள், பேரரசர்கள் தொடங்கி, வட-இந்தியா மற்றும் தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்தில் ஜைனத்திற்கு அரச-ஆதரவு அதிகமாகவே இருந்தது. விசித்திரமாக, களப்பிரர்களின் ஆட்சி மட்டும், தமிழர்களுக்கு எதிராக இருந்தது. ஆகவே இத்தகைய அரச-ஆதரவு ஜைனத்திற்கு இருந்தது, அதேகாலங்களில் பௌத்தத்திற்கு இல்லை அல்லது குறைந்தது என்பதை நோக்கத்தக்கது.

Temple at Nubia, Sudan, Africa-1

இந்திய–அரசர்களின், இந்துக்கள் ஆதிக்கம் பரவியிருந்தது: முதல் நூற்றாண்டுகளில் மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்திய அரசர்கள்
ஆண்டுவந்திருக்கின்றனர். ஏனெனில், அவர்களின் நாணயங்களில் இந்தியக் கடவுளர்கள்தாம் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, அக்காலத்தில் அந்த பிரதேசங்களில் இருந்த கோவில்கள், கட்டிடங்கள், சிற்பங்கள் முதலியனவும் இந்தியாவின் முத்திரையை/தாக்கத்தை எளிதில் காணலாம். காந்தாரம் / காந்தஹார் முழுமையாக இந்தியர்கள் / இந்துக்கள் வாழ்ந்த பிரதேசம். இங்கிருந்து மற்ற இடங்கள் எல்லாம் மிக அருகாகமைதான்.

* கஜானா / கஜினி 200 மைல்கள்;
* கோர் / கோரி / குர் / குரிஸ்தான் 220;
* நிஷாபூர் / நிஷாபுரி 420;
* பிராமணாபாத் / மன்சூரா 430 (சோநாத்திலிருந்து 300);
* லிங்கா / லிங்கப்புரி 650;
* ஜாமிந்தவர் 50;
* பாமியன் 250 (இங்கிருந்த புத்தசிலைகள்தான் தாலிபன்களால் இடித்து
நொறுக்கப்பட்டது);
* சப்ஸவர் 200;
* ஹரி-ரூத் 250;
* மைநந்த 50;

* ஹிந்துகுஸ் 300 (ஹிந்து = ஜிந்துக்கள், குஸ் = ரத்தம் வருமாறு
அறுத்தல் / கொல்லுதல், ஹிந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட இடம்);

* கர்ஷிஸ்தான் / கரிஜிஸ்தான் (கர்ஜ் = மலை, ஷார் = சக்தி வாய்ந்த தலைவன்,
அதாவது சக்தி வாய்ந்த மலை அரசன் = கிரி-ராஜ);
* காஃபிரிஸ்தான் / ஹிந்துக்கள் வாழும் நாடு;

[பெயர்கள் எல்லாம் எப்படி இந்திய மொழியில் உள்ளது என்பதனை அறியலாம்.       அதுமட்டுமல்லாது, இப்பகுதிகளில் இந்தியர்கள் / ஹிந்துக்கள் / ஹெதன்ஸ் / காஃபிர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்ததாக அவர்களே குறிப்பிடுகின்றனர் (ப. 70)]. இவையெல்லாம் பழைய சரித்திர புத்தகங்களில் பார்க்கலாம். முஹம்மது நாஸிம் சென்ற சரித்திர ஆசிரியர் எழுதிய The Life and times of Sultan Mahmud of
Ghazana, Cambridge at University Press, 1921, புத்தகத்திலும், வரைப்படத்திலும் காணலாம்.

Hittite Empire Period. Bogazkoy, Hat

இப்பகுதிகளை ஆண்ட மன்னர்களின் பெயர்கள்: பல இடங்களின் பெயர்கள் மட்டுமல்லாது, அரசர்களின் பெயர்களும் இவ்வாறு உள்ளன:

* ஜெயபால் (ஹிந்துஸாஹிய்யா வம்சத்தைச் சேர்ந்தவன். ஒரு லட்சம்
வீரர்களுடன் கஜானா வரைச் சென்று முகமதியரை விரட்டியடித்தவன),
* அனந்தபால்
* பிராமணபால்
* பாஜி ரே
* பீம்ராஜா / பீம்தேவா
* பீம்பால்
* திரிலோசனபால்
* சந்திரபால்
* சந்திர ரே
* கந்த ராஜா
* கோபால்வர்மா

* ஜெயபால்
* ஜெய சந்த்
* ஜானகி ராஜா
* கபகன் ராஜா
* மூல்சந்த் ராஜா*
* நந்த ராஜா
* பரூஜ்பால்
* ராஜ்யபால்
* ராம்ராஜா
* வித்யாதரா

 

இவர்கள் எல்லாம் காஷ்மீரத்திலிருந்து மேற்கே காஸ்பியன் கடல் வரை, வடக்கே
கோடானையும் தாண்டியுள்ள பகுதிகளை ஆண்ட ராஜாக்கள். எனவே, இவர்கள் இருந்த வரை, அரேபிரர்கள், பாரஸீகர்கள் முகமதியராக மாறியப் பிறகும் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், பிறகு இந்திய அரசர்கள் தோற்க ஆரம்பித்தனர். கீரத் மற்றும் நூர் ஆறுகளுக்கு இடையேயிருந்த இடம் “மகிழ்ச்சிகரமான பள்ளத்தாக்கு” (Pleasant Valley) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் சிங்கத்தை / சிங்க உருவங்களை வழிபட்டு வந்தனர். அது நரசிம்மர் என்று பல ஆசிரியர்கள் எடுத்துக் காட்டினாலும், இவர் அதை சாக்கிய சிங்கம் எனக்குறிப்பிட்டு, அதனால் அந்த இடத்தில் பௌத்தர்கள் நிறைய வாழ்ந்திருக்கலாம் என்கிறார் (ப.74-75). இதனால், மஹ்மது (8thcent.CE) அங்கு படையெடுத்துச் சென்று அங்குள்ள வரை முகமதியர்களாக்கினான். கர்மதியர், பாதினி மற்றும் முதாஜிலித் முதலிய மக்கள் ரகசியமாக தமது முன்னோர் மதத்தை பின்பற்றுவதை அறிந்து அவர்களை ஒடுக்க பல கொடுமையான முறைகளைக் கையாண்டான். மக்களைப் பிடித்து கழுவிலேற்றினான், கல்லால் அடுத்துக் கொன்றான், விலங்குகளை மாட்டி இழுத்துச் சென்றான்; அவர்கள் வீடுகள் சோதனையிடப் பட்டு அவர்கள் பூஜித்து வந்தவை, புத்தகங்கள் எல்லாம் எரிக்கப்பட்டன; 50 ஒட்டகங்களின் மீது ஏற்றப்பட்ட புத்தகங்களை குவித்து, எறியூட்டி அதில் கர்மதியர் அதில் கழுவேற்றப் பட்டனர் (ப.83, 160).
Muhammad Nasim, The Life and times of Sultan Mahmud of Ghazana, Cambridge at University Press, 1921.

Bogozkoy temple- central citadel

இந்துக்கள் / பௌத்தர்கள் தனிமையில் இருந்தது: ஈராக்-ஈரானின் பெரும்பகுதிகள் 12வது நூற்றாண்டுகள் வரை தனியாக, அமைதியாக இந்திய-மக்கள் (காஃபிர்கள்) வாழ்ந்த்து வந்துள்ளார்கள் எனத்தெரிகிறது (காஃபிரிஸ்தான்). அமைதி விரும்பும் அவர்கள் தமது பாதுகாப்பிற்கு பாதுகாவலர்கள், சேனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. ஏனனில், மஹ்மது கஜானா (11th.cent.CE). அங்கு மலைகளை உடைத்து, பாறைகளை உடைத்து, சாலைகளை போட்டு அங்கடைந்து. மக்களைத் தாக்குவதாக உள்ளது. இங்கு, பௌத்தர்கள், இந்துக்களுடன் சேர்ந்து போராடியதாக தெரியவில்லை. முன்பு, விஹாரங்களில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருந்தவர்கள், இங்கு எப்படி இருந்தனர் என்று தெரியவில்லை. சண்டையிட்டது மற்றும் அத்தகைய வெறிகொண்ட முகமதியரை எதிர்த்து போராடியவர்கள், சிந்து, ராஜஸ்தான், காந்தாரம், பஞ்சாப், காஷ்மீர இந்து அரசர்கள்தாம். ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் வலுவிழுந்த நிலையைக் காணலாம். முகமதியம் வளர்ந்தற்கும், பௌத்தம் தேய்ந்ததற்கும் இங்கு நிச்சயமாக சம்பந்தம் உள்ளதைக் காணலாம். ஆகவே, பௌத்தர்கள் பெருமளவில் முகமதியமதத்தில் இணைந்திருக்க வேண்டும். இங்கு சில கவனத்தை ஈர்க்கும் வகையிலுள்ள விஷயங்களை நோக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind

புத், பூத், புத்து என்றெல்லாம் பௌத்தர்கள் அழைக்கப்பட்டதேன்?: பாரசிகமொழியில் “புத் / பூத்” (but / buth / Budd) என்றால் விக்கிரகம் / சிலை என்று பொருள். ஐரோப்பிய எழுத்தாளர்கள் இதை “புத் / புத்தா” என்றும் பொருள்கொண்டு தவறாக எழுதினர். பிறகு “தேபால்” என்ற வார்த்தை 120 அடி உயரம் மற்றும் அதே அளவு விட்டம் கோபுரம் கொண்ட கட்டிடமாகும் (துக்பது-இ-கிராம், ப.10). ஆனால் எம். ரைனாட் போன்றவர்கள், “தேபால்” என்றால் ஒரு பௌத்த கோவிலை மட்டுமல்லாது, ஒரு பௌத்த ஸ்தூபத்தையும் குறிக்கும்; புத் என்ற வார்த்தை ஃபோத் என்றதிலிருந்து என்பதைவிட ஃபேதௌ என்ற சொல்லிலிருந்து பெறலாம். சைனர்கள் அவ்வாறே அழைக்கின்றனர், என்கிறார். கிலேப்ரோத் என்பவர் “ஃபௌ-ரௌத்” என்றால் இறந்தவர்களின் உடலின் ஒரு பாகத்தைக் கொண்ட (relic), பிரமிட் / சேபல் (Chapel) போன்ற நினவிடங்களைக் குறிக்கும், என்கிறார். (quoting from Hammer-Purgstall, Burnouf, Fergusson).
Elliot and Dowson, The History of India: As told by its own historians, Low-Price Publications, New Delhi, Vol.I, pp.504-505.

Gorri Jo Mandar - Pakistan

சிரமணர்கள் யார் – சிரமணர்களும், பௌத்தர்களும் ஒன்றா?: Sramanas, Sramanes, Sarmanes, Sarmanae, Germanae, Samanaei, Semnoi என்று பலவாறு குறிப்பிட்ட “ஸ்ரமனா” என்ற வார்த்தை பௌத்தர்களைத் தான் குறிப்பிடும் என்கின்றனர் (Ibid, 506, fn.1). முன்பு இதே வார்த்தை ஜைனர்களுக்ககக் குறிப்பிடப் பட்டதை நினைவு கூறலாம். அவ்வாறு பௌத்தர்கள் அதிகமாக இருந்தபோது, அரேபியர்களுக்கு / முகமதியர்களுக்கு எதிராக அவர்கள் போராடியதாக இல்லை. இந்து ராஜாக்கள்தாம் அவர்களை எதிர்த்து போராடியுள்ளனர். ஆகவே, இருந்த பௌத்தர்கள் ஒன்று இஸ்லாமிய கத்திக்கு இரையாகியிருக்க வேண்டும் அல்லது மதம் மாறியிருக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-5

சிரமணர்களும், பிராமணர்களும்: “சிரமணர்கள் / பௌத்தர்கள்” இருந்தது முன்பு குறிப்பிடப்பட்டது. ஆனால், “சிரமணாபாத் / புத்தபாத் / பௌத்தபாத்” என்று இருந்ததாக முகமதியர் சொல்லவில்லை. மேலும் பிராமணர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள், முகமதிய எழுத்தாளர்களில் காணப்படுகின்றன. “பிராமணாபாத்” என்ற ஊர் இருந்தது, அதில் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் இருந்தது, தாஹிர் இறந்தபிறகு, முஹமது காசிமிடம் சென்று பிராமணர்கள் பேசியது (p.184), பிறகு காசிம் அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று குவித்து, பிராமணாபாதை இழித்தது முதலிய விவரங்கள் தாரிக்-இ-தஹிரி என்ற நூல் விளக்குகிறது (pp.259-260). இங்கு இந்துக்கள் வழிபடும் கோவில் “புத் கோவில்” என்றே அழைக்கப்படுகிறது! பௌத்தர்கள் அங்கிருந்தற்கான எதிர்மறை அத்தாட்சிகள் (negative evidences) என்று எல்லியட் மற்றும் டாவ்ஸன் குறிப்பிடுகிறார்கள்:

* புரோகிதம் இருந்தது எங்குமே குறிப்பிடப்படாமை.

* மற்ற சடங்குகள் அவர்களால் செய்யப்பட்டது

* விதவைகள் எரிக்கப்பட்டது

* பூணூல் அனிந்தது, அணிவிக்கப்பட்டது

* சம்பிரதாயங்கள், நோன்புகள், பூஜைகள் செய்தது அல்லது

* மற்ற பிராமணர்களுக்கு என்று அடிப்படையாக உள்ள எந்த சடங்குகள்
நடத்தப்படாமை / பின்பற்றப்படாமை

இவையெல்லாம் இல்லாததால், பௌத்தர்கள் தாம் “பிராமணாபாதில்” இருந்திருக்கவேண்டும் என்று வாதிக்கிறார். வீடு-வீடாக அவர்கள் பாத்திரத்தில் பிச்சையெடுத்தது, பௌத்த சடங்கைத்தான் குறிக்கும் என்றும் வாதிக்கிறார் (ப.506). ஆனால், பிராமணர்கள்தாம் முஹமது காஸிமுடம் பேசுகின்றனர் (ப.182); அப்பொது அவர்கள் சொல்வதாவது, கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு, விக்கிரங்களும் உடைக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் இப்பொழுதெல்லாம் முன்போன்று சடங்குகள், சம்பொரதாயங்களை செய்வதில்லை; வீரர்கள், வியாபாரிகள் முதலியோரும் நிறுத்திவிட்டதால் தாங்கள் ஏழ்மையில் உழல்வதாகவும், அதனால் அவர்களால் வரி கட்ட முடியாது என்கின்றனர் (ப.185); உடனே காஸிம் ஹஜ்ஜாஜ் என்பாரிடம் அனுமதி பெற்று யூதர்கள், கிருத்துவர்கள் போன்று தனது ராஜ்யத்தில் பழையபடியே மதத்தைப் பின்பற்றலாம் (ப.186), ஆனால் அவன் அவர்கள் தமது மதத்தை பின்பற்ற வேண்டுமானால் ஜெஸியா வரி கட்டி வாழலாம் என்று ஆணையிடுகிறான்; இதனால் அவர்கள் தாமிர பாத்திரங்களை எடுத்துக் கொண்டு பிச்சைக் கேட்கிறார்கள்; மேலும் அவ்வரியை சேகரிக்கவும், பிராமணர்களையே நியமிக்கிறான் (ப.184)!

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-2

ஹிந்து–பௌத்த மதங்கள் சேர்ந்தே இருந்தன: ராஜா ஹிந்துவாக இருப்பார், ஆளுனர்கள் பௌத்தர்களாக இருப்பர். பிராமணாபாதின் அரசன் ஒரு பௌத்தனாக இருந்தான். அவனது ஆன்மீக குரு ‘சமனி புதுகுய்’ ஒரு பைத்தவிஹாரத்தை வைத்திருந்தார். ஆனால் இத்தகைய நிலை காசிம் படையெடுத்து வந்தபோது, அவௌகளின் நெருப்பு மற்றும் கத்திகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை. அவர்களது ஜெபமாலைகள் முகமதிய கத்திகளுக்கும் ஈடாகவில்லை. அவர்களது அன்பும் அமைதியும் அவர்களது நெருப்பு மற்றும் கத்திகளின் முன்பு சாய்ந்தன. தேபால், சேஹ்வான், நெரூன், பிராமணாபாத், அலோர், மூல்தான் முதலியவை வீழ்ந்தன. இந்தவிதமாக ஒன்றரை வருடங்களில் அங்கிருந்த ஹிந்து ராஜ்யம் அழிந்து, இருளில் மூழ்கியது.

T. Thakur, Sindhi Culture, University of Bombay, 1959, pp.14-15.

ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் பிறகு
வலுவிழுந்திருக்க வேண்டும். முகமதியம் வளர-வளர, பௌத்தம் தேய்ந்தது, இந்து அரசர்கள் (இப்பொழுதைய) இந்தியாவிற்கு வெளியே போரிட்டது, பிறகு, முகமதியர் அங்கிருந்த இந்து அரசர்களைக் கொன்று அல்லது மதம் மாற்றி முகமதியர்களாக்கிய பிறகு, (இப்பொழுதைய) இந்தியாவிற்குள் நுழைவது கொள்ளை அடிப்பது முதலிய நிகழ்ச்சிகளைக் காணலாம்.

Temple at Nubia, Sudan, Africa-Lion temple

இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா: முஹமதுவிற்கு (570/571-632 CE) மற்றும் இஸ்லாமிற்கு முன்பான அரேபியாவைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் விவரமாகக் கூறுவதில்லை. அரேபியர்கள் இந்தியர்களைப்போலவே விக்கிரங்களை வணங்கிக் கொண்டு, தீர்த்தயாத்திரைகள் செய்துகொண்டு, நாடோடிகளாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதிருஷ்டம் (ஜத்), நல்லகாலம் (சத்), வரம் / தேவை (ரிதா), நட்பு (வத்), உயர்ந்த இடம் / பதவி (மனாஜ்), என்ற ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுளை / தேவதையை வைத்திருந்தனர். எழுதப்பட்ட இலக்கியங்கள் இல்லையென்றாலும், நினைவிலேயே வைத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகள் இருந்தன. ஆனால், அரேபியரிடம் குலச்சிந்தனகளால் அடையாளங்காண முற்படும்போது, பிரிவுகள் ஏற்பட்டபோது தங்களுக்குள் சண்டையிட்டு தனித்து வாழ்ந்தனர். இதனால், தமது அடிப்படை தேவைகளுக்குக்கூட மற்றவர்களை நம்பி வாழவேண்டியிருந்தது. இப்பொழுது போலவே, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அப்பொழுதும் மற்ற மக்களின் மற்றும் பொருட்களின் உதவி இல்லாமல் அவர்களுக்கு சாதாரண வாழ்க்கைக் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. முன்பு இஸ்லாம் என்ற தீவிரமான பிணைப்பினால் அரேபியர்கள் இ ணைக்கப்பட்டு, மற்றவர்களை கொள்ளையிட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். வர்த்தகப் பொருட்களை ஏற்றிச்செல்லும் கூட்டங்களை (caravans) வழி பறிசெய்து, கொள்ளையடித்து, பிணைக்கைதிகளுக்காக பணம் பறித்து, மற்றமக்களை உறிஞ்சியே வாழ்க்கை நடத்தி வந்தனர்.
M. M. Ahariff (Ed.&Trans.), A History of Muslim Philosophy, Vol.1, LPP, New Delhi, 1999, see under chapter.VI, Pre-Islamic Thought, pp.126-135.

“அதேமாதிரி, முகமதியரின் மத்திய ஆசிய படையெடுப்புத் தாக்குதல்களும் பௌத்தர்களின் கலையை முடிவிற்கு எடுத்து வந்தது. கஸ்கர் என்ற பிரதேசத்தின் ராஜா, கிஜில் என்ற இடத்திலுள்ள விஹாரங்களை இடித்தொழித்தான். துருக்மேனிஸ்தானம் தான், எப்படியோ முகமதியரின் தாக்குதலிருந்துத் தப்பித்தது. மங்கோலியர்களின் கொடுமைகள் மற்றும் இஸ்லாத்தின் குரூரங்கள்
பௌத்தம் தாக்குப் பிடிக்கமுடியாமல் மறைந்தது”.

Benjamin Rowland, The Art and architecture of India: Buddhist, Hindu, and Jain, London, Puffin, 1971, p.196.

E. von Grunebaum, Byzantine Iconoclasm and the Influence of the Islamic Environment, History of Religion, 2,  no.1 (1962), pp. 1.

Buddha sculptures resembling Greek-2

உருவவழிபாடு இருந்த மக்களிடம் உருவவழிபாடு எதிர்க்கும் மதம் உருவானது: இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எப்படி உருவ வழிபாடு / விக்கிர ஆராதனை அரேபியா முதல் சிந்து வரை பரந்து-விரிந்து, வெகுஜனமக்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரையிலும் இருந்து வந்தபோது, அத்தகைய மக்களிடையே, எப்படி அப்படியே தலைகீழாக மாறிய அல்லது உள்ள மத-சமூக நம்பிக்கை-சம்பிரதாயங்களுக்கு எதிராக ஒரு புதிய மதம் தோன்றியிருக்கவேண்டும்? முதல் நூற்றாண்டுகளில் எப்படி, உருவவழிபாடு /விக்கிர ஆராதனை வேண்டும் என்று ஹீனயானப்பிரிவு தனியாக செயல்பட்டதோ, அதேபோல அது வேண்டாம் என்ற ரீதியில் முகமதியம் / இஸ்லாம் உருவெடுத்தது நோக்கத்தக்கது. மேலும், அங்கிருந்த விக்கிரங்களின் பெயர்கள் அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்று அழைக்கப் பட்டு அவை “அல்லாவினுடைய மகள்கள் /புத்திரிகள்” என்றே குறிப்பிடப்பட்டன (குரான்). இதைத் தவிர காஃபா / காஃபத்துல்லா (கடவுள் வசிக்கும் இடம்) என்று சொல்லப்படும் இடத்திலேயே சுற்றிலும் 360 விக்கிரங்கள் இருந்ததாகவும் முஹமது அவற்றையெல்லாம் உடைத்தெரிந்து விட்டு, காஃபா-கல்லை மட்டும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாக முகமதிய ஆசிரியர்ளே குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும், அரேபியாவிலிருந்து கிழக்கேயுள்ள நாடுகளில் விக்கிரங்கள் / சிலைகள் 21ம் நூற்றாண்டுகள் வரை இருந்தத்து தெரிய வருகின்றது (பாமியன்
புத்த சிலைகள் உடைக்கப்பட்டன).

Temple at Nubia, Sudan, Africa

பௌத்தர்கள் முகமதியர்களாகியது: 1026ல் முஹ்மதுவின் புகழ் பரவும்போது, கடா-கான், ஈகூர்-கான் முதலிய அரசர்கள் அவனுடன் சம்பந்தம் வைத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால், மஹ்மதுவோ அவர்கள் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுக்கிறான் (ப.36). இந்த இரு பகுதிகள் கடா மற்றும் ஈகூர் சைனாவின் மாகாணங்கள் (ப.16, அடிகுறிப்பு.3). மேலும் முன்பு, இலக்-கான் என்பவன், குரஸானில் 1006ல் நுழையும்போது, அவன் சுக்பால் அல்லது நவாஸா ஷா என்பனுக்கு அரசாக்கத்தை ஒப்புவித்து செல்வதாக உள்ளது (ப.98). நவாஸா ஷா என்றால் ஷாவினுடைய பேரன் (ப.98, அ.கு.1). ஷா என்ற பாரசீக வார்த்தை க்ஷ்த்திரிய என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் (ப.60, அ.கு.4). ஆகவே, இவர்கள் பௌத்தத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள், அரேபிய இனத்தவரல்லாததால், இஸ்லாமியர்களாக இருப்பினும், திருமணம் உறவுகள் வைத்துக் கொள்ளும் வரையில் விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஆகவே, அவர்கள் தங்களது பௌத்த அடையாளங்களை மனதளவிலும் துடைத்துப் போட்டுவிட்டு, தமது புதிய மதமான இஸ்லாத்தின் மீதுள்ள விசுவாசத்தைக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டர்கள் எனத்தெரிகிறது. என்றுமே புதிய மதம்-மாறிகள் அதிகமான வெறியுடன் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் தமது செயலை, அதாவது பழைய மதத்தை விட்டு புதிய மதத்தற்கு சென்றதை, நியாயப்படுத்த வேண்டியுள்ளது, மேலும் புதிய மதத்தினரிடம் நம்பிக்கைப் பெறவேண்டும் என்றால், ஏதாவது பழைய மதத்தினருக்கு எதிராக பெரியதாகச் செய்தால்தான் தமது நிலைப்பாடு வெளிப்படும், அங்கீகரிக்கப்படும் எனும்போது, அவர்களது அழிக்கும் வெறி பழைய மதத்தின்மீது திரும்புகிறது. [மாலிக்காஃபூரை இங்கு நினைக்கத் தக்கது. அவன் இந்துவாக இருந்து
முகமதியனாகிய பிறகு, அவன் இந்து மக்களுக்கு, மதத்திற்கு விரோதமாக செய்த செயல்கள் தமிழ் மக்களே நன்கு அறிவர்].

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-4

இந்துக்கள் ரகசியமாக மத்தைப் பின்பற்றியது குறைந்து, மறைந்தது: இடைக்காலத்தில் (19ம் நூற்றாண்டு வரை), ஐரோப்பிய யாத்திரிகள், இவ்விடங்களில் பிரயாணம் செய்தபோது, முகமதியத்திற்கு-முந்தைய அரேபியா வரை அந்நிலையிருந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். அதே மாதிரி, “பட்டு-யாத்திரிகர்-பாதை” (Silk-route) எனப்படும் இந்திய வடமேற்கு திசை வழியாக, மத்திய ஆசியா மூலம் சீனா வரையிலான இடங்களில் முதலில், இந்து பிறகு பௌத்தத்தின் எச்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது (இன்றளவும் அகழ்வாய்வில் அத்தகைய சிற்பங்கள், உடைந்த நிலையில், மற்ற ஆதாரங்கள் கிடைப்பதும் நோக்கத்தக்கது). இதே நிலைதான் இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானின் அப்பொழுதயை நிலை. இஸ்லாம் தலையெடுத்தபிறகு, இந்துக்கள் ரகசியமாக 20-21வது நூற்றாண்டுகள் வரை அவ்விதமாக வாழ்ந்து அவஸ்தைப் பட்டது, எப்போதாவது, ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் [2009ல், உள்ள சீக்கியர்கள் ஜெஸியா செல்லுத்த வேண்டும் என்று தாலிபான்கள் ஆணையிட்டது ஞாபகம் இருக்கும்].

யுத்த–தர்மத்தைக் கடைபிடிக்காத முகமதியர்: ஏனெனில், முக்கியமாக முகமதியர் பொழுது சாய்ந்தபின்னரும், இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர், பின்பக்கமாக வந்து தாக்கினர் (ப.90),சாதாரண மக்களை துன்புறுத்தினர்; அவர்கள் பொருட்களைக் கொள்ளையிட்டனர்; பெண்களை அபகரித்துச் சென்றனர்; தோற்ற / பிடிக்கப்பட்ட வீரர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்பட்டன (ப.64); இத்தகைய யுத்ததர்ம மீறல்களை இந்தியர்கள் என்றும் பார்த்தது கிடையாது. அவர்கள் இப்பொழுதுமே, காலை சூரியோதயம் முதல், மாலை அஸ்தமனம் வரை யுத்தம்; இரவில் இல்லை; புறமுதுகிட்டு ஓடுபரைத் தாக்குவது கிடையாது; ஆயுதமற்றவர்களைத் தாக்குவது கிடையாது முதலிய விதிகள் முகமதியர் என்றும் பின்பற்றியதில்லை. அமைதியாகத் தனித்தனியாக ஆண்டுவந்த அவர்கள், முகமதியர்கள் தாக்கியபிறகு அத்தகைய முறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட ராஜாக்கள் முகமதியர்களை எதிர்த்து போரிட்டடலும், அவர்களது துரோகம், வஞ்சகம், வெறி, முதலிய செயல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்று துவண்டனர். கப்பம் கட்டி / ஜெஸியா செல்லுத்தி வாழ்ந்தனர். அனால் 712ற்குப் பிறகு, 12-13ம் நூற்றாண்டுகளில், இப்பகுதியே மாறிவிட்டது.

Buddha sculptures resembling Greek-Buddha-Herakles

ராஜபுத்திரர்களின் பலம் குறைந்ததால், ஜைனம் தேய்ந்தது, பௌத்தம் முகமதியத்தில் கரைந்தது: இவ்வாறு, ராஜபுத்திரர்கள் வளர்ந்தது தான், பௌத்தர்கள் வட-நாட்டில் வலுவிழந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி தள்ளப்பட்டு, மத்தியத்தரைகடல்-நாடுகள், மத்திய ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளை அடைந்தனர் எனலாம். முதலில் ஜைனம் இவ்வாறு பரவியது, பின்னர் பௌத்தம் சென்றதும் இவைக்களுக்கு இடையேயுள்ளக் குழப்பங்களைக் காணலாம். அங்குள்ள பௌத்தமத நினைவுச்சின்னங்கள் அதை மெய்ப்பிக்கிறது. மேலும், தெற்கிலும் சைவம்- வைணவம் வளர ஆரம்பித்தது, பௌத்தத்திற்கு ஆதரவாக இல்லை. மேலே குறிப்பிட்டபடி, அரசவம்சத்தினரின் ஆதரவு ராஜஸ்தானத்தில் ஜைனத்திற்கு இருந்ததால், பௌத்தம் அங்கு வளரமுடியாமல் போயிற்று. ஜைனத்தின் அஹிம்சை பௌத்ததை விட மேலானது. ஆகவே, க்ஷ்த்தியர்களின் பாதுகாப்போடு, ஜைனம் வளர்ந்தது. அதாவது குறிப்பாக ராஜபுதனத்தினரின் வளர்ச்சி,

  • முன்னம் கிரேக்கரைத் தடுத்தது;
  • பின்னர் ஹுணர்கள்-சாகர்கள்களைத் தடுத்தது;
  • அரேபியரைத் தடுத்தது;
  • முகமதியம் வளர்ந்த பின்னர் இஸ்லாத்தைத் தடுத்தது

[இவர்களை வென்று அடக்கி-ஒடுக்கியதால் விக்கிரமாதித்யன் சரித்திரத்திலிருந்து மறைக்கப் பட்டான்]; இதனால் ஓரளவு பௌத்தம் காப்பற்றப்பட்டது எனலாம். ஆனால், ராஜபுத்திரர்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் முகமதியர்களின் தாக்குதல்களால் வலுவிழந்தபோது, பௌத்தமும் முகமதியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

Gandhara remains - Pakistan

தீவிர அஹிம்சை தீவிரவாதத்திற்கு இடம் கொடுக்கும்: என்னதான் அஹிம்ஸாவாதியாக இருந்தாலும், தன்னைத் தாக்க வரும் எதிரியிடமிருந்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவன் தனது கையை உயர்த்தாமல் இருப்பான் என்று சொல்லமுடியாது. ஒன்று அடிவாங்கக்கூடிய சக்தி இருக்கவேண்டும். சாத்விக உணவு உண்ணும், அஹிம்ஸாவாதிகள் அவ்வாறு இருபார்களா என்பது சந்தேகமே. இல்லை, அடி தனது மீது விழாமல் இருப்பதற்காவது, கையை உயர்த்த வேண்டியுள்ளது. இரவில் விளக்கு வைத்தால், பூச்சிகள் விழுந்து சாகுமே என்றிருந்த அஹிம்சாவாதிகளும், இருட்டைப் போக்கவேண்டும் என்றபோது, விளக்குகளை வைக்கவே செய்தனர், செய்கின்றனர். ஆகவே, காலத்தின் கட்டாயமாக, பிறகு நிச்சயமாக முகமதியிரிடமிருந்துத் தங்களைக் காத்துக் கொள்ள ராஜபுத்திரர்கள் போராடவே அவசியமாக இருந்தது. மேலும், முகமதிய-ராஜபுத்திர போர்களிடமிருந்து, ராஜபுத்திரர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிகின்றது. எனவே, முகமதியம் மத்தியத்தரைகடல் நாடுகளிடமிருந்து வலுவுடன் பரவ ஆரம்பித்தபோது, நிச்சயமாக பௌத்தர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். பலாத்காரமாக மதம் மாற்றப்பட்ட பௌத்தர்கள், மனோரீதியில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நிலைக்கும் மாறியிருக்கலாம். எப்பொழுதுமே, புதியதாக மதம் மாறியவர்கள், தாம்
புதியாதாக ஏற்றுக்கொண்ட மதத்தினை மிகவும் தீவிரமாகவே ஆதரித்துப்பேசுவர். ஏனெனில், தாம் செய்தது அல்லது தமக்கு செய்யப்பட்டதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

வேதபிரகாஷ்
05-10-2009.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-3

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத–ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

T W Rhys Davids Buddhist scholar

ரைஸ் டேவிட்ஸ் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.

Buddhism and violence

புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக்  கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.

Persecution of the Buddhists in India - Sasanka as per Bana and Zuanzang

சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sasanka

மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sudhanvan

குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத–ரீதியிலான தண்டனை:  கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).

பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- nothing mentioned in Pali texts

பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத–ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).

பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.

 

கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

சகிப்புத்தன்மை – சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- acknowledging John Ware Edgar

ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு  ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

 

வேதபிரகாஷ்
01-10-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப் பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

 

15-05-2017


Design a site like this with WordPress.com
தொடங்கவும்