Posts Tagged ‘மூலங்கள்’

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

மார்ச் 19, 2013

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

Buddhist monk attacked in a train at Central Chennai2

 

உணர்ச்சிப் பூர்வமாக நடந்து வரும் போராட்டங்களும், பிரச்சினைகளும்: தமிழகத்தில் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதாக வீடியோ மற்று புகைப்படங்கள் வெளியானதிலிருந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், இலங்கை-ஈழ விடுதலை இயக்கத்தார் முதலியோர் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்டர்லிங் ரோடில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என்று அவை போராட்டங்கள் காலை நேரங்களில் நடத்தின. ஒரு நாள் பந்த் என்றும் அறிவித்து ஆர்பாட்டம் செய்தனர். இப்பொழுது, புத்த பிக்குகள், குறிப்பாக யாத்திரிகர்கள் தாக்கப்படுவது பிரச்சினையாகியிருக்கிறது.

Buddhist monk attacked in a train at Central Chennai5

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியிலிருந்து 19-03-13 அன்று சென்னை வந்த, புத்த சாமியார்கள் இருவர், மர்ம நபர்களால் தாக்கப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது[1]. ரயில்வே போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடினர்[2]. இலங்கை ஊடகங்கள் எல்.டி.டி.ஈ. அதரவாளர்கள் புத்த பிட்சுகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன[3]. கருணதிலக அமுனுகம என்றறைலங்கை வெளியுறவுத்துறை செயலாளர், இந்தியாவில் பிராயணம் செய்யும் ஶ்ரீலங்கை யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளது[4]. தமிழக அரசும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் என்பவரும் அத்தகைய வேண்டுகோளை விடுத்திருந்தார்[5].கடந்த ஜனவரி மாதம், 2011ல் எழும்பூரில் உள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டது. அதில் நான்கு துறவிகள் தாக்கப்பட்டனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, உள்ளே மற்ற பொருட்களும் உடைக்கப்பட்டன[6].

Buddhist monk attacked in a train at Central Chennai3

குறிப்பாக எஸ்.6ல் நுழைந்து புத்த பிக்குகள் தாக்கப்பட்டது: இலங்கை கண்டியை சேர்ந்த, புத்த சாமியார் பண்டாரா, 40, தலைமையில், 19 பேர், இந்தியாவில் உள்ள புத்தகயாவிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டில்லியிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் “எஸ் 6′ பெட்டியில் ஒன்றாக பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. திடீரென, மூன்று மர்ம நபர்கள், “எஸ் 6′ பெட்டிக்குள் புகுந்தனர். அங்கு காவி உடையிலிருந்த புத்த சாமியார் பண்டாராவையும், அவருக்கு அருகில் சாதாரண உடையிலிருந்த புத்தசாமியார் வங்கீசாவையும் பிடித்து இழுத்து அடித்தனர்[7]. அவர் பயத்தில் அலறியதால், அவருடன் பயணம் செய்ய மற்றவர்கள், அவரருகில் ஓடிவந்து, மர்ம நபர்களை தடுத்தனர்; எதிர்த்து அடிக்கவும் முயன்றனர். பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்களின் தாக்குதலை, பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே போர்ட்டர்கள் பார்த்துவிட்டு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதற்குள்ளாக தகராறில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புத்த சாமியார்கள் இருவர் மற்றும் இவர்களுடன் வந்திருந்த இலங்கையை சேர்ந்த, 17 பேரையும், ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில், 17 பேரை, எழும் பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், வேனில் அனுப்பி வைத்தனர்.

Buddhist monk attacked in a train at Central6

புத்த பிக்குகளிடம் போலீஸ் விசாரணை: புத்த சாமியார்கள் இருவரையும், பாதுகாப்பாக நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ரயில் பெட்டியில் நடந்தது என்ன? தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் ஏதும் தெரிவிக்க முடியுமா?’ எனவும் கேட்டனர். இதற்கு புத்த சாமியார் பண்டாரா, “மூன்று பேர் வந்தனர். இருவர் பேன்ட் சர்ட் அணிந்துஇருந்தனர். ஒருவர் பேன்ட், டி சர்ட் அணிந்திருந்தார். மூன்று பேரும், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியதும், “நீங்கள் இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள், சிங்களர்களே திரும்பி போங்கள்’ என, திட்டினர். அப்போது, எங்களை அவர்கள் தாக்கினர்’ எனவும் கூறினார். தன் முகத்திலும், நெஞ்சிலும், காலிலும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியவர், இடது காலில் இருந்த காயத்தையும், போலீசாரிடம் காட்டினார். பொலீசார் அவர் மிகவும் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக கூறினர். காலின் மீது ஒரு கட்டைப் போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளனர் என்று கூறினர்[8]. தவிர ரூ.40,000/- அடங்கிய பை ஒன்றும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்[9]. காவி உடை அணிந்திருந்த புத்த சாமியாரை, வேறு யாரும் திடீரென தாக்கி விடாமலிருக்க, முன்னெச்சரிக்கையாக, அவரது காவி உடை மீது, சாதாரண உடை அணியுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். விசாரணைக்கு பிறகு, புத்த சாமியார் இருவரும், மற்றொரு வேனில் எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு, போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Buddhist monk attacked in a train at Central Chennai

புத்தசாமியார்களையும், அவர்களுடன்வந்திருந்தவர்களையும்தாக்கிவிட்டு, இரண்டேநிமிடத்தில்அங்கிருந்ததப்பிஓடியுள்ளனர்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் வந்து, ஆறாவது பிளாட்பாரத்தில் நின்றததும், பயணிகள் இறங்கியபோது, திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர், பெட்டியின் உள்ளே நுழைந்து புத்த சாமியார்களையும், அவர்களுடன் வந்திருந்தவர்களையும் தாக்கிவிட்டு, இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர். இதை, தனியார் “டிவி’ நிறுவனத்தின், கேமராமேன் வீடியோவில் பதிவு செய்து உள்ளார். செய்தி நிருபரும் அவருடன் இருந்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் பற்றி இவர்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா என, விசாரிப்பதற்காக, ரயில்வே போலீசார், இவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புத்த சாமியார்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடியோவில், பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளையும் போலீசார் பார்த்தனர்.

Buddhist monk attacked in a train at Central7

மர்ம நபர் தொலைபேசியில் தனியார் டிவிக்கு அவர்கள் வருவதை தொலைபேசி மூலம் அறிவித்தனராம்: இதன்பிறகு, “புத்த சாமியார்களும், இலங்கை நாட்டினரும் ரயிலில் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?’ என, கேட்டதற்கு, “எங்கள் அலுவலக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார். அதனால் தான், நாங்கள் வந்தோம். மர்ம நபர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதுஎன, தெரிவித்தனர். இதன் பிறகு, இருவரையும்போலீசார் அனுப்பிவிட்டனர். தாக்கியவர்கள் ஒரு ட்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று “தி ஹிந்து” பெயர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளது[10]. இப்படி குறிப்பாக ரெயில் பெட்டியில் நுழைவது, இரண்டு நிமிடங்களில் அடித்துவிட்டு மறைவது, ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையாக இருந்து வீடியோ பிடிப்பது எல்லாம், ஒரு குறிப்பிட்ட யிவி-குழுமத்தின் திறமையாகவேத் தெரிகிறது. யதேச்சையாக வீடியோ அவ்வாறு எடுக்க முடியாது. “எஸ் 6” பெட்டிக்குள் தாக்குதல் நடக்கும், அதை படம் பிடிக்கலாம் எனும்போது, போலிஸாருக்கு நிச்சயம் தகவல் அளித்திருக்கலாம், இரந்த முழுநிகழ்ச்சியை அறவே தவித்திருக்கலாம்.

Mahabodhi centre, Chennai Egmore

வேதபிரகாஷ்

19-03-2013


[3] Pro-LTTE Tamils in Tamil Nadu attack another Sri Lankan Buddhist monk, Mon, Mar 18, 2013, 09:40 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

http://www.colombopage.com/archive_13A/Mar18_1363623022CH.php

[4] Karunathilake Amunugama, Lanka’s Ministry of External Affairs’ Secretary said Colombo has lodged a formal request with the Indian authorities in this connection. Sri Lanka’s concerns arose after two successive attacks against Buddhist monks and a group of pilgrims.

http://www.deccanherald.com/content/319782/sri-lanka-calls-indian-protection.html

[5] Tamil Nadu Government took this decision after the Sri Lanka’s Deputy High Commissioner Prasad Kariyawasam made such a request from the state government and the central government.

http://www.dailymirror.lk/news/26850-special-security-for-lankan-pilgrims.html

[6] An incident of stone pelting has been reported from Bodhimaya, the Buddhist centre in the capital city of Tamil Nadu.Four monks were injured in the attack, which took place on Monday night. Window panes were broken and the centre was vandalised in the attack.”What I have been told that 10-15 people came. An auto driver called me…I live in the neighbourhood…I came here immediately. By then the monks were taken to the hospital. I do not know what exactly happened here,” said Kapil Alexander, a local resident.

http://ibnlive.in.com/news/chennai-buddhist-centre-attacked-four-hurt/141438-3.html

[8] The police said the attack on Mr. Bhandara had been quite brutal. “They slapped the monk, hurled abuse at him and hit him on the leg with a blunt object,” an officer said. The monk sustained injuries on his left leg and the group lodged a complaint with the GRP in which they said they had been carrying Rs. 40,000 in cash, which they found missing after the assault.

[10] The Government Railway Police have registered a case and are investigating. They have also intensified checks on all trains. “We suspect that those who indulged in the attack are from a Tamil organisation,” a police officer said.

http://www.thehindu.com/news/national/sri-lankan-monk-attacked-on-train-in-chennai/article4522981.ece

 

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பிப்ரவரி 20, 2010

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire, 1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.