Posts Tagged ‘ஆரியர்’

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

Dhamakiriti arguing with Sankara child

சங்கராச்சார்ய இரண்டாவது பிறவியில், இரண்டாம் முறை தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: அடுத்த வருடம், சங்கராச்சார்ய பட்ட ஆச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். மூன்று வருடங்கள் தந்தையிடமும், இன்னொரு மூன்று வருடங்கள் மற்றவர்களிடமும் கற்று, வாதம் புரிய தேர்ச்சி பெற்றார். இங்கு வருடம் / வருடங்கள் என்றேல்லாம் இருந்தாலும், அவை என்ன ஆண்டுகள் என்று குறிப்பிடப்படவில்லை. ஏழாவது வயதில் தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்தார், ஆனால், முழுவதுமாக தோற்கடிக்கப் பட்டார். தர்மகீர்த்தி தடுத்தும் கேளாமல், சங்கராச்சார்ய கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால், அவரது இளைய சகோதரர் கிழக்கு திசையில் தப்பியோடி விட்டார். 500 பிராமணர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர், 500 பிராமணர்கள் திரிபீடிகத்தை படிக்க ஆரம்பித்தனர்.

Dharmakirti who defetated Sankaracharya for four times, in four births

தர்மகீர்த்தியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது, பல மடாலங்கள் ஏற்படுத்தியது முதலியன: மகதத்தில் பூர்ண மற்றும் மதுராவில் பூர்ணபத்ரா என்ற பிராமணர்கள் இருந்தார்கள். அவர்கள், மிக்க சக்திவான்கள், பணக்காரர்கள் மற்றும் தத்துவ சாஸ்திரங்களில் வல்லவர்கள். சரஸ்வதி மற்றும் விஷ்ணு போன்ற கடவுளர்களது ஆசிகளைப் பெற்றவர்கள். ஆனால், இவர்களும் தர்மகீர்த்தியிடம் வாதமிட்டு தோற்றுப் போயினர். இந்த விதமாக, இவரது புகழ் உலகமெல்லாம் பரவியது. மகதத்திற்கு அருகில் இருந்த மதங்க ரிஷி காட்டில், வாழ்ந்து மந்திரங்களில் சித்தி பெற்றார். அப்பொழுது, விந்தியாசலத்தில், உத்புல்லபுஸ்ப என்பனின் மகனான புஸ்ப என்ற அரசன் ஆண்டு வந்தான். தர்மகீர்த்தி அவனிடத்தில் சென்று, தன்னை தெரிவித்துக் கொண்டபோது, பல மடாலங்களைக் கட்டிக் கொடுத்தான். தர்மகீர்த்தி அங்கு வாழ்ந்து வந்தார். “பிரமாணம்” பற்றி ஏழு நூல்களை இயற்றினார். ஆயிரக்கணக்கில் பிராமணர்களை வென்று, 50 இடங்களில் மடங்களை ஏற்படுத்தினார்[1]. குஜராத் வரை சென்று வெற்றி கொண்டார். கோடாபுரி என்ற கோவிலைக் கட்டினார். இங்கு 80 சித்தர்களின் ஸ்தோத்திரங்கள் படி, தர்மகீர்த்தி வானத்தில் பறந்து சென்று பலரை வென்றார். ஆனால், இவையெல்லாம் நம்பும்படியில்லை[2].

Dhamakiriti arguing with Sankara - boy-16

மூன்றாவது முறையாக சங்கராச்சார்ய மூன்றாவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: இந்நிலையில் சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, வளர்ந்தார். தனது 16 அல்லது 17ம் வயதில் மஹாதேவருடைய தரிசனம் பெற்று, வாரணாசிக்கு வந்து தர்மகீர்த்தியுடன் வாதம் புரிய அரசன் மஹாஸ்யானி என்பவனிடம் அறிவித்தார். அரசன் மணியடித்து, இவ்வாதத்தைப் பற்றி பிரகடனம் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து கூடினர். தெற்கு திசையிலிருந்து, தர்மகீர்த்தி வரவழைக்கப்பட்டார். 5,000 பிராமணர்கள் கூடியிருக்க வாதம் ஆரம்பித்தது. ஆனால், சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியிடம் தோற்றுப் போனார். கங்கையில் குதிக்க தயாரானார், தர்மகீர்த்தி தடுத்தார், ஆனால், ஒப்புக் கொள்ளாமல் குதித்து உயிரை விட்டார். இதனால், பல பிரமாணர்கள் மதம் மாறினர், இவரின் உபாசகர்களாகவும் மாறினர். இதனால், பௌத்தம் பெருகிக் கொண்டே இருந்தது.

Dhamakiriti arguing with Sankara

நான்காவது முறையாக சங்கராச்சார்ய நான்காவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: தர்மகீர்த்தியின் வாழ்நாள் இறுதியில், இதே சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, முன்னர் விட அதிபுத்திசாலியானார். மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆக, இம்முறை 12வது வயதிலேயே, தர்மகீர்த்டியுடன் வாதம் புரிய தயாராகி விட்டார். “முதலில் மற்றவருடன் வாதம் புரிவாயாக, ஏனெனில், தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்து ஜெயிப்பது கடினம் ஆகும்”, என்று சிலர் அறிவுருத்தினர். அதற்கு, சங்கராச்சார்ய, “அவரை வெல்லாமல், உண்மையான புகழ் கிட்டாது”, என்றார். அதேபோல, தெற்கில் இருக்கும் தர்மகீர்த்தியிடம் சென்று, வாதம் புரிந்து தோற்றார். அவரின் சீடரானார். தெற்கில் சங்கரரை பௌத்தத்தை பிராமணர் போலவே இருந்து உபாசிப்பதாக, வழிபடுவதாகச் சொல்லப் படுகிறது[3]. புத்தருக்காக சங்கராச்சார்ய கட்டி கோவிலும் அங்கிருக்கிறது.

Dharmakirti - duality and advaita

தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதும்: இந்த தர்மகீர்த்தி-சங்கராச்சார்ய வாத-மோத கதைகளில் மூன்று முறை தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதாகவும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதாகவும் உள்ளது. நான்காவது முறைதான், இருவருமே தெற்கிலேயே வாதித்தாக குறிப்பிடப் படுகிறது. மூன்று முறை தோற்று, கங்கையில் உயிரைவிட்ட சங்கராச்சார்ய, நான்காவது முறை தோற்றபோது, அவரின் சீடராகிறார்! ஆக, இந்த தெற்கு-வடக்கு திசைகள் பௌத்தர்களை, திபெத்திய பௌத்தர்களை, ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. தர்மகீர்த்தியே, தெற்கில் பிரமாணராகப் பிறந்து, குமாரில பாட்டரின் மறுமகனாக இருந்து, பிராமண உடையை எடுத்துக் கொண்டபோது, குமாரில பட்டர் திட்டியதால், பௌத்தராக மாறினார் என்று கதைகள் சொல்கின்றன. நாலந்தாவில் போத்தித்து வந்த இவர், திபெத்தில் பிரபலமாக இருந்தார். இவரது காலம் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகள், சுமார் 600–660 CE, என்றெல்லாம் குறிக்கப்படுகின்றன[4].  கிடைத்துள்ள நூல்களில் காணப்படும் தத்துவம், தத்து விளக்கம், மறுப்பு-எதிர்ப்பு-ஆதரிப்பு போன்ற காரணிகளை வைத்துக் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளார்கள். எப்படியிருந்தாலும், இவர்கள் தர்மகீர்த்தியின் காலத்தை 500-660ற்குள் வைப்பதால்[5], நிச்சயமாக, இவர் ஆதிசங்கரர் காலத்தில் இருக்கவில்லை என்று உறுதியாகிறது. அப்படியென்றால், அது கட்டுக்கதை என்றாகிறது. அதாவது, பௌத்தர்கள் எழுதிவைத்த சர்ச்சைக்குள்ள, சரித்திரம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளின் [polemical and controversial writings, legends and myths]  ஆதாரமாக வைத்து புனையப் பட்ட இன்னொரு கதை என்றாகிறது.

Foundations - Dharmakirtis arguments

மெத்தப்படித்த தர்மகீர்த்தி சிறுவர்களிடம் ஏன் தர்க்கம் /வாதம் புரிய வேண்டும்?: தர்மகீர்த்தியின் வயது இதுதான் என்று குறிப்பிடப்படவில்லை. மேலே குறிப்பிட்டபடி, ஆராய்ச்சியாளர்கள் அவர் 50-70 வருடங்கள் வாழ்ந்ததாக தோரயமாக கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார்கள்.  தர்மகீர்த்தி சங்கராச்சாரியரோடு பிரிந்த வாதங்கள் விவரங்களில் கீழ்கண்டவைப் பெறப்படுகின்றன. சங்கராச்சார்ய நான்கு முறை பிறந்து, மூன்று முறை இறந்து, மறுபிறப்பு எடுத்து, நான்கு முறை வாதம் புரிந்துள்ளார்:

தர்மகீர்த்தியின் வாதங்கள் சங்கராச்சார்யரின் வயது தோற்றப் பிறகு சங்கரச்சார்யரின் நிலை

முதல் வாதம்

குறிப்பிடப்படவில்லை கங்கையில் குதித்து இறப்பு
இரண்டாம் வாதம்

7

கங்கையில் குதித்து இறப்பு
மூன்றாம் வாதம்

16-17

கங்கையில் குதித்து இறப்பு
நான்காம் வாதம் 12

தர்மகீர்த்தியின் சீடரானார்.

ஆக, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு வருடம் இடைவெளி விட்டு, இவரது காலத்தை கணக்கிட வேண்டுமென்றால், 1 + 7 + 1 + 16 + 1 + 12 = 38 வருடங்கள் வருகின்றன. அதாவது, 38 ஆண்டுகளில் ஒரே ஆளுடன் நான்கு முறை வாதிட்டிருக்கிறார். முதல் தடவை, இவர் வாதிடும் போது, இவரது வயது 50 என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு கடையாக வாதிடும் போது 88 வயதாகியிருக்க வேண்டும். அப்படியென்றால், 50, 67, 75 மற்றும் 88 வயதுகளில் வாதிட்டபோது, 7, 16-17 மற்றும் 12 வயது சிறு பையன்களிடம் தான் வாதித்துள்ளார். வயதான தேர்ந்த, சிறந்த தர்க்கம் புரிய யாரும் இல்லாமலா போய்விட்டனர்? நிச்சயமாக தர்க்கத்தில் யார்-யாருடம் தர்க்கம் புரியலாம் என்ற நியதியெல்லாம் இருக்கிறது. சிறுவர்களுடம் / சிறுவர்கள் தர்க்கம் புரியலாம் என்றால், அக்காலத்தில் அத்தகைய நிலை என்ன, ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்றும் ஆராய வேண்டியுள்ளது. போதாகுறைக்கு, அக்குழந்தைகளை கங்கையில் குதித்து இறந்துள்ளனர். அப்படியென்றால், அந்த சிறுபையன்களின் தைரியம், அறிவு, பல்லாயிரம் கி.மீ நடந்து வாரணாசிக்கு வந்தது முதலியவை பிரமிப்படைய வைப்பதாக இருக்கிறது. பௌத்தர்கள் ஏன் அப்படி, சிறு பிள்ளை வென்றதாக கதைகள் எழுதி வைக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti national musueum

[1] He established about fifty48 centres for the Doctrine. From there he went to the border-Iand49 *Gujiratha. He

converted many brahmarJa-s and tirthika-s into the Law of the Buddha. He built a temple called *Gotapuri. 235

[2] What is now current as the stotra of the eighty siddha-s cannot be considered reliable. Still it is clear that the account of his flying through the’ sky after defeating his opponents etc is based on this. 235.

[3] Towards the end of his life the same *Sal11karacarya was born again as the son of *BhaHa * Adirya the second54 and in intelligence became stronger than before. His god (Mabadeva) appeared before him in person and gave him lessons. Sometimes he (Mahadeva) even merged into his body and taught him some hitherto unknown arguments. At the age of twelve, he wanted to enter into a debate with Sri Dlnrmakirti. The . brahmary,a-s told him, ‘It is better for the time being to debate with others, whom you are sure to defeat. But it is hard to defeat Dharmakirti.’ He said, ‘Without defeating him there can be no real fame in debate.’ Saying this, he went to the south and started debate with

this agreement that the defeated one had to accept the other’s creed. Sri Dharmakirti became victorious and  converted him into a follower of the Law of the Buddha. It is said that in the south, he (Sa11lkara) used to worship

the Law of the Buddha as a brahmaIJa [Fol 93A] following the practices of an upasaka. The temple built55 by him still exists. 236-237

[4] Balcerowicz, Piotr. On the Relative Chronology of Dharmakīrti and SamantabhadraJournal of Indian Philosophy 44.3 (2016): 437-483.

[5]

Author Period assined approximately

Relying upon evidence, argument etc

Pathak, K. B Various dates . “Dharmakirti and Sankaracharya.” Journal of Royal Asiatic Society 18.

 

Lindtner 530-600 CE partly on the basis of the problematic dating of the Madhyamaka-ratna-pradīpa and its attribution to Bha¯viveka, etc.)
Kimura 550-620 CE

mainly on the basis of circumstantial evidence of Chinese sources, attempted to push Dharmakı¯rti’s date back to 550–620.

Erich Frauwallner 600-660 CE

rest primarily on the juxtaposition of the travelogues of two Chinese

pilgrims who visited Na¯landa¯ university where Dharmakı¯rti is known to have taught.    Xuanzang (602–664), who visited Na¯landa¯ during his travel to India between 629–641, apparently99 was completely silent on Dharmakı ¯rti, even though he did mention the names of some renowned Buddhist thinkers teaching at Na¯landa¯ 1961

650-700 CE

On the other hand Yijing (635–713) travelled to Na¯landa¯ during his trip to India between 673–685 and included Dharmakı¯rti’s name among the prominent teachers of the university.

P Balcerowicz 550-610

As contemporary of Samantabhadra 530–590 and Pu¯jyapa¯da Devanandin 540–600

 

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

மார்ச் 16, 2013

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

Buddhist attacked Tanjore temple

பௌத்தம் – நாத்திகம் – திராவிடர் கூட்டு என்னவாயிற்று?: பௌத்தமத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி வந்ததை, வருவதை பார்த்துள்ளோம்[1]. இந்துமத விரோதிகள் அவ்வப்போது, இந்த வாதங்களை எடுத்துக் கொள்வர். பௌத்தர்கள் திராவிடர்களே என்று கூட நாத்திகவாதிகள் வாதிட்டுள்ளனர். இங்கு பௌத்தர்கள், நாத்திகர்கள் என்று சேர்ந்து இருக்கும் போது, இலங்கையில் மட்டும் எப்படி பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் என்று பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். இது “திராவிடர்கள்” ஒட்டு மொத்தமாக காவிரி மற்றும் முல்லைப்பெரியார் நீர்களுக்கு அடித்துக் கொள்வதைப் போன்றுள்ளது[2]. பௌத்தமே அஹிம்சைவாதிகளா இல்லை ஹிம்சையிலும் ஈடுபட்டனரா, இந்தியாவில் பௌத்தம் எப்படி தேய்ந்தது என்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துக் காட்டியுள்ளேன்[3]. இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் தாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Buddhist attacked Tanjore temple2

தமிழ் இயக்கத்தினர் ஏன் தாக்கினர்?: தஞ்சாவூருக்கு இன்று காலை இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக வந்தனர். இவ்வாறு வருவது சகஜமான விஷயம் தான். இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.ஈது தவிர மாநாடு, கருத்தரங்கம் என்று பலர் பற்பல நாடுகளுக்குச் செல்கின்றனர், செல்லும் போது, அங்குள்ள இடங்களைப் பார்த்து வருகின்றனர். இருப்பினும், வந்திருந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு இருந்ததால், அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின[4] என்பது வித்தியாசமாக உள்ளது. இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாராம்[5]. தமிழ்தேச பொதுவுடமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் முதலியோர் அடங்குவர் அப்போது அங்கு கோவில் வளாகத்தில் நின்ற புத்த பிட்சுகளை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் சில புத்த பிட்சுகளுக்கு அடி விழுந்தது. ரத்த காயமும் ஏற்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் சொல்கின்றன.

Buddhist attacked Tanjore temple5

 

புத்தபிக்கு தாக்கப்படும் இன்னொரு காட்சி

Lankan monk attacked Tanjore

ஆராய்ச்சி-சுற்றுலா வருபவர்களைத் தாக்கலாமா?: ஆராய்ச்சி நிமித்தம் வருகின்ற பௌத்தர்களை இப்படி அடிக்கலாமா? இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்றும் தெரிய வருகிறது[6]. இந்தியத் தொல்லியல் துறையில் [ASI] ஒன்றரை வருட டிப்ளோமா படித்து வருகின்றார்.  தில்லியில் இருக்கிறார் எனும் போது, தில்லியில் எப்படி இத்தனை காலம் விட்டு வைத்தனர்? இவரைப்போல இன்னும் ஆயிரக்கணக்கன இலங்கை மற்றும் பௌத்த துறவிகள், மாணவர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் இவர்கள் இப்படி தாக்குவார்களா? திருமாவளவன் போன்றோர் தில்லியில் பலமுறை சென்று ஆர்பாட்டம் செய்துள்ளனர். அப்பொழுது, இத்தகைய இலங்கை பௌத்தர்களை அடித்து விரட்டலாமே?

Buddhist-monk-is-attacked-in-Tamil-Nadu

தொல்லியல் துறை அலுவலகத்தில் நுழைந்த பின்னரும் அடிக்க வந்த மாணவர்கள்: உண்மையில் அந்த பிக்கு ஊட-ஓட விரட்டி அடிக்கப்பட்டார். கூட வந்திருந்த மாணவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதலுக்கு பயந்து இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றார்கள். அப்பொழுது, கதவுகள் சாத்தப்பட்டன[7]. அதற்குள் வந்த போலீசார், போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர். இந்த தாக்குதலால் தஞ்சை பெரிய கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Buddhist attacked Tanjore temple4

திருச்சியிலும் தாக்கப்பட்டது ஏன்?: இந்நிலையில், அவர் பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த வேன் மீது கல் வீசித் தாக்கினர். இதில் வேனின் இருபக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. பின்னர் போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்பாக அவர்களை மீட்டு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ASI office Tanjore

பௌத்தர்கள்அஹிம்சாவாதிகளாஜிம்சைகாரர்களா?: தொடர்ந்து பௌத்தர்கள், பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்படுவது சரியா என்று சிந்திக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2012ல் கூட தஞ்சைக்கு வந்த பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்பட்டனர்[8]. இலங்கைப் பிரத மந்திரி வந்து அகில உலக பௌத்த மாநாட்டைத் துவக்கி வைத்தபோதும், பலர் இந்தியாவிற்கு வந்தனர். பிறகு கால்பந்து குழுவும் விரட்டப்பட்டது[9].  பௌத்தர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் தாக்கப்படுகின்றனரா அல்லது அஹிம்சை விடுத்து இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தியதால் தாக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. பௌத்தர்கள் புத்தர் போதித்தபடி அஹிம்சைவாதிகள். ஆகவே அவர்கள் எப்படி கொடுமைக்காரர்களாக இருப்பர்? இலங்கையினையோ, இலங்கை மக்களையோ, பௌத்தத்தையோ ஒரு சின்னம் போல, அடையாளம் காணப்பட்டு, தமிழர்கள் தாக்கத் தொடங்கினால், நாளைக்கு, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் தாக்கப்படுமா? அம்பேத்கரும் தாக்கப்படுவாரா?

Youngster fight in front of ASI office Tanjore

வேதபிரகாஷ்

16-03-2013


[1] பௌத்தர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், அம்பேத்கரைட்டுகள், முஸ்லீம்கள்………என பற்பல முகமூடிகளில் மறைந்து கொண்டு பேசியுள்ளனர்-எழுதியுள்ளனர்,

[2] திராவிட மொழிகள் பேசுபவர்கள், தென்னிந்திர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றால், ஏன் அவர்கள் இப்படி சண்டை போட வேண்டும், பிரிந்து கிடக்க வேண்டும்? ஒரே இனத்தவர் இப்படி இருக்கலாமா – தவறு கால்டுவெல் சித்தாந்தத்திலா, திராவிட மாயையிலா?

[3] பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் என்ற தலைப்பில் பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

https://groups.google.com/forum/#!msg/mintamil/hjXk8ncjZ48/epbrVjgxI4IJ

https://groups.google.com/forum/?hl=es&fromgroups=#!topic/mintamil/nLy0jFIvdIY

https://groups.google.com/forum/?hl=da&fromgroups=#!topic/mintamil/y76uHIRzuc8

[5] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece

[6] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece