Posts Tagged ‘திக’

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

மார்ச் 16, 2013

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

Buddhist attacked Tanjore temple

பௌத்தம் – நாத்திகம் – திராவிடர் கூட்டு என்னவாயிற்று?: பௌத்தமத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி வந்ததை, வருவதை பார்த்துள்ளோம்[1]. இந்துமத விரோதிகள் அவ்வப்போது, இந்த வாதங்களை எடுத்துக் கொள்வர். பௌத்தர்கள் திராவிடர்களே என்று கூட நாத்திகவாதிகள் வாதிட்டுள்ளனர். இங்கு பௌத்தர்கள், நாத்திகர்கள் என்று சேர்ந்து இருக்கும் போது, இலங்கையில் மட்டும் எப்படி பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் என்று பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். இது “திராவிடர்கள்” ஒட்டு மொத்தமாக காவிரி மற்றும் முல்லைப்பெரியார் நீர்களுக்கு அடித்துக் கொள்வதைப் போன்றுள்ளது[2]. பௌத்தமே அஹிம்சைவாதிகளா இல்லை ஹிம்சையிலும் ஈடுபட்டனரா, இந்தியாவில் பௌத்தம் எப்படி தேய்ந்தது என்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துக் காட்டியுள்ளேன்[3]. இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் தாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Buddhist attacked Tanjore temple2

தமிழ் இயக்கத்தினர் ஏன் தாக்கினர்?: தஞ்சாவூருக்கு இன்று காலை இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக வந்தனர். இவ்வாறு வருவது சகஜமான விஷயம் தான். இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.ஈது தவிர மாநாடு, கருத்தரங்கம் என்று பலர் பற்பல நாடுகளுக்குச் செல்கின்றனர், செல்லும் போது, அங்குள்ள இடங்களைப் பார்த்து வருகின்றனர். இருப்பினும், வந்திருந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு இருந்ததால், அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின[4] என்பது வித்தியாசமாக உள்ளது. இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாராம்[5]. தமிழ்தேச பொதுவுடமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் முதலியோர் அடங்குவர் அப்போது அங்கு கோவில் வளாகத்தில் நின்ற புத்த பிட்சுகளை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் சில புத்த பிட்சுகளுக்கு அடி விழுந்தது. ரத்த காயமும் ஏற்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் சொல்கின்றன.

Buddhist attacked Tanjore temple5

 

புத்தபிக்கு தாக்கப்படும் இன்னொரு காட்சி

Lankan monk attacked Tanjore

ஆராய்ச்சி-சுற்றுலா வருபவர்களைத் தாக்கலாமா?: ஆராய்ச்சி நிமித்தம் வருகின்ற பௌத்தர்களை இப்படி அடிக்கலாமா? இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்றும் தெரிய வருகிறது[6]. இந்தியத் தொல்லியல் துறையில் [ASI] ஒன்றரை வருட டிப்ளோமா படித்து வருகின்றார்.  தில்லியில் இருக்கிறார் எனும் போது, தில்லியில் எப்படி இத்தனை காலம் விட்டு வைத்தனர்? இவரைப்போல இன்னும் ஆயிரக்கணக்கன இலங்கை மற்றும் பௌத்த துறவிகள், மாணவர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் இவர்கள் இப்படி தாக்குவார்களா? திருமாவளவன் போன்றோர் தில்லியில் பலமுறை சென்று ஆர்பாட்டம் செய்துள்ளனர். அப்பொழுது, இத்தகைய இலங்கை பௌத்தர்களை அடித்து விரட்டலாமே?

Buddhist-monk-is-attacked-in-Tamil-Nadu

தொல்லியல் துறை அலுவலகத்தில் நுழைந்த பின்னரும் அடிக்க வந்த மாணவர்கள்: உண்மையில் அந்த பிக்கு ஊட-ஓட விரட்டி அடிக்கப்பட்டார். கூட வந்திருந்த மாணவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதலுக்கு பயந்து இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றார்கள். அப்பொழுது, கதவுகள் சாத்தப்பட்டன[7]. அதற்குள் வந்த போலீசார், போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர். இந்த தாக்குதலால் தஞ்சை பெரிய கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Buddhist attacked Tanjore temple4

திருச்சியிலும் தாக்கப்பட்டது ஏன்?: இந்நிலையில், அவர் பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த வேன் மீது கல் வீசித் தாக்கினர். இதில் வேனின் இருபக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. பின்னர் போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்பாக அவர்களை மீட்டு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ASI office Tanjore

பௌத்தர்கள்அஹிம்சாவாதிகளாஜிம்சைகாரர்களா?: தொடர்ந்து பௌத்தர்கள், பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்படுவது சரியா என்று சிந்திக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2012ல் கூட தஞ்சைக்கு வந்த பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்பட்டனர்[8]. இலங்கைப் பிரத மந்திரி வந்து அகில உலக பௌத்த மாநாட்டைத் துவக்கி வைத்தபோதும், பலர் இந்தியாவிற்கு வந்தனர். பிறகு கால்பந்து குழுவும் விரட்டப்பட்டது[9].  பௌத்தர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் தாக்கப்படுகின்றனரா அல்லது அஹிம்சை விடுத்து இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தியதால் தாக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. பௌத்தர்கள் புத்தர் போதித்தபடி அஹிம்சைவாதிகள். ஆகவே அவர்கள் எப்படி கொடுமைக்காரர்களாக இருப்பர்? இலங்கையினையோ, இலங்கை மக்களையோ, பௌத்தத்தையோ ஒரு சின்னம் போல, அடையாளம் காணப்பட்டு, தமிழர்கள் தாக்கத் தொடங்கினால், நாளைக்கு, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் தாக்கப்படுமா? அம்பேத்கரும் தாக்கப்படுவாரா?

Youngster fight in front of ASI office Tanjore

வேதபிரகாஷ்

16-03-2013


[1] பௌத்தர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், அம்பேத்கரைட்டுகள், முஸ்லீம்கள்………என பற்பல முகமூடிகளில் மறைந்து கொண்டு பேசியுள்ளனர்-எழுதியுள்ளனர்,

[2] திராவிட மொழிகள் பேசுபவர்கள், தென்னிந்திர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றால், ஏன் அவர்கள் இப்படி சண்டை போட வேண்டும், பிரிந்து கிடக்க வேண்டும்? ஒரே இனத்தவர் இப்படி இருக்கலாமா – தவறு கால்டுவெல் சித்தாந்தத்திலா, திராவிட மாயையிலா?

[3] பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் என்ற தலைப்பில் பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

https://groups.google.com/forum/#!msg/mintamil/hjXk8ncjZ48/epbrVjgxI4IJ

https://groups.google.com/forum/?hl=es&fromgroups=#!topic/mintamil/nLy0jFIvdIY

https://groups.google.com/forum/?hl=da&fromgroups=#!topic/mintamil/y76uHIRzuc8

[5] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece

[6] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece