Posts Tagged ‘விஹாரம்’

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

தென்னிந்தியாவில் ஜைனம்பௌத்தம் குறைந்து வைணவம்சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஜைனபௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.

2013ல்தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:

  • கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
  • தெற்கு : கண்ணனின் உருவம்
  • மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
  • வடக்கு :கிருஷ்ண அவதாரம்

இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.

2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது.  பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள்  எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை  வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை  மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில்  அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.

[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

[3]  பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.

[4]  இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.

[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52

[6] https://m.dinamalar.com/detail.php?id=720040

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (3)

வேதபிரகாஷ்

 “ஆரம்ப காலங்களில் புத்தரை மையமாக வைத்துக் கொண்டு சந்நியாசிகளாக அலைந்து திரிந்த பிக்குகள், எவ்வாறு அவர்கள் ஒன்றுகூடி, ஆசிரமங்கள் அல்லது ஒரு இடத்தில் தங்கி வசிக்கும் நிலையில் மடங்கள் / பள்ளிகள் உருவாக்கி வாழ ஆரம்பித்தனர், இதுதானே பிறகு இஸ்லாமின் முதல் ஆண்டுகளில், முஸ்லீம் படையெடுப்புகளினால் அழிக்கப்பட்டு, இந்தியாவிலேயே பௌத்தத்திற்கு ஒரு நாசத்தைத் தேடித்தந்தது? இந்த வினாவிற்குத்தான் பாட்ரிக் ஓலிவெல் (Patrick  Polivelle) இந்த புத்தகத்தில் பதில் அளிக்கிறார்”, என்று ஆர். சி. ஜாஹ்னர் (R. C. Zaehner) என்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் “பௌத்த மடங்கள் அமைப்பின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி” என்ற நூலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
R. C. Zaehner in his FOREWORD to “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.v.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-5

“அத்தகைய அலைந்து திரியும் வாழ்க்கை மழைகாலத்தில் முடியாது, ஆகையால் அத்தகைய சந்நியாசத்தை முறித்துக் கொள்வர் என்று எந்த தேரவாத பௌத்தத்தின் மாணவனுக்கும் தெரியும். ஆனால் அதுவே பிறகு எப்படி மடங்கள் / மடாலங்கள் ஒருவாகி அத்தகைய தங்கி வசிக்கும் வாழ்க்கையினை (Sedentary interlude) சந்நியாசிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, அத்தகைய “மடங்கள் / பள்ளிகளின் கலாச்சாரம்” உருவெடுத்தது” என்று பாட்ரிக் ஓலிவெல் விளக்குகிறார்.

“பரிவிராஜக” [பரி = சுற்று; வ்ராஜ = செல், திரி (சமஸ்கிருதம்); எல்லா திசைகளிலிலும் அலைந்து திரிந்து வாழும் சந்நியாசி] முறையானது முற்றும் துறந்த நிலையினைக் காட்டுகிறது. புத்தர் காட்டிய வழி அதுதான். ஆனால் நவீனகாலத்தில் அதன் அர்த்தத்தை / பொருளைத் தவறாக கொள்கின்றனர். உதாரணத்திற்கு அம்பேத்கரே, “புத்தர் ஒரு இறந்த மனிதன், நோயாளி மற்றும் ஒரு வயதானவன் முதலியோரைக் கண்டவுடன் “பரிவிராஜக”த்தை ஏற்றுக் கொண்டார் என்பது, அது அபத்தம் என்று பார்க்கும் போதே தெரிகிறது” என்று குறிப்பிடுகின்றார் (That Buddha took Parivraja after seeing a dead person, a sick person and an old person is absurd on the face of it).
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, in introduction.

Buddha head - thailand

“பரிவிராஜக” சந்நியாச முறை முற்றும் துறந்த முறையாகும். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது, இருக்கக்கூடாது. உலகில் எல்லா திசைகளிலிலும் செல்லும்போது, மக்களே அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதாவது உணவு அளிப்பார்கள். இரவுகளில் மரங்கள் அடியில் தூங்கி, இயற்கையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பிறகு மறுபடியும் தமது பணிகளைத் தொடங்குவர். உடல், மனம், ஐம்புலன்கள் அனைத்தையும் அடக்கி அதற்கேற்ற முறையில் அடக்கத்துடன், பக்குவத்துடன், நெறிமுறைகளுடன் இருக்கும் துறவு நிலை.

மழைக்காலங்களில், சந்நியாசிகள் அவ்வாறு திரிய முடியாது என்பதனால், ஆசாட (ஜூன்-ஜூலை நடுவில்) மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சாலைகளும் சேறும், சகதியாக இருக்கும். இத்தகைய முறை ஜைனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால், ஜைனர்கள் ஈரத்தைக்கூட மிதிக்கக்கூடாது, ஏனெனில் அதில் சில புழுக்கள், பூச்சிகள் மற்ற சிறிய உயிரினங்கள் இருக்கும் அவற்றை பாதிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற முறையில் மேற்கொண்டனர். இது ஜைனர்களால் பஜ்ஜுஸான், பௌத்தர்களால் வஸ்ஸ (வருஸ = மழை) எனப்பட்டது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary

பௌத்தர்கள் அவ்வாறு தங்கி வாழும் சந்நியாச முறையை மூன்றாகக் கொண்டனர்: ஆவாஸா, ஆராம மற்றும் விஹார என்ற மூன்று வகை தங்கி வசிக்கும் சந்நியாசி நிலை வாழ்க்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1. ஆவாஸா: ஆவாஸா = ஆ + வாஸா = வாசத்திற்கு உகந்தது அல்ல அதாவது வசிப்பதற்கு எற்றது இல்லை. அதாவது அவ்வாறு அமைக்கப் பட்ட இடங்கள் குறுகிய காலத்திற்கான, மழைக்காலத்தில் தங்குவதற்கேற்றவாறு அமைக்கப்பட்ட சிறிய ஓலைக்குடில்கள் ஆகும்.

2. ஆராம: சிறப்பான ஆவாஸா ஆராம எனப்படும், ஏனெனில் “ரம்” என்றால் வசதி, மகிழ்ச்சி, ஆனந்தம் என்று பொருள். ஆகவே இது சந்தோசம் அளிக்கும் ஒரு பூங்கா, தோட்டம் அல்லது தோப்பு ஆகும். அத்தகையவை பௌத்த பிக்குகளுக்கு அரசர்கள், தனவான்கள், வியாபாரிகளால் தானமாக அளிக்கப்பட்டன. அவர்களுக்கு வசதியாக சமைக்கும் இடம், கழிவறைகள் முதலியன இருக்கும். ஆகவே இவை வசதிகளுடன் ஓய்வெடுக்கும் இடங்களாக இருந்தன.

3. விஹார: விஹார என்பது அனைத்தையும் அடக்கியது அதாவது எல்லா வசதிகளையும் கொண்டது. அதில் “பரிவேன” என்பது ஒரு பிக்கு தூங்கும் அறை. விஹாரத்தில் பல “பரிவேன”ங்கள் இருக்கும். விஹார என்றால் சந்தோசமாக நடப்பது, உலவுவது என்பதாகும். ஆகவே, இந்த “விஹார” கட்டிடங்கள் மிகப் பெரிதாக அனத்து வசதிகளையும் கொண்டு இருக்கும்.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-2

சுல்லவக்க (VI,15.2) உரிமையை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு மாற்ற முடியாத பொருள்களை ஐந்து வகையாகப் பிரிக்கிறது:

1. ஆராம அல்லது “ஆராம”விற்கு அளிக்கப் பட்ட இடம்.
2. விஹார அல்லது “விஹார”த்திற்கு அளிக்கப் பட்ட இடம்.
3. உட்காரும் ஆசனங்கள், நாற்காலிகள், மெத்தைகள், விரிக்கும் படுக்கைகள் /
பாய்கள்.
4. தாமிர பாத்திரங்கள், தாமிரப் பெட்டிகள், தாமிர ஜாடிகள் / கருவிகள், கத்திகள்,கோடாளிகள், பெரிய கத்திகள், அரிவாள்
5. காட்டில் உபயோகப்படுத்தும் கயிறு, மூங்கில் கொம்பு, தடித்த நாணல், புற்கள், களிமண், மரப்பொருள்கள், மண்பாத்திரங்கள்

இதிலிலிருந்து, பிக்குகள் உபயோகப்படுத்திய பொருட்களைப் பற்றி அறியலாம். பிறகு, பிக்குகள் பல வேலைகளுக்குக் குறிப்பாக நியமித்தனர் என்பதிலிருந்து, மற்ற பொருட்வகைகள் பிக்குகளுக்கு கிடைத்ததும் தெரிய வருகிறது:

1. பாண்டகாரிக: பண்டகசாலையின் அதிகாரி
2. பட்டுதேஸக: பங்கிட்டு அளிக்கும் அதிகாரி
3. சீவரபாஜக: துணிககளை விநியோகிக்கும் அதிகாரி
4. யாகுபாஜிக: அரிசி கஞ்சியை விநியோகிக்கும் அதிகாரி
5. பலபாஜிக: பழங்களை விநியோகிக்கும் அதிகாரி
6. கஜ்ஜபாஜிக: திட உணவை விநியோகிக்கும் அதிகாரி
7. சேனாசனபன்னாபக: இடத்தை / அறைகளை அளிக்கும் அதிகாரி
8. வீவார-பதிக்காஹக: மக்களிடமிருந்து துணிகளை பெரும் அதிகாரி
9. சாதிய-காஹாபக: மேலாடைகள் / உள்ளாடைகள் / மழைக்கால ஆடைகள்
விநியோகிக்கும் அதிகாரி
10. பட்ட-காஹபக: உண்ண உணவை தருமமாக பெற அளிக்கப்படும் பிச்சா பாத்திரம்
விநியோகிக்கும் அதிகாரி
11. அப்பமட்டகவிசஜக: ஊசிகள், நூல், கத்தரி முதலியவற்றை விநியோகிக்கும்
அதிகாரி
12.ஆராமிகபேஸக: இடத்தை நிவகிக்க வேண்டிய பொருட்களை பெற கவனிக்குக்
அதிகாரி.
13.சாமனேர்பேஸக: புதிய பிக்குகளுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்கும் அதிகாரி
14. நவகாம்மிக: புதிய கட்டிடங்களை நிவகிக்கும் அதிகாரி.

இதிலிருந்து, எப்படி நிலையற்ற சந்நியாசம் நிலைகொண்டு, வசதிகளோடு வாழ
ஆரம்பித்தது என்பதனை அறியலாம்.
Chullavagga of Vinayapiitika (English translation), London, 1952

முதலில் மழைக்காக ஒதுங்கியவர்கள், ஒதுங்கிய இடங்கள் வசதிகளோடு மாற்றப்பட்டன. வசதிகள் பெருகியதும், பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்தது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். பிறகு பணமும் தானமாக வரத் தொடங்கியதும், இன்னும் பாதுகாப்பு எண்ணம் வளர்ந்தது. அச்சம் பெருகியது. விஹாரங்கள் செல்வசெழிப்பொடு இருக்க ஆரம்பித்தன. “மழைக்கால வாழ்க்கை”, முழுகாலவாழ்க்கையாக மாறியது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-3

சங்கத்தில் அனுமதி என்பதும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தது, நடந்தது. “உபசம்பத” என்பது வெறும் “அனுமதி சடங்கு” அல்ல. “பப்பஜ்ஜ/ப்ரவிரஜ்ய” முறைக்கு அனுமதி பதினைந்து வருடங்கள் கழித்து அளிக்கப்ப்படும். ஒரு துறவி பத்து வருட அனுபவம், திறமை மற்றும் தகுதி இருந்தால்தான் “உபசம்பத” நிலை / பட்டம் அளிக்கப்படும். பிறகு “இபஜ்ஜய” / “ஆசார்ய” நிலையை அடையலாம்.

பிக்குகளின் நிலை / கட்டுபாடுகளில் சில:

1. பம்சுகுலிக: குப்பைகளிலிருந்து பொரிக்கி எடுத்தத் துணிகளைத் தைத்து
உருவாக்கப் பட்ட ஆடைகளை அணிவது.
2. தேசீவாரரக: ஒரே நேரத்தில் மூன்று ஆடைகளை மட்டும் வைத்திருக்கும் நிலை.
3. பிண்டபாதிக: பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
4. சபதான-சாரிக: ஒவ்வொறு வீடாக சென்று  பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
5. எகாசனிக: ஒரே வேளை உணவு உண்ணும் பிக்கு.
6. பட்டபிண்டக: ஒரு பிச்சைப் பாத்திரத்திலிருந்து மட்டு உண்ணும் பிக்கு.
7. கலுபச்சபட்டிக: காலந்தவறிய பிறகு உணவு மறுக்கும் பிக்கு.
8. ஆரண்யக: காட்டில் வாழும் பிக்கு.
9. ருக்கமுலிக: மரத்தடியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
10. அபோகாசிக: திறந்த வெளியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
11. சசானிக: மயானத்தில் இருக்கும் / வசிக்கும் நிலை.
12. யஹாசந்ததிக: இரவு பொழுது எந்த இடமாகிலும், அந்நிலை மறந்து தனது பாயை விரிக்கும் பிக்கு.
13. நேசஜ்ஜிக: உட்கார்ந்து கொண்டே தூங்கும் நிலை.

Patrick, Olivelle, Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions, Florence: University of Florence Press, 2007.
Sukumar Dutt, Buddhist monks and monasteries of India: their history and their Contribution to Indian Culture, Motilal Banarasidas, New Delhi, 2008.

இத்தகைய கட்டுபாடுகள், மனம்-உடல் இவற்றை தமதிச்சைக்குள் வைத்திருக்க உதவியாக இருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர-தளர, பிக்குகள் வசதிகளால் வளர்ந்தனர். அறை, படுக்கை, தோட்டம் என வசதிகள் பெருகியதும், மனம்-உடல் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. சங்கம் சீரழிய ஆரம்பித்தது.

இதிலிருந்து, எப்படி புத்தரின் “பரிவிராஜக” கட்டுப்பாட்டுமுறை, படிபடியாக தேய்ந்து, மாறி, பல விலக்குகள் அளிக்கப்பட்டு, “மழைக்கால ஒழுங்குமுறை சந்நியாசம்” என்ற நிலை போய் வசதிகளுடன் வாழும் “விஹார” வாழ்க்கையானது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்
16-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-4