Posts Tagged ‘பிராமணர்’

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

Foundations - Dharmakirtis philosophy

சிறுபிள்ளை, சிறுவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனரா, எப்பொழுது?: அக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்ற சிறுபிள்ளை / சிறுவன் “ஆளுடைய பிள்ளை” திருஞான சம்பந்தர் தான், அவர் தான் 638-656 காலத்தில் 16 வயது வாழ்ந்து, சமண-பௌத்தர்களை தர்க்கத்தில் வென்றவர். இதனை, தர்மகீர்த்தி பற்றி ஆராய்பவர்கள் கவனிக்காமல் இந்ருந்தது / இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. “மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்”, என்றெல்லாம் தாரநாதர் விவரிப்பதும் நோக்கத்தக்கது. ஒருவேளை அக்காலத்திலேயே சம்பந்தர் சிறு வயதில் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தி, பௌத்தர்-ஜைனர்களை வென்றதால், அவர் புகழ் பரவி, அதற்கேற்றார்போல, 17ம் நூற்றாண்டில், தாரநாத அப்புத்தகதை எழுதும் போது, தர்மகீர்த்தியை உயர்த்தி, சங்கராச்சார்யவை சிறுபிள்ளையாக்கி, குறைத்துக் காட்டினார் போலும்! இருப்பினும் சம்பந்தர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார், சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்தார், என்றெல்லாம் கவனிக்கத் தக்கது. மேலும், சிறுவர்கள் மீது வன்முறையினை திணிப்பது, அதாவது, தோற்றால், இறக்க வேண்டும் போன்ற சரத்தையும் நோக்கத் தக்கது. ஏனெனில், சம்பந்தர், அதே காரணத்திற்காகத் தான், சிலர் ஜைனரை கழுவேற்றி வீட்டார் என்ற வாதத்தை வைத்து எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்கள் இத்தகைய விவரங்கள் முழுவதையும் படிப்பதில்லை போலும்.

kumarila bhatta - Tantravarttika- Dharmakirti

14-15 வயது பையனுடன் சண்டை போட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தது ஏன்?: சம்பந்தர் காலம் [c.638-654 CE] என்பதால் அவர் 16 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாகிறது. அப்படியென்றால், அந்த வயதிலேயே உடனுக்குடன் செந்தழில் பதிகம் பாடக் கூடிய திறமைப் பெற்றிருந்தார்; மத-தத்துவங்களில் வாதம் புரிய வல்லவராக இருந்தார்; மருத்துவம் முதலியவற்றையும் அறிந்திருந்ததால் கூன்பாண்டியனின் நோயையும் தீர்த்தார் என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. அதனால், சிறுவயதிலிருந்தே அவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்தார் என்றாகிறது. ஆகவே, அத்தகைய சிறுவனுடன், வாதிட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. அக்காலத்தில் ஒருவர், இன்னொருவருடன் வாதம் புரிவார். தோற்றால், ஒப்புக் கொண்டு மற்றவரின் தத்துவத்தை, ஞானத்தை ஒப்புக்க்கொள்வார். ஆனால், ஜைனர் மற்றும் பௌத்தர் காலங்களில் தான், ஒன்று தங்களது மதத்தை ஏற்றுக் கொள் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கையுடன் வாதப்போரை ஆரம்பித்து வைத்தனர். அரசு சார்பில் மதத்தலைவர், ராஜகுரு போன்றோர் தோற்றால், அந்த அரசனை மதமாற்றி, அந்த அரசையும் அவர் மதசார்பான நாடாக்கினர். இவ்வாறு தான், ஒரு காலகட்டத்தில், பாரதம் முழுவதும் அதிகார ரீதியில் ஜைனர் மற்றும் பௌத்தர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரான, சனாதன, வேத அல்லது இந்து நம்பிக்கையாளர்களை முழுவதுமாக மாற்ற முடியவில்லை.

Sstarving Buddha - sallekhana - suicide

சமணர்கள் வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள்: ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, “நாணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்காணொணா முத்தி இன்பம் காணலாம்,” என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கள். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது[1]. தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்ளத. வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருணைத் திறம் நன்கு புலப்படுகின்றது. அதுகாறும் வெளிவராத “தக்கயாகப் பரணி” நூலை ஶ்ரீமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரோடு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்” பார்த்துக் கொண்டும் இருந்தார். எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என எடுத்துக் காட்டப்படுகிறது[2].

Sallekhana and starving Buddha

தர்மகீர்த்தி தடுத்தது, சங்கராச்சார்ய கங்கையில் குதித்து செத்தது மற்றும் சம்பந்தர் தடுத்தது, சமணர் கழுவேறியது: தர்க்கத்தில் தோற்ற சங்கராச்சார்ய கங்கையில் குதிக்கும் போது தர்மகீர்த்தி தடுத்தது, பௌத்தத்தை ஏற்ருக் கொள்ல சொன்னார். இது வாரணாசியில் நடந்தது.  அதேபோல சமணர் தோற்று கழுவேற எத்தனித்த போது, சம்பந்தர் தடுத்த போது, அவர்கள் கழுவேறினார்கள். அதாவது, வாதத்தில் தோற்றவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கை, சரத்து அக்காலத்தில் உண்டானதா என்று கவனிக்க வேண்டும். முகமதியர் பின்னர், இதே கொள்கையினைக் கடை பிடித்தது தெரிந்ததே. ஆக, இதில் வன்முறை ஊக்குவிப்பு என்பது எவ்வாறு நடக்கிறது, தானாக சாக ஒப்புக் கொள்வது என்பது தற்கொலையிலிருந்து வேறுபட்டதா, இல்லை, அவ்வாறு சாகாவிட்டாலும், சாவு அவர்களுக்கு காத்திருக்கிறது என்ற நிலையிருந்ததா, அல்லது, மரண தண்டனை கொடுத்து, இத்தகைய கதைகளை புராணம் போல எழுதி வைத்தனரா, முதலியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆனால், இப்பொழுது, மதவாத, வகுப்புவாத திரிபுவாதங்கள், செக்யூலரிஸ போர்வையில், இந்துமதத்திற்கு , பிராமணர்களுக்கு எதிராக வைத்து எழுதி வருகின்றனர். அதில், எடுத்துக் காட்டப்பட்ட உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Jains persecuted - sculpture from Chidambaram

தர்மகீர்த்தி இந்தியரா, வெளிநாட்டவரா?: விகிபிடியா[3] தர்மகீர்த்தி பற்றி இவ்வாறு கூறுகிறது, “தர்மகீர்த்தி  (Dharmakīrti) (கி பி 7-ஆம் நூற்றாண்டுஇந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய  பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் எழுதிய நூல் ஹேதுபிந்து ஆகும். கி பி ஏழாம் நூற்றாண்டில் சுமத்திரா தீவில் பிறந்த தர்மகீர்த்தி சைலேந்திரன் என்ற பெயரில் இளவரசராக வாழ்ந்தவர். ஸ்ரீவிஜயம் பகுதியில் அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கிய இவர் பின்னர் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த இயல் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பௌத்த சமய தத்துவங்களில் சிறந்து விளங்கியவரும்காஞ்சிபுரத்தில் பிறந்தவரும், பௌத்த சமய துவக்க கால தர்க்க தத்துவ அறிஞராகவும் விளங்கிய திக்நாகரின் புகழ் பெற்ற பௌத்த தத்துவங்களுக்கு மீள் விளக்க உரைகள் எழுதியவர். இவரை எதிர்த்து வாதிட்ட  குமரிலபட்டரை நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியவர்”. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பிராமணர், சங்கரர வென்றவர் என்று எல்லாவற்றையும் விடுத்திருக்கிறார். அதாவது ஆங்கில[4] “தர்மகீர்த்தி” ஒருமாதிரியாகவும், தமிழ் “தர்மகீர்த்தி” வேறுமாதிரியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்[5]. ஒருவேளை இவ்வுண்மையினை அறிந்து, தமது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்று ஒருதலைப் பட்சமான விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர் போலும்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Jain impaled - Avudaiyar Temple-2

[1]  நாம் அறிந்த கி.வா.ஜ, பக்கம்.237.

[2]https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C.pdf/238

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

[4] https://en.wikipedia.org/wiki/Dharmakirti

[5] If we go by Tibetan sources, he seems to have been born in South India and then to have moved to the great monastic university of Nālandā (in present day Bihar state) where he was supposedly in contact with other Buddhist luminaries, such as Dharmapāla (530–561 C.E.).https://plato.stanford.edu/entries/dharmakiirti/

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.2

பிராமணர்களும், பௌத்தர்களும்: புத்தர் இறந்து 500 வருடங்களுக்குப் பின்னரே அவர் உபதேசங்களை மற்ற கதைகளைத் தொகுத்து பௌத்த பிக்குகள் எழுத ஆரம்பித்தனர். அரசவம்சத்தில் பிறந்த சித்தார்த்தன், “புத்தர்” ஆகியபோது, முதலில் பௌத்தத்தை எற்றுக்கொண்டது அரசவம்சத்தினரே. புத்தர் மறைந்தபிறகு, பலர் சங்கத்தில் சேர்ந்தாலும், அரச-வணிகர்களின் ஆதரவு பௌத்தத்திற்கு அதிகமாக இருந்தது. பிராமணர்கள் பௌத்தத்தில் சேர்ந்தாலும் அவர்களது நிலை பாதிக்கப்படும் நிலையில்தான் இருந்தது. பிராமணர்களை எதிர்த்து பௌத்தம் வளர்ந்தபோது, பௌத்தத்தில் அவர்களது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையினை ஆராயவேண்டியுள்ளது. விரும்பி ஏற்றுக்கொண்டாலும், வலுக்கட்டாயமாக மதமாற்றப்பட்டாலும் அவர்களை மற்ற பௌத்தர்கள் எவ்வாறு நடத்தினர் அல்லது தூரமாகவே வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பிராமணர்கள் பௌத்த மதத்தில் சேருவது என்பது சாத்தியமில்லை அல்லது குறைந்த அளவிலேயே இருந்திருக்கக் கூடும்.

சத்திரியர்களும், பௌத்தர்களும்: சத்திரியர்களின் நிலையோ அதைவிட முரண்பட்டதாகும். ஏனெனில் அவர்களுக்கும் அஹிம்சை போதிக்கும்
பௌத்தத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது வெளிச்சம். அரசர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர்களது அரசுகள் “பௌத்த அரசுகளாக” இயங்கலாம், இயங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். தங்களது ஆட்சியை காத்துக் கொள்ளவேண்டும் என்றால், சத்திரிய தர்மத்தைத் தான் கடைபிடித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அஹிம்சை, சமாதானம், அமைதி என்றால், அத்தகை சத்திரியர்கள் சத்திரியர்களாக இருந்திரிக்க மாட்டார்கள். பௌத்தத்தின் அஹிம்சாபோதனை போர்களை நிறுத்திவிடவில்லை என்பதனை சரித்திரம் காட்டுகிறது. மேலும், புத்தபிக்குகளே ஒரு அரசை ஆதரித்து, மற்ற அரசை எதிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. அவ்வாறான நிலையில், பிக்குகளும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாகிறது.

வைசியர்களும் பௌத்தர்களும்: பௌத்தர்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்ததால், அங்கெல்லாம் பொருட்களின் தேவை இருக்கும் என்பதனால், வைசியர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. பௌத்தர்கள் வியாபாரிகளுக்கு முன்னோடியாக, உதவியாக இருந்தனர். “பட்டுப்பாதை/வழி” (the Silk route) ஆனாலும், கடல் வழியானாலும் வணிகர்கள் தமது பொருட்களுடன் பௌத்த பிரசாகரர்களுடன் பயணித்தனர். வியாபாரம் செய்தனர், லாபம் ஈட்டினர். அத்தகைய லாபங்களை தானமாக பிக்குகளுக்கு தோடங்களாக, விஹாரங்களாக அளித்து ஆதரித்தனர். எனவே பௌத்த பிக்கு-வைசிய உறவு பரஸ்பரமானது என்பதாகிறது.

சூத்திரர்களும், பௌத்தர்களும்: சூத்திரர்கள் பௌத்தத்தில் இணைந்துள்ளதை தம்மபாத மற்றும் ஜாதக கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் பௌத்தம் வளர்ந்ததற்கு, பரவியதற்கு பிக்குகளுடன் இணைந்து பணியாற்றிய விவரங்கள் தெரியவில்லை. பௌத்தத்தில் “வஸலா” என்ற வார்த்தை தாழ்த்தப்பட்ட, வெறுக்கத்தக்க மனிதனைக்குறிக்கிறது. பௌத்தம் அடிமைகளை மறுத்ததாகத் தெரியவில்லை.
http://www.bbc.co.uk/religion/religions/buddhism/history/slavery.shtml

பிராமணர்கள் கடல் கடக்கத் தடை: ஆகவே நிச்சயமாக “சிரமணர்கள்-பிராமணர்கள்” சேர்ந்து சென்றது அசோகனது காலத்திற்கு பிறகு மறைந்தது எனலாம். திடீரென்று பிராமணர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது, அவ்வாறு சென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர் என்ற தடை ஏற்படுத்தப்பட்டதும் நோக்கத்தக்கது. இதனால்தான், மனுஸ்மிருதியில் அத்தகைய இடைச்செருகல் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில் தென்கிழக்காசிய மற்றும் தன்னமிரிக்க நாடுகளிலேயே இந்து மதம் பரவியிருந்தபோது, பிராமணர்கள் அங்கிருந்தனர். எனவே ஒன்று அவர்கள் நடந்து சென்றிருக்க வேண்டும் அல்லது கப்பலில் கடல் கடந்து செறிருக்கவேண்டும். பின்னதுதான் சாத்தியமாகிறது என்பதால், அத்தகைய தடை பிற்பாடு ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனத் தெரிகிறது. “சிரமணர்கள்”, “பிராமணர்கள்” தங்களுடன் வருவதை விரும்பவில்லையா அல்லது அவர்கள் வருவதை நிறுத்த முயன்றனரா என்பது நொக்கத்தக்கது. ஆகவே முன்னம் கப்பல்களில் சேந்து சென்ற இவர்களுக்குள் என்ன நேர்ந்தது? நிச்சயமாக, ஒருகாலகட்டத்தில், பிராமணர்கள் தங்களுடன் வருவதை “சிரமணர்கள்” விரும்பியிருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தடுக்க வழி உள்ள சட்டதிட்டங்களை வைத்துதான் செயல்படுத்த வேண்டும். அந்நிலையில்தான் மனுஸ்மிருதியை பௌத்தர்கள் திருத்தியிருக்கவேண்டும். ஏனெனில், பிராமணர்களே தங்களுக்கு பாதகமாக அத்தகைய சரத்தை நுழைத்திருக்க மாட்டார்கள்.

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.

பௌத்த சிற்ப-கட்டிடக் கலை வளர்ந்தது: குகைக்கோவில்கள், பெரிய அளவில் புத்தசிற்பங்கள், விஹாரங்கள் முதலியன அமைக்கப்பட்டது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டது, ஈடுபட்டது தெரிகின்றது. கற்கள் மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் என்பதனால் அவ்விடங்களில் விஹாரங்கள் கட்டப்பட்டது சாதகமாகவே தெரிகிறது. கற்கள் உருவான விதம், அவற்றின் உள் அமைப்பு, கடினம்-மென்மை தன்மைகள், முதலியன கல்-விற்பன்னர்களுக்குத் தெரிந்திருக்கும். 40 அடிகள் உயர தூண்கள் அல்லது சிலைகள் இருக்கும்போது, அத்தகைய பாறைகளை எவ்வாறு உடைத்து, செதுக்கி உருவாக்கினர் என்று நோக்க வேண்டியுள்ளது. மேலும் கற்களை உடைக்க, கழிக்க, கடைய, செதுக்க, மேற்பகுதியை மென்மையாக்க பலவித உலோகக்கருவிகள் உபயோகப்படுத்த்ப்பட்டிருக்கும். எனவே அத்தகைய கருவிகளை உருவாக்கும் உலோகவியல் வல்லுனர்கள் இருந்திருக்க வேண்டும். வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோருக்கு வேண்டியவற்றை அவர்கள் தொடர்ந்து விநியோகித்து வந்திருக்கவேண்டும்.
James Fergusson, History of Indian & Eastern Architecture, Low-Priced Publications, New Delhi, 1997.
E. B. Havell, Indian Sculpture and Painting, John Murray, London, 1908, p.183. Taraporavala & Sons, Bombay reprint is available.

அவர்கள் எல்லொரும் பௌத்தர்களா அல்லது பணம் பெற்று அவர்களுக்காக வேலை செய்து அத்தகைய சிற்பங்கள், விஹாரங்களை உருவாக்கினரா? அல்லது அடிமைகளாக வேலை செய்தனரா? அவர்கள் எல்லாம் பௌத்தர்கள் இல்லை என்றால், தமக்கு எதிரான மதத்திற்கு அவ்வாறு வேலை செய்திருக்க முடியாது. அல்லது, அத்தகைய வேறுபாடே இல்லாத நிலை இருந்திருக்கவேண்டும். பௌத்தமதம் வெறும் பிராமணத்தை எதிர்த்து மட்டும் வளர்ந்து விடவில்லை. உலகம் முழுவதும், புத்த சிற்பங்களை செதுக்கி, தமது மதத்தை பிரபலப்படுத்தி வளர்த்தனர். ஆகவே, அத்தகைய லட்சக் கணக்கான வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் எவ்வாறு பௌத்தத்திற்கு சாதகமாக வேலை செய்தனர்?

Takht-i-Bahai Chaita hall, temple

உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm): பௌத்தம் தேய்ந்ததற்கு அவர்களும் காரணமா? மஹாயான பௌத்தத்தை குறை சொன்னால், அல்லது ஒதுக்கினால், இவர்களது கதி அதோகதிதான். எனவே, மஹாயானத்தைக் குறைக்கூறுவது, விக்கிர ஆராதனையை (Idolatry) விமர்சிப்பது, புத்த சிற்பங்கள்-விஹாரங்களை வெறுப்பது முதலியன முரணான போக்கே. விக்கிரங்களை உருவாக்குகின்றவர்கள் (Icon producers), இறையியல் அல்லது மற்ற சித்தாந்த ரீதிகளில் விக்கிரங்களை வெறுப்பவர்கள் /உடைப்பவர்கள் (Iconoclasts) ஒரே மதத்தில் / சாகையில் பிரசாரகரர்களாக, ஒருமித்த-சித்தாந்திகளாக இருப்பது போலித்தனமாகும், கபடத்தனமாகும். ஆகவே பௌத்தம் எந்நிலையிலும் அத்தகைய வாதத்தை முன் வைக்கமுடியாது. அத்தகைய வெறுக்கும் நிலையே அவர்களது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm) இரண்டையும் தன்னுள் அடக்கி பௌத்தம் இருந்தது என்றால் பொய்மைதான். கலாரசிகர்கள் கலையை வெறுப்பரோ, சிற்பங்களை “உருவாக்குபவர்கள்”, சிற்பங்களை “உடைப்பார்களோ?”
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians? in Contribution of South India to Indian Art and Architecture, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.

அத்தகைய உருவங்கள் / சிற்பங்கள் உருவானது, இருப்பதற்கு எதிராகத்தான் அல்லது மக்களைக் கவரும் முறையில் உருவாக்கியிருக்கவேண்டும். எனவே அத்தகைய முறையை உருவாக்கிவிட்டு, பிறகு அது பாவச்செயல், சாத்தானின் செயல் என்றெல்லாம் பேசுவது, பிரசாரம் செய்வது அல்லது அவற்றை உடைப்பது / அழிப்பது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது, தீவிரவாதாமாகிறது, மானுடத்தை பாதிக்கிறது.
The Mohammedans’ iconoclast-fanatical-ferocious destruction of temples have been noted by the British surveyors and recorded in their records and works. James Fergusson, opt cit. Archaeological Survey of Western India, Vol. III, pp.20, 23, 38-40.

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture60

ஒருவேளை, அத்தகைய எண்ணம் வலுப்பட்டு, பௌத்தத்தில் “உருவவழிபாட்டு-எதிர்ப்புவாதிகள்” உருவாகி கிளம்பியிருந்தால், நிச்சயமாக மேற்கண்ட வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பர். ஏனெனில் அது அவர்களின் தொழில் என்றாகிவிட்டப் பிறகு அதனை மறுப்பவரை, ஒழிப்பவரை அவர்கள் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள். மேலும், பௌத்தர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கக்கூடும். தங்களை வைத்தே, அத்தகைய பற்பல கோடிகணக்கில் சிற்பங்கள், லட்ச கணக்கில் விஹாரங்கள், மடாலயங்கள் என்று உருவாக்கி, பிறகு தங்களையே இழிவு படுத்துவதை எந்த வேலையாளும், தொழிலாளியும், சிற்பியும் அல்லது ஸ்தபதியும் தாங்கிக் கொண்டிருக்கமாட்டான். எனவே அத்தகைய“உருவவழிபாட்டு-எதிர்ப்புவாத பௌத்தர்கள்” மற்றும் இவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்று ஆராயத்தக்கது.

தென்னிந்திய சம்பிரதாயப்படி பலவித சிற்பசாஸ்திரங்கள் இருந்தன. அவையாவன:

1. விருத்தம்                         9. வித்தியாபதி               17.மிகுத்தவட்டம்
25. ஸுஸ்ருதம்
2. விஸ்வபோதம்                10. மானசாரம்              18.கலயூபம்                26.
சைத்யகம்
3. விஸ்வகஸ்பியம்        11. மனுமன்                      19. கபீலம்
27. நமசம்ஹிதை
4. விஸ்சலம்                        12. மனபோதம்               20. கற்பர்யம்
28. சாத்விகம்
5. விஸ்வதர்மம்                13. மயிந்திரமல்               21. கலாம்ருதம்        29.
அதிசாரம்
6. விஸ்வேஸம்                14. மயாமனபோதம்     22. நளம்                        30.
அரிதகம்
7. விஸ்வசாரம்                15.மயன்மதம்               23. பானு                        31.
ஸௌம்யம்
8. வஜ்ஜிரம்                        16. மயன்-நீதி                       24.
பர்சரியம்                32. சித்ரம்.

Prasanna  Kumar  Acharya, A Dictionary of Hindu Architecture, Vol.I, Low Price Publications, New Delhi, 1997.
………………………………………., Indian Architecture according to Manasara-silpasastra, Vol.II, 1998.
………………………………………., Manasara on Architecture and sculpture: Sanskrit Text with critical nores, Vol.III., 1997.
………………………………………., Architecture of Manasara (English translation), Vol.IV, 1998.
………………………………………, Atchitecture of Manasara: Illustraions of Architectural and Sculptural objects, Vol.V., 1998
……………………………………….., Hindu Architecture in India and Aboard, Vol.VI, 1998.
………………………………………., An Encyclopedia of Hindu Architecture, Vol.VII, 2001
Bruno Dagens, Mayamata, Sitaram Bharatia Institute of Science & Research, New Delhi, 1995, p.v in Introduction.
T. Bhattacharya, The Cannons of Indian Art, Calcutta, 1963, pp.183-195.
K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, ICIH-2009 conference, Souvenir Volume, New Delhi, 2009, p.78. For full text see at:
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture61

பௌத்தம் “இந்து/சனாதன மதத்திலிருந்து” பெற்றவை: “செரிந்தியா” எனப்படுகின்ற மத்திய ஆசியா பகுதிகளில் பௌத்தம் இருந்தபோதும், எட்டாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருத வழக்கு இருந்து வந்தது என்று ஏரியல் ஸ்டீன் என்ற ஆராய்ச்சியாளர் பல அத்தாட்சிகளுடன் காட்டியுள்ளார். பௌத்ததைப் பற்றிய ஆரம்பகால பாலிமொழி நூல் கரோஸ்தி லிபியில் இருந்தது. சமஸ்கிருதமோ பிரம்மி லிபியில் இருந்தது.
Sir Aurel Stein, Serindia, Vol.I, Introduction.

ஆகவே, எப்படி தத்துவம் முதலியன பௌத்தர்களுக்கு வேத-உபநிடதங்களிலிருந்து பெற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டனரோ, அம்மாதிரியே, வேதகலைகளையும் பெற்றனர் என்பது அவர்களது சிற்ப கட்டிட கலை அத்தாட்சிகள் காட்டுகின்றன. சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எது முன்பு, எது பின்பு என்பதனை காலகணக்கீட்டு முறையில் குறிப்பிடுவதில்தான் குழம்பியுள்ளனர், குழப்பியுள்ளனர், பாரபட்சமுறையில் இருந்துள்ளனர் என்பது இதனை படிக்கும்போது / ஆராயும்போது தெரிகிறது. ஏ. எல். பாஸம் “அசோகனுடைய தூண்கள்” அசோகனுக்கு முன்னமே இருந்தன என்றபோது, நமது சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிந்தும் அறியாதவர்கள் மாதிரி இருந்தனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990.

“எழுத்தறிவற்ற” சிந்துசமவெளி / ஹரப்பன் நாகரிகம் (c.2250-1950 BCE) மற்றும் திடீரென்று முளைத்த “சரித்திர கால” மௌரிய பேரரசு (c.300 BCE) இந்த இடைப்பட்ட காலத்தில், 1900 வருடங்களுக்கு இந்தியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? நமது அதி-மேதாவி / அறிவிஜீவி / பிரபலமான / முன்னோக்குள்ள சரித்திரஆசிரியர்கள் (eminent, progressive, secular etc), ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருட்துறை வல்லுனர்கள் அந்த ரகசியத்தைச் சொல்ல மறுக்கின்றனர்! எல்லாவற்றையும் proto-history (Proto- = original, primitive, first) காலத்தில் வைத்து இந்தியர்களை ஏமாற்றுகின்றனர்!

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture62

இருப்பினும் ஏ. எல். பாஸம் போன்ற நடுநிலையாளர்கள் உண்மையை எடுத்துக்
காட்டியுள்ளனர்: குப்தகாலத்திற்கு முன்பே பராபர், நாகார்ஜுனா முதலிய இருப்பிடங்கள் / குகைக்கோவில்கள் முதலியவற்றைக் குறிப்பிடும்போது, அவர் இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார்:

“The inner walls of all caves are finely polished, no doubt by workmen of the school whch was responsible for the polish of the Asokan columns” (p.354). “குகைக்கோவில்களின் சுவர்களை மென்மையாக கழித்து வழுவழுப்பாக பளிச்சென செய்தவர்கள் அசோகனுடைய தூண்களை செய்த அதே சிற்ப-
கட்டிடகலை குடும்பத்தை சேர்ந்திருக்கவேண்டும்”.

“The capitals of Asokan’s columns, some of which were perhaps made before his reign, are the earliest important sculptures after those of the Indus cities” (p.366).  “சிந்து நகர கட்டிடகலைக்குப்பிறகு, அதேமாதிரியான தொன்மையான வேலைபாடு அசோகனுடைய தூண்களிலில்தான் காணப்படுகிறது, அவைகளில் சில அவனது காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்ககூடும்”

“Yet, if we did not know that the possibility of western influence existed, we might suggest that the animal sculptures of the columns were those of a school directly descended from the engravers of the Indus seals, which show a realistic treatment very unusual for so early a civilization”. “மேற்கத்தைய தாக்கம் இருந்ததற்கான வாய்ப்பு
உள்ளதா இல்லையா என்று அறிவதற்கு இயாலமல் இருக்கும் நிலையில், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளை கடைந்து பொரித்து உருவாக்கிய அதே கலைக்குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து நேரிடையாக வழி-வந்தவர்கள்தாம் இந்த விலங்குகளை செதுக்கியிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.”

பல “யக்ஸினிகள்” சிற்பங்களை ஆராய்ந்து கூறுவதாவது:

“The treatment of the ample abdomens of these figures has been compared with that of the Harappa torso and gives further evidence of the survival of tradition over the long intervening period” (p.367).
“எவ்விதமாக இந்த சிற்பங்களின் வயிற்றுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன / விவரங்களைக் கொண்டுள்ளன என்பதற்கு ஹரப்பன் சிற்பங்களின் முண்டத்துடன் ஒப்புமைப்படுத்தி போதுமான வரை ஆராயப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்புமை ஆராய்ச்சி கொடுக்கும் அத்தாட்சியானது, அத்தகைய கலைப்பாரம்பரியம் இடைப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது தெரிகிறது”.

ஆகவே, ஜைன-பௌத்த மதங்களுக்கு முன்பு, சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முன்பே அத்தகைய சிற்ப-கட்டிடகலை இருந்து வந்துள்ளது. ஜைன-பௌத்தர்கள் அவர்களிடமிருந்துதான் அத்தகைய கலையையும் பெற்றனர், அதன் வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோரையும் பெற்றனர். ஆகவே இருந்த பாரம்பரிய-கலாச்சாரக்கூறுகளுக்கு எதிராக ஜைன-பௌத்தர்கள் செயல்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பதில்-எதிர்ப்பை உணர்ந்திருப்பர். அதை பௌத்தத்திற்கு விரோதமாக நடந்த செயல் என்றாகாது. பாதிப்பு ஏற்படும்போது, பௌத்தர்களே புத்தர் சொன்னபடி நடக்காமல் இருந்திருக்கலாம். ஆகையால்தான், பௌத்தத்திலேயே பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வேதபிரகாஷ்
18-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

 Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture63