Posts Tagged ‘சந்திர்குப்த மௌரியன்’

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

ஹூணர்களால் பௌத்தம் அழிந்தது (478-637): பிறகு ஹூணர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது என்ற கருதுகோள் வருகிறது. மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் ஹூணர்களைப் பற்றி கூறுவதாவது: ஹூணர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடிமக்கள். பைஜான்டின் எழுத்தாளர்கள் அவர்களை “ஹெப்தாலைட்டுகள்” – வெள்ளைநிறத்தவர் – வெள்ளை ஹூணர்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் துருக்கிய-மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவீன எழுத்தாளர்கள் அட்டிலாவைச் சேர்ந்த ஹூணர்களுக்கும் இந்த ஹூணர்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஏனெனில் இவர்கள் இரானிய இனத்தைச் சார்ந்தவர்கள். கிரேக்கர்கள்,
சாகர்கள் மற்றும் குஷானர்களைப் போல, அவர்களும் மலைகள், சமவெளிகள் கடந்து இந்தியாவைத் தாக்க வந்தவர்கள் எனத் தெரிகிறது. ஹூணர்களுடன் போரிட்டு குமாரகுப்தனே இறந்ததாக “குப்த சரித்திரம்” கூறுகிறது. 500 க்கு மேலே மேற்கு இந்தியாவை அவர்கள் முழுவதுமாக பிடித்துவிட்டதால், அவர்கள் ஆட்சி புரியவும் தொடங்கி விட்டனர். தோரமானன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன் இருவருமே அரசர்களாக ஆட்சி புரிந்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் “குப்த பேரரசு” மறைந்ததாக சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990. ப.67-69.

Tang Emperor Wuzong

சைன அரசனது அடக்கு முறைகளால், மங்கோலியாவிலிருந்த ஹூணர்கள் வெளியேறி மற்றவர்களைத் தாக்கினார்களா?: உண்மையில், சைனர்களின் அடக்குமுறைகளால் அவர்கள், இந்தியாவிற்கு வர நேர்ந்தது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் எனத்தெரிகிறது. ஆகவே அத்தகைய அடக்குமுறை, பௌத்ததிற்கு சாதகமாக இருந்த சைனாவில், திடீரென்று வந்திருக்கமுடியாது. எனவே இந்தியாவிற்கு வந்தவர்கள் ஹூணர்களா, பௌத்தர்களா அல்லது வேறு மதத்தினரா என்று நோக்கத் தக்கது. ஏனெனில், “ஹுணர்கள்’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவில் நுழைந்ததாக சொல்லப்படும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்துமதம் தான், ஏனெனில் அவர்கள் சூரியன், சிவன் முதலியவர்களை வணங்கியதாக அவர்களது கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன (Gwalior Stone Inscription of Mihirakula (ca. early 6th century CE). மேலும் விவரங்களுக்கு, கீழே காணவும்.

Toramana coin

ஜைனர்கள் இந்தியா முழுவதும் பலமாக இருந்த நிலையில், ஹூணர்கள் எப்படி பௌத்தர்களை மட்டும் தாக்கியிருக்க முடியும்?: ஹூணர்கள், பௌத்தர்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதில், பல கேள்விகள் எழுகின்றன:

*மேலும், அதேகாலத்தில், மேற்கு இந்தியாவில் இருந்த பலமான மதம் ஜைனம் ஆகும். பிறகு எப்படி, ஹூணர்கள் ஜைனர்களை விடுத்து, பௌத்தர்களை  மட்டும் குறிவைத்திருக்க முடியும்?

*“ஹிந்துத்வா-அரசர்கள்” குப்தர்களைத் தாக்கி அவர்களது பேரரசையே
மறையச்செய்திருக்க முடியும்?
*ஒருவேளை அவர்கள் ஜைனர்களாக இருப்பார்களோ? ஏனனில், அவர்களது செயல்கள் ஜைனத்திற்குத்தான் ஆதரவாக உள்ளது.

*ஒருவேளை, ஹூணர்களும், ஜைனர்களும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திகொண்டு, இந்தியாவைத் தாக்கியிருக்கக் கூடுமோ?

* 712ல் அரேபிய படையெடுப்புத் தொடங்குகின்றது. அவர்களும் ஜைனர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

* பிறகு வரும் “ஆதிசங்கரரும்” ஜைனர்களை கண்டுகொள்ளாமல், பௌத்தத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்!

இதென்ன வேடிக்கை? எப்படி எல்லோருமே ஜைன-அபிமானிகளாக உள்ளார்கள்?
நிச்சயமாக இங்கு ஒரு “சரித்திர புதிர்” உள்ளது. அதாவது, சரித்திர ஆசிரியர்கள் செய்துள்ள புரட்டு வேலைத் தெரிகிறது.

Kanishka, Huvishka coins

தோராமானன், மிஹிரகுலன் தேதிகளை ஆங்கிலேயர் மாற்றியது: தோரமானன், மிஹிரகுலன் என்ற பெயர்கள் ஐரோப்பியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது தெரிகின்றது. ஏனெனில், ஹூணர்கள் என்றாலே அவர்களுக்கு பயம், அதிலும் அட்டிலா என்பவனுடைய பெயரைக் கேட்டால், ஐரோப்பிய குழந்தைகள் சிறுநீர் விட ஆரம்பித்துவிடும் (Count Dracula in Bram Stoker’s novel Dracula claims to be descended from Attila: “What devil or what witch was ever so great as Attila, whose blood is in these veins?”). அவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் என்று ஹூணர்கள் (Huns) மற்றும் வாண்டல்கள் (Vandals) என்று இரு மக்கட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றனர் (vandal, vandalize, vandalism என்றால் தெரிந்திருக்கும்). ஐரோப்பா, மத்தியதரைகடல் நாடுகள் அவர்களால் பாதிக்கப் பட்டதால், இந்தியாவும் அதே காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆகவே, எப்படியாவது ஹூணர்களை இந்திய சரித்திரத்தில் நுழைக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய காலத்தையும் குறைக்கவேண்டும் என்று ஆங்கிலேய பண்டிதர்கள் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ராஜதரங்கிணியில் அத்தகைய பெயர்கள் வருவது அவர்களுக்கு வியப்பாகியது.

Rajatarangini Kalhana
ஆனால், கல்ஹணரின்படி, அவர்களது, தேதிகள் இவ்வாறு இருந்தன: ராஜதரங்கினியின் படி, அரசனின் பெயர்,        ஆண்ட காலம்,        காஷ்மீர சகாப்தத்தின்படி      மற்றும்  நடப்பு சகாப்தத்தின்படி இவ்வாறு இருக்கின்றன:

ஆண்ட அரசன் ஆண்டுகள் கல்ஹணர் தேதி இக்காலத்தவர் கொடுக்கும் தேதி
அசோகன் 48 1628-1676 1448-1400
ஜலௌகன் 56 1675-1732 1400-1344
தாமோதர-II 50 1732-1782 1344-1294
ஹுஸ்க, ஜுஸ்க, கனிஸ்க 60 1782-1842 1294-1234
அபிமன்யு 52 1842-1894 1234-1182
கோநந்த-III 35 1894-1929 1182-1147
விபீஷண 54½ 1929-1983½ 1147-1092½
இந்திரஜித் 35½ 1983½-2019 1092½-1057
ராவண 30 2019-2049 1057-1027
விபீஷண-II 35½ 2049-2084½ 1057-991½
கின்னர/நர 32084½-2124 991½-952
சித்த 69 2124-2184 952-892
உட்பலக்ஸ 30½ 2184-2214 892-861½
ஹிரண்யாக்ஸ 37½ 2214-2252 861½-824
ஹிரண்யகுல 60 2252-2312 824-764
வசுகுல 60 2312-2372 764-704
மிஹிரகுல 70 2372-2442 704-634
பக 40 2442-2482 634-591
கஹிதிநம்தன 30 2482-2512 591-564

*அசோகன் வருகிறான், ஆனால் பௌத்தன் அல்ல, ஜைனன்!
* அவனது தேதியோ 1448-1400 BCE!
*மிஹிரகுலன் உள்ளான் ஆனால், அவனின் தந்தை பெயர் தோரமானன் அல்ல!
*அவனது தேதியோ 704-634 BCE!
பிறகு எப்படி மாற்றுவது, தமது இச்சைக்கேற்றவாறு கணக்கை சரிகட்டுவது, தேதிகளை திருத்துவது, சரித்திரத்தைப் புரட்டுவது?

Hultzsch and Cunningham

ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் தேதிகளை மாற்றியமைத்தது: இதோ, திருவாளர் இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch), ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A. Cunningham), பேராசிரியர் வில்சன் (H. H. Wilson), டா. ஃபிலீட் (John Faithful Fleet) முதலியோரின் குழுமம் எப்படி வேலை செய்தது என்று விளக்குகிறார். ராஜதாரங்கிணியைப் பற்றி இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) எழுதும்போது, இந்த விவரங்களைத் தருகிறார், “ராஜதரங்கிணியில் கல்ஹணரின் காலக்கணக்கியலை மாற்றியமைப்பதைப் பற்றி, பேராசிரியர் வில்சன் (H. H. Wilson) கருதியபோது தனது கருத்துகளை சுருக்கக்குறிப்பாக இணைத்திருந்தார். ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A.Cunningham) 1843ல் தனது, “காஷ்மீரத்தின் பழங்காசுகள்” என்ற கட்டுரையில் அதனை பயன்படுத்தினார் (நாணயவியல் கால அட்டவணை, பகுதி.6, ப.1-38; Numismatic Chronicle, Vol.VI, pp.1-38) இருப்பினும் முந்தைய காலத்திற்கு திருப்திகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மிஹிரகுலனைப் பொருத்தவரையிலும் அத்தகைய முடிவுகள் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ராஜதரங்கிணியின்படி பெற்ற தேதி 2397 கலியுக சம்வத்ர ஆண்டு அல்லது B.C. 704; மற்றும் அவனது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு முடிகின்றது. பேராசிரியர் எச். எச். வில்சன் இந்த தேதியை 200 B. Cக்குக் குறைத்து கொண்டார்.  (loc.cit, p.81). ஆனால் சர். ஏ. கன்னிங்ஹாம் A.D 163 ல் வரவேண்டும் என்று முடிவெடுத்தார் (loc.cit, p. 18). “இருப்பினும் புதியதாக கண்டுபிடித்த கல்வெட்டுகளின் மூலம், டா. ஃபிலீட் (John Faithful Fleet) உண்மையான தேதி ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பித்தால்தான் வரும் எனக் கொண்டு, அவனது ஆட்சியின் ஆரம்பத்தை A. D 515ல் வைத்து, 530 A.Dல் முடியவேண்டும் எனத் தீர்மானித்தார். ஏனெனில் அந்த வருடத்தில்தான் அவன் அதிகாரம் இழந்து காஷ்மீரத்திற்கு சென்று அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். “இது கல்ஹணரின் முன்பு குறிப்பிட்ட விவரங்களில் எப்படி மாறுதல்களை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுயதுடன் ஒத்துப்போகிறது. அதுதான் நமக்கு குறிப்பிட்ட திட்டத்தைக் கொடுப்பதால், அதிலிருந்து தேதிகளை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதே மாதிரி கல்ஹணர், கனிஸ்கனுடைய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நோக்கத் தக்கது. தரங்கம்-I, வரி.18ன் படி, துரக்ஸ அரசனான கனிஸ்கன், கோநந்தன்-III, அரசாட்சிற்கு வருவதற்கு முன்பு B.C 1182ல் இருந்ததாக கல்ஹணரின் கூற்றுப்படி வருகின்றது. ஆனால், இது நமது கணக்கின்படி, உள்ள சாத்தியக்கூறுகளின்படி 77 A.Dக்கு வரவேண்டும். அதே மாதிரி அசோகனுடைய தேதியும் கல்ஹணரின்படி (தரங்கம்-I, வரி.191) முன்னதாக உள்ளது. ஆனால், கன்னிங்ஹாமின் படி, அந்த தேதி இப்பொழுது B.C 260க்கு வருகின்றது (Corp.Inscr.Indica, Vol.I, Preface, p.VII).

H H Wilson and J F Fleet

இப்பொழுது அத்தகைய தேதிகளை ஏன் மாற்றியமைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில்:. காஷ்மீர அரசர்களின் வம்சாவளியில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்ததாக பெயர்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம், மூதாதையர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் அரசாளவில்லை. ஆகவே, நமது கணக்கின்படி சில அரசர்களை எடுத்துக்கொண்டாலும், விட்டாலும், நடுவிலே குறை ஏற்பட்டாலும் அத்தகைய அத்தியாவசம் உள்ளதால், அவர்களை வம்சாளி பட்டியிலிருந்து நீக்கவேண்டும்”.

மேலே இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) கொடுத்த வாக்குமூலம் படி, நாம் தெளிவாக அறிவதவது யாதென்றால்:

  1. மோஹிலோகுலோ” “மிஹிரகுலன்ஆனது: ராஜதரங்கிணியின் மிஹிரகுலன் ஐரோப்பிய மனதுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. ஏனெனில், ராஜதரங்கிணியில், அவனைப் பற்றிய கதை, “அடில்லாவை/டிராகுலாவை” ஒத்துபோகிறது! ஒருபெரிய கல்லை, ஒரு மிகவும் கற்புள்ள பெண்தான் நகர்த்தமுடியும் என்றபோது, “சந்திரவதி” என்ற பெண் நகர்த்துகிறாள், ஆனால் மற்ற பெண்களால் முடியவில்லை. இதனால் எல்லா பெண்களையும் அவர்களது கணவன்மார்கள், சகோதரர்கள், உறவினர்களுடன் கொன்றுக் குவிக்கிறான்! [இதைத் தவிர பல கொடுமைகளைப் புரிகிறான். விவரங்களுக்கு ராஜதரங்கிணியைப் படிக்கவும்] ஆகவே “மோ-ஹி-லோ-கு-லோ” யுவான் சுவாங் குறிப்பிட்டப்படி ஒரு “மிஹிரகுலன்” கிடைத்துவிட்டான்! அதுவும் ஹூணரைப்போல கொடுங்கோலனாக இருக்கிறான்!
  1. தேதிகளை மாற்றியது: தேதிகள் உதைக்கிறது: எனவே  தேதிகளை மாற்ற முடிவு செய்கிறார்கள், மாற்றவும் செய்தார்கள். தேதிககளை எங்களுடைய வச்திக்காகக் குறைக்கிறோம் என்று எவ்வளவு நாஜுக்காக சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
  1. அரசர்களையே வம்சாளியிலிருந்து எடுத்து மறைத்தது: பல அரசர்கள் இடையில் பிரச்சினை செய்கிறார்கள்! அதாவது அவ்வாறு காலத்தைக் குறைக்கும்போது, இடையில் அரசாட்சி செய்த அரசர்களை என்ன செய்வது? ஒரே வழி, அந்த அரசர்கள் இல்லவே இல்லை என்று சொல்வது! எனவே பல அரசர்கள் இந்திய சரித்ததரத்திலிருந்து மறைந்து விட்டார்கள்!
  1. ஜைனஅசோகனை பௌத்தஅசோகனாக்கியது: பௌத்தமதமே “அசோகனின்”மீது ஆதரமாக உள்ளது. ஆனால், ராஜதரங்கிணியின் அசோகனோ ஒரு ஜைன மதத்தவனாக விஹாரங்களைக் கட்டியதாக உள்ளது. அதிலும் காஷ்மீர அரசனாக உள்ளான், மௌரியன் அல்லன்! ஆகவே, அந்த அசோகனையே மறைத்துவிடுவது! எனவே, ஒரு புதிய அசோகன், பௌத்தமத காவலனாக “ஒரு அசோகன்” உருவாக்கப்படுகிறான். கல்வெட்டுகள் கிடைக்கவேண்டுமே? உள்ளவையெல்லாம் “தேவநாம்பியாதிஸ்ஸா / தேவநாம்பிரிய” என்றுதான் உள்ளது. எங்குமே “அசோகன்” என்ற பெயர் இல்லை! 1915 வரை இக்கல்வெட்டுகள் எல்லாம் அசோகனுடைது என்று உறுதியாகத் தெரியாது. 1915ல்தான் மஸ்கி கலவெட்டு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் “தேவநா பியா” கூட “அசோக” என்ற வார்த்தையும் உள்ளது. வித்தியாசத்தை நன்றாக கவனிக்கவும். மேலும், இக்கல்வெட்டு மகதத்தில் அல்லது மௌரிய பேரரசு எங்கு வலுவாக இருந்ததோ அங்கு கிடைக்காமல், ஜைனம் ஆதிக்கம் செய்த பகுதியில் கிடைத்திருப்பது நோக்கத்தக்கது.
  1. 700 வருடகொள்ளுகொல்லுதாத்தாவை மகனாக்கியது!; இனி “தோரமானன்” என்பவனைக் கவனிப்போம். ராஜதரங்கிணியின்படி, 81வது அரசன் ப்ரவர்சேன / ஸ்ரேஸ்டஸேன / துஞ்ஞீனா என்பவன் ஆவன். இவனது இரண்டு மகன்கள் ஹிரண்யா மற்றும் தோரமான. ஹிரண்யா தோரமானனை சிறையில் அடைக்கிறான், அவன் சிறையிலேயே இறக்கிறான். அவன் வாழ்ந்த காலம் 16 BCE முதல் 14 CE வரை. ஆகவே, இவனுக்கு காலத்தால் 700 வருடங்களுக்கு முன்பு மிஹிரகுலன் (704-634 BCE) இருக்கிறான்! இருப்பினும் அவனை, இவனுக்கு மகனாக்குகிறார்கள்! என்னே சரித்திரத்தின் கோலம்?

Mihirakula - Vishnubakta 502-530 CE

  1. சௌரன்விஷ்ணு பக்தனாகிசிவபக்தனாகியது: பௌத்தர்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்றால் ஒருவன் சைவனாக இருக்கவேண்டும். எனவே அடுத்தது, இந்த “மிஹிரகுலனை” சைவனாக்கும் படலம் ஆரம்பிக்கிறது. இதற்கு குவாலியர் கல்வெட்டை உபயோகப்படுத்துகின்றனர். அதில்  வரும் தோரமானன், மிஹிரகுல என்ற பெயரோடு ஆண்டதாக உள்ளது. மேலும் அவன் வழி வந்த மகன், பெயரன் முதலியோர்களின் பெயர்கள் மாத்ரிதல, மாத்ரிதாஸ, மாத்ரிசேத என்றுள்ளன. மேலும் அவன் சூரியவழிபாடு செய்வதுபோல உள்ளது. ஒரு பதக்கத்தில் ஒரு மிஹிரன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணுவை கும்பிடும் மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது (Sardonyx seal representing Vishnu with a worshipper, Afghanistan or Pakistan, 4th-6th century CE. The inscription in cursive Bactrian reads: “Mihira, Vishnu and Shiva”. British Museum). என்ன செய்வது, எப்படியாவது சரிகட்டவேண்டுமே? “தோரமானன் என்பவன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்பதனை “தோரமானனின் மகன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்று மொழிபெயர்த்து, மிஹிரகுலனை தோரமானனுக்கு மகனாக்குகிறார்கள்! அதாவது, சூரியபக்தன், விஷ்ணு பக்தனாகி, பிறகு சிவபக்தனாகி விடுகிறான்!
  1. ஹூணனான இந்தியனும், ஹூணமாகிய இந்திய சரித்திரமும்: ஹூணன் என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானிலிருந்து வந்திருக்க வேண்டும் (மேலே விளக்கப்பட்டுள்ளது). “மிஹிர் / மிஹிர / மெஹர்” (= சூரியன்) என்ற பெயர் இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஜோடனை செய்யப்பட்டது. ஆனால் பாவம் காஷ்மீரத்திலேயே கல்ஹணருக்கு முன்பு “பத்மமிஹிர” (தரங்கம்.1-18) என்பவர் இருந்ததை கவனிக்கவில்லை! இருந்தாலும், அவரை எடுத்துவிட்டால் போயிற்று, என்பார்கள்! [முன்பு வராஹமிஹிரரையும் ஈரானிலிருந்துதான் வந்தார் என்றார்கள்] ஒரு இந்திய அரசனை, அதிலும் காஷ்மீரத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து சரித்திர-ரீதியாக இருந்த அரசனை மறைத்து இல்லாத ஒரு மிஹிரகுலனை உண்டாக்கி, அவனை “ஹூணனாக்கி”, ஹூணனாக இந்தியாவில் புகுந்து, தோற்றபிறகு காஷ்மீரத்திற்கு அனுப்பி வைக்கப் படும் ஒரு நிலையை இந்திய சரித்திரத்தில்தான் காணலாம்.

Devanampiya Tissa Asoka and Lanka

சித்தாந்தம் போன்ற காரணிகளால் இந்திய சரித்திரம் பாதிக்கப்படுகிறதா?: ஆராய்ச்சி என்று மாய்ந்து-மாய்ந்து இவ்வாறு சரித்திரத்தை புரட்டுகிறார்கள் தலைகீழ் மாற்றங்கள் செய்கிறார்கள், ஆனால், இத்தகைய மோசடிகளை எந்த பிரபல (eminent), முற்போக்குள்ள (progressive), பரந்த-விரிந்த மனதுள்ள (broad-minded), செக்யூலரிஸ (secular), மார்க்ஸிஸ (Marxist) மற்றும் எந்த சரித்திர ஆசிரியருக்கும் தெரியவில்லை! இத்தகைய மோசடிகளுடன், இந்திய சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. இருப்பினும், சில சரித்திர ஆசிரியர்கள், உண்மைகளை அங்கங்கு சொல்லியிருக்கிறார்கள்: “யசோதர்மன் மந்டசோர் கல்வெட்டில் மிஹிரகுல மற்றும் ஹூணர்கள் இருவரையும் குறிப்பிட்டாலும், இருவருன் தனி என்பதனை அறியும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” (ப,197).
R. C. Majumdar and A. S. Pusalkar, A History of the Indian People, Lahore, 1946, p.197, 196 etc.

“மிஹிரகுலன் ஒரு ஹூணன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” (ப.196).

இப்பொழுது, கே.டி. சேத்னா என்பவரும், இந்த விவரங்களைத் தருகிறார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi,
2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese
chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial
Guptas.
இவர் எடுத்துக்காட்டுவதாவது, மிஹிரகுலனின் காலம் 540 CE இல்லை, BCEல்தான் வரும், யுவான் சூவாங் காலத்தில் குப்தர்கள் இருந்திருக்க முடியாது;

அசோகனின் தேதி மாற்றப்பட்டது: அசோகனது காலம் சுமார்.1000 BCE வரை செல்லும்;
K. D. Sethna, Ancient Indian in New Light, Aditya Prakashan, New
Delhi, 1997. ஆங்கிலேயர்களின் காலக்கணக்கியலில் பல முரண்பாடுகள் உள்ளதை
எடுத்துக்காட்டி, இதில் இவர் கொடுக்கும் தேதிகள்:
950-914 BCE – reign of Asoka, thus Pushyamitra came after him.
221-181 BCE – Kumaragupta
181-169 BCE- Skandagupta
140 BCE – Toramana invaded Malva from Kashmir
137 BCE – Toramana died
100 BCE- Mihirakula came to power

இவை இந்திய பாரம்பரிய காலக்கணக்கியல் மற்றும் மேனாட்டு காலக்கணக்கியல், இரண்டிற்கும் மாறுபட்டதாகும். குப்தவசத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனை விடுத்து மௌரியவம்சத்தின் சந்திரகுப்தனை, அலெக்ஸ்சாந்திரன் காலத்துடன் வைத்ததில்தான் இந்திய சரித்திரத்தில் பல குளறுபடிகள் நேர்ந்தன. இதனால் 800 முதல் 1200 வருடங்கள் வரை பல முக்கிய தேதிகளில் வித்தியாசம் வந்துகொண்டே இருக்கும். மேலும், இந்த தேதிகள் எல்லாம் 70 முதல் 150 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலிலேயர்கள் தோராயமாக என்று வைத்துக்கொண்டு circa என்று குறிப்பிட்டு வந்தனர். ஆனால், circaவை விட்டுவிட்டு, நிலைநிறுத்திய தேதிகளைப் போல, பிறகு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கிருஷ்ணமாச்சாரியார் தமது “இந்திய சமஸ்கிருத வரலாறு” என்ற நூலில் எவ்வாறு ஆங்லிலேயர் தேதிகளைக் குறைத்தர்கள் என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஆனால், இவை ஆராய்ச்சிசெய்யும் மாணவர்கள் மற்றும் சிலருக்குத் தான் தெரிய வாய்ப்புள்ளது. தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவதில்லை.
M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature, Motilal Banarasidas, New Delhi, 1993.
D. S. Triveda, Indian Chronoloy, Bharatiya Vidhya Bhawan, Bombay, 1958.
கோட்டா வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலேயர்களின் பல சரித்திர குளறுபடிகளை, திரிபுகளை, ஏன் கள்ள ஆவணங்கள் தயாரித்தது முதலியவற்றை எடுத்துக் காட்டி பல புத்தகங்களை 1950களுள் வெளியிட்டார். இவர் R. C. Majumdar, K. D. Sethna முதலியோருடன் இதைப் பற்றி கடித ததடர்பும் கொண்டிருந்தார். பிறகு, பொள்ளாச்சி மஹாலிங்கத்தின் ஆரார்ச்சி நிறுவனமும் அதன் அடிப்படையிலேயே
சென்று, வானவியல் ரீதியாக தேதிகளை நிறுவ முயற்ச்சி செய்தது.

வேதபிராகாஷ்
29-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

12-05-2017

Gwalior inscription of Mihirakula

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain