Posts Tagged ‘ஜீனர்’

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பதுமுதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

Rakhladas Banerjee and John Msrshall, IVC controversy

புத்தரின் தேதியை குறைப்பது, இந்திய சரித்திர காலத்தைக் குறிப்பது: “அலெக்சாந்தரின் படையெடுப்பிற்கு முன்னர் 326 BCE, இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை,” என்று[1] எதேச்சதிகாரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், மஹாவீரரும், புத்தரும் அவர்களை அடக்கினர். அவர்களது சரித்திர ஆதாரங்களை அழித்து, அவர்களை மறைக்கவே மேனாட்டவர் முயன்றனர். ஆனால், பெரிய சிலைகள், மடாலயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் முதலியவை மறைக்க முடியவில்லை. மேலும், எகிப்திய லக்ஷாரில் இருந்து புத்தர் சிலை அவர்களை அடக்கியது. ஏனெனில், அது புத்தரின் தேதியை 1887-1807 BCEக்கு எடுத்துச் செல்கிறது, அது, புத்தரின் பாரம்பரிய தேதியுடன் ஒத்துப் போகிறது[2]. சந்திர, சூரிய, சந்திர-சூரிய வருடக்கணக்கு பின்பற்றப்பட்ட முறைகளினால், புத்தருடைய தேதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பகாலங்களில் சந்திரமாதக் கணக்கைத்தான் மக்கள் பின்பற்றி வந்தனர். சந்திரனை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அது பூமியை சுற்றி வரும் போது, தேய்பிறை-வளர்பிறை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு, ஆண்டிற்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொண்டனர்.  அந்த 15 நாட்களை “பஞ்சாங்க முறைப்படி[3]” வாரம், திதி[4], கரணம்[5], நட்சத்திரம் மற்றும் யோகம்[6] என்றும் பிரித்துக் கொண்டனர். பௌத்தர்களும் இம்முறையினை உலகம் முழுவதும் பின்பற்றி வந்தனர். இதனால், பௌத்தத்ததின் தொன்மையினை ஏற்றுக் கொண்டால், அத்தகைய காலக்கணக்கீட்டுமுறை, வானவியல் முதலிய ஜானங்களின் தொன்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அது இந்திய வரலாற்றுத் தொன்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், அவர்கள் இதனை எப்படியாவது எதிர்த்து, மறைத்து, காலத்தைக் குறைப்பது என்று முடிவு கொண்டனர்[7].

Dipavamsa, Mahavamsa

தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை உருவாக்கி காலக்கணக்கீட்டை கெடுத்தது: தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை ஆங்கிலேயர் பண்டிதர்களை வைத்து உருவாக்கி, பௌத்தத்தின் தொன்மையினை குறைத்தனர். இதனை, உண்மையான ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்தனர். “இந்தியர்களுக்கு சரித்திர அறிவு இல்லை,” என்ற போது, “ராஜதரங்கனி” அவர்களை மிரட்டியது. அதில் உள்ள ஜைன அசோகன் அவர்களை பயமுருத்தினான். ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே[8]. மகாபாரத தேதியும் திகைக்க வைத்தது. அதாவது, “கட்டுக்கதை, புராணம்” என்பவை எல்லாம் சரித்திரம் ஆனது. இவற்றை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், ஜைன அசோகன் மறைக்கப் பட்டான், அவனது “தேவநாம் பிய திஸ்ஸா” கல்வெட்டுகள், பௌத்த அசோகனுடையது என்று மாற்றி எழுதினார்கள். அதன்படி, அசோகனுடைய காலத்தை 1200 வருடங்கள் குறைத்தனர்.

buddha-at-luxor

புத்தருடைய தேதி, இந்திய சரித்திரத்திற்கு முக்கியமானது: புத்தர் எந்த காலத்தில் இருந்தால் என்ன, நிறைய புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறவர்கள், சரித்திரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். புத்தருடைய தொன்மை, இந்திய சரித்திரத்தின் தொன்மைக்குள்ள ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு படிவுகளின் கீழ், ஒரு பௌத்த சைத்தியத்தை, ரக்லதாஸ் பானர்ஜி கண்டு பிடித்ததை, ஜான் மார்ஷல் மறைத்து, புகைப்படங்களையும் மாயமாக்கி விட்டு, அவருடைய கட்டுரையினையும் வெளியிடாமல் செய்தார்[9]. சில பௌத்த கட்டுமானங்களின் சில ஆடிகள் கீழே 5000 வருட தொன்மையான நாகரிகம் இருந்தத்தை பானர்ஜி கண்டு பிடித்தார். சங்கராச்சார்யா போன்று, புத்த மடாதிபதிகள் தொடர்ந்த போது, அவர்கள் “புத்தர்,” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆதி-தீர்த்தங்கரர், ஆதி-புத்தா போன்ற தத்துவங்கள் ஜைன-பௌத்தங்களில் உள்ளன. “ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் / 1616ம் ஆண்டில் பேரறிவாளன் தோன்றுவான் / புத்தன் தோன்றுவான், என்று மணிமேகலை சொன்னது, என்ன வருடம், என்றால் தெரியவில்லதேன்கிறார்கள். நிச்சயமாக அது மணிமேகலைக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதால், மற்ற காலக்கணக்கீட்டில் வருகின்ற வருடமாகவேண்டும். எப்படியிருந்தாலும் BCEல் தான் வரவேண்டும் என்பதால், அதன் சரித்திர உண்மைநிலயை மறுக்க முடியாது.

Pre-christian Buddhism in Britain - Ireland

பௌத்தமும், மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். உதாரணத்திற்கு, ஏ.ஏ.ஃபூரர் என்பரது வழக்கு திகைப்படைய வைப்பதாக இருக்கிறது[10].  இத்தகைய அந்நியர் எழுதிய சரித்திரத்தை இந்தியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது[11]:

  1. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  2. 2,500 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
  3. 1000 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்

உண்மையில், குழப்புவதற்காகவே, இவ்வாறான தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம், ஏனெனில், முதல் மற்றும் மூன்றாவது தேதிகள் தவறு என்பது பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது, ஆனால், இரண்டாம் தேதி, மேனாட்டவர்ளுக்கு ஒத்துப் போகிறது.

© வேதபிரகாஷ்

30-04-2018

Buddhas skull, China

[1] Referred to as “sheet anchor of Indian history” and denying history before it and mentioning IVC as “Proto-historic,” further historical evidences are also discredited.

[2] R.G.N . Prasad, “The Date of Buddha’s Mahäparinirväna“, Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1986), pp. 77-88. A version of this paper was also read in 1985 at the 7th Conference of the International Association of Buddhist Studies in Bologna.

[3]  வளர்பிறை-தேய்முறை, சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கவனித்து, பதிவு செய்து, கணித்து தயாரிப்பது பஞ்சாங்கம் ஆகும்.

[4] திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன.

[5] ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

[6] சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[2] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

[7] John Bentley, Hindu Astronomy,

[8] http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

[9] Rakhladas Banerjee,

The first round of excavations revealed a Buddhist stupa belonging to the Kusana period (2nd and 3rd centuries). As the area around the stupa was dug up, the archaeological team came upon microliths (tiny flints, part of a bigger tool) and pieces of pottery that did not match anything found earlier. Further excavations revealed a 5,000-year-old civilisation only a few feet below the Buddhist structure. Rakhaldas received a letter from the then director-general of the ASI, H. Hargreaves. The letter came along with a 166-page typewritten document – the article on Mohenjodaro that Rakhaldas had sent Marshall four years ago. The letter read: “Sir John thinks it could be unkind to not let you know that many of your theories are quite untenable and your statements incorrect.” Hargreaves also urged Rakhaldas to get his “report” printed before the book by Marshall was out so “there are no misunderstandings”. The photographs, he informed, had gone missing. The book, Mohenjodaro and the Indus Civilisation, edited by Sir John Marshall was published in 1931. In the foreword, Marshall mentions Rakhaldas’s name as something he “can’t pass over in silence” and says “to him belongs the credit of having discovered if not Mohenjodaro itself, at any rate its high antiquity”.

[10] Alois Anton Führer – Führer had an unusual religious career. He served as a Catholic priest but in 1887 converted to Anglicanism. Following his expulsion from government service in India, Führer made plans to become a Buddhist monk. Quoting the Ceylon Standard, the Journal of the Mahabodhi Society noted: “Much interest has been excited in Buddhist and other circles at the prospect of Dr Führer coming to Ceylon to join the Buddhist priesthood. The Press notices recently made regarding this gentleman have given rise to grave suspicion. We understand that Dr Führer will have an opportunity given him of refuting the charges made against him before he is accepted by the leading Buddhists here as an exponent of the religion of Buddha.” These plans seem to have come to nothing because in 1901 Führer re-converted to the Christian Catholic Church of Switzerland. Führer’s archaeological career ended in disgrace. Under official instructions from the Government of India, Führer was relieved of his positions, his papers seized and his offices inspected by Vincent Arthur Smith on 22 September 1898 Confronted by Smith about his archaeological publications and his report to the Government, Führer was obliged to admit “that every statement in it [the report] was absolutely false.” These activities were presaged by Führer’s publications on Sanskrit texts and law which, as shown by Andrew Huxley, are effectively works of plagiarism, large portions being copied from the writing of Georg Bühler.

[11] வேதபிரகாஷ்,  புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது,

https://buddhismstudies.wordpress.com/2010/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பதுமுதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1)

Buddha Purnima 2018

உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: இன்று புத்த பூர்ணிமா, விஷாக-2018 உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. பௌர்ணமி 29-30 மாலை-காலை வரை, விசாகம்-30-04-2018! புத்தர் பிறந்தது [ஜனனம்], ஞானம் பெற்றது [நிர்யாணம்] மற்றும் காலமானது [முக்தி] எல்லாமே விசாகம்-பௌர்ணமி திதியன்று நடந்துள்ளது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 ஶ்ரீலங்கா, கம்போடியா, மியன்மார், பங்களாதேச நாடுகளில் 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் 29-05-2018 அன்று கொண்டாடப் படுகிறது. திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இரண்டு விதமான பாரம்பரியங்களுக்கு ஏற்றமுறையில் அனுஷ்டிக்கப் படுகிறது. புத்தருடைய தேதி சரியாகக் கணக்கிடப் படவில்லை, ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான தேதிகள் உபயோகத்தில் உள்ளன. புத்தருடைய இறந்த தேதி – 544-543 BCE, 487-486 BCE, 368 BCE, 2420 to 290 BCE மற்றும் அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. 1887-1807 BCE என்பது பாரம்பரிய தேதியாக இருக்கிறது, இது வானவியல் கணக்கீடு மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது[1].

Jesus myth - J M Robertson

பௌத்தத்தின் தொன்மையினை மேனாட்டவர் ஏன் மறைத்து, குறைக்க வேண்டும்?: மேனாட்டு, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், புத்தருடைய சரித்திரத்தைப் படித்த போது,– கன்னித்தன்மை பிறப்பு, குடும்பத் துறப்பு, சீடன் காட்டிக் கொடுத்தது-இறப்பிற்கு காரணம் ஆனது, கடவுளை-தேவனை மறுத்தது – என்று பலவிசயங்களில் கிருத்துவத்திற்கும், அதற்கும் பொருந்தி போவதைக் கண்டனர். கிருத்துவத்திற்கு சரித்திர ஆதாரங்களே இல்லாத நிலையில், பௌத்தத்திற்கு உலகில் பலநாடுகளில் ஆதாரங்கள் இருப்பதை கண்டு கொண்டனர். தவிர, பௌத்தத்தின் தொன்மையினால், கிருத்துவமே பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது என்று கூட அவர்கள் தங்களது ஆராய்ச்சிகளில் முடிவுக்கு வந்தனர்.  இதனால், கிருத்துவ சார்புடைய, கிருத்துவ விசுவாசிகளான மற்றும் கிருத்துவப் பாதிரி-ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படியாவது மறுக்க, மறைக்க மற்றும் மறக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். “கிறிஸ்து கட்டுக்கதை” போப்புகளுக்கே, இடைகாலத்திலிருந்து தெரிந்துள்ளது. போப் லியோ, கார்டினல் பெம்போவிடம், “அந்த கிறிஸ்து கட்டுக்கதை என்ன லாபத்தைத்தான் கொடுக்காமல் இருக்கிறது?,” என்ற கேட்டது தெரிந்த விசயமாக இருக்கிறது[2]. மேலும் ஐரோப்பியாவில் ஜே.எம். ராபர்ட்சன் போன்றோர் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து பற்றிய கட்டுக்கதிகள் பற்றி எழுதினார்கள், அப்பொழுது அவையெல்லாம் இந்தியர்களுக்குத் தெரியாது. “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது[3]ஒருவன் தான் செய்த தவறுகளைபார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில்பாவமன்னிப்புக் கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய வாத-விவாதங்களை கிருத்துவர்கள் விரும்பவில்லை.

Nicolas Notovitich- Myth refuted by Swami Vivekananda

நிக்கோலஸ் நோட்டோவிட்ச் விசயத்திலும், நன்றாகவே அசிங்கப் பட்டனர்: திபெத்திய பௌத்தத்தில் பல ரகசியங்கள் இருப்பதாக, ஐரோப்பியர், கிருத்துவர்கள் நினைத்தனர். அதனால், மாறுவேடங்களில் அங்கு சென்று விசயங்களை அறியச் சென்றனர். நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[4]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[5]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[6].

Mahavira and Buddha.looking alike

ஜைனமும், பௌத்தமும்: ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்டஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும். ஆக மகாவீரரும், புத்தரும் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது. இதிலேயே, காலஜ்கணக்கியல் உதைக்கிறது. ஆனால், மேற்கத்தைய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஜைனத்தை தனி மதமாகவே கருதவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்[8]. மெகன்ஸி ஜைன மதத்த்ஐப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிறகு தான் அது பிரபலமாகியது.

Date of Buddha 1887-1807 BCE
புத்தருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளும், தொடரும் ஆராய்ச்சிகளும்: புத்தருடைய தேதியை அறுதியாக நிலைநிறுத்தமுடியாது என்ற எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் பரவியிருந்த பௌத்த நம்பிக்கையாளர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவை, பௌத்தத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இதனால், இன்றும், புத்தருக்கு பல தேதிகள் உள்ளன என்பதனை அறிந்து, அவற்றை கீழ்கண்டவாறு பகுத்துள்ளனர்:

  1. ஶ்ரீலங்காவில் உபயோகப்படுத்தப் படும் நெடிய காலக்கணக்கீடு [Long chronology (Ceylonese)]: 544-543 BCE.
  2. சரிசெய்யப் பட்ட நெடிய காலக்கணக்கீடு [Corrected long chronology]: 487-486 BCE
  3. குறுகிய காலக்கணக்கீடு [Short chronology (Indian chronology)]: 368 BCE.
  4. பாரம்பரியமாக வழக்கில் உள்ள நெடிய காலக்கணக்கீடு [Buddhist tradition (non-scholar)]: ranges from 2420 to 290 BCE.
  5. அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்ட காலக்கணக்கீடு [Succession of the five patriarchs: Five succession of teachers before Ashoka]: என்றுள்ளது.

இந்தியாவிற்கு வராமலேயே, இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள் முதலியவற்றை வரவழைத்து, லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதங்களை ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர், புத்தருக்கு பல தேதிகள் குற்ப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார் – 2422 BCE, 2148, 2139, 2136, 2135 1366, 1332, 1310; 1058, 1036, 1027; all in BCE. இப்பொழுதோ 300 BCEக்கு முறைக்கிறார்கள். இதிலிருந்தே, அவர்களது ஆராய்ச்சி முறைகளில் ஏதோ தவறாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி செய்யும் போது, காலக்கிரய ஆதாரங்கள், முன்னது எது, பின்னது எது என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடுகிறது. அதனால், அதில் எந்த குழப்பமும் இல்லை.

© வேதபிரகாஷ்

30-04-2018

Vajrapani as Heracles or Zeus, second-century-violence

[1] E.Vedavyas, Astronomical Dating of the Mahabharata War, New Delhi, 1986, pp. 223-229.

[2] Pope Leo X (1475-1521) was privy to the truth based on his high rank, when the bishop recounts an alleged exchange between Cardinal Bembo (1470-1547) and Pope Leo X, with the latter supposedly exclaiming, “What profit has not that fable of Christ brought us!”

Encyclopedia Britannica, XXIII, 87. (Emph. added.) See also Walker, 471; Taylor, 35. Bale’s original Latin is as follows: “Quantum nobis nostrisque ea de Christo fabula profuerit, satis est omnibus saeculis notum.” (Roscoe, III, 339.)

[3] Edward J. Thomas, Life of Buddha, 1927, p.2

[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[5] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta, (1987).

[6] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

[7] Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

[8] Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

Mahavira and Buddha.looking alike

ஜைன-பௌத்த சந்திப்புகள், உரையாடல்கள் மற்றும் எதிர்ப்புகள்: ஜைனம் பௌத்தத்திற்கு முற்பட்டது என்பதில் சரித்திர ரீதியாக எந்த ஐயமும் இல்லை, ஆனால் சரித்திர ஆதாரம் தான் இல்லை, அதாவது ஜைன காலத்தைச் சேர்ந்த எழுதபட்ட ஆவணங்கள் / கல்வெட்டுகள்தாம் இல்லை. எனவே, மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள், ஜைனத்தின் தொன்மை மற்றும் சரித்திரத்தை மறைத்து விட்டனர். பாவம், ஜைனர்களும் எழுத்தறிவு இல்லாமலேயே பலதுறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர்! அது எப்படி என்பதைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கும் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மட்டுமன்றி, அவர்களது மதத்தலைவர்களான மஹாவீரர் மற்றும் புத்தர் இவர்களின் உருவ சிலைகளிலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமல் சிரமமாகவே இருந்தது.

Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932, p.286-287.

எழுத்தறிவு இல்லாமல் எப்படி சிற்பங்கள் செதுக்கப்பட்டன?: எப்படி ஜைன சிற்பங்கள் பௌத்த சிற்பங்கள் என்று அடையாளங்காணப்பட்டு, ஜைனத்தின் கலை மற்றும் அதன் தொன்மையினையும் மறைத்தனர். சிற்பக்கலை இந்தியாவில் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கவில்லை என்றால், சிற்பிகள் அத்தகைய உயிரோட்டமுள்ள மஹாவீரர்- புத்தர் சிலைகளை வடித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாது, இந்திய எழுத்துமுறை அசோகன் காலத்தில்தான் திடீரென்று பிறந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டு, இம்மாதிரி காலகக்கணக்கீட்டைக் குறைத்து சரித்திரத்தையும் குறைக்கின்றனர்.

* கல்வேலை தெரிந்தவர்களுக்கு, சிற்பங்களை வடிப்பவர்களுக்கு எழுததெரியாமலா போய்விடும்?

* கணிதம், வடிவக்கணிதம், வடிவமைப்பியல், பாறையியல், உலோகவியல், நுணுக்கமான கருவிகளை உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றை அறிந்தவர்கள் எழுத்தெரியாத மண்டுகளாக மண்டுகளாக இருந்துள்ளனர் என்பது சரித்திர புதிரே!

9வது-7வது BCE நூற்றாண்டுகளில் ஜைன கலை-கட்டிடங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை!

இருப்பினும், ஜைன பண்டிதர்கள் ஜைனத்தின் கலை-கட்டிடங்களின் தொன்மை சிந்துசமவெளி நாகரிகத்திற்கு செல்கிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
“பசுபதி” எனப்படுகின்றவர்தாம், ரிஷபதேவராகிய முதல் தீர்த்தங்கரர். ஜோஸப் காம்பெல், ஜான் கொல்லர் முதலியோரும் அத்தகையக் கருத்தை வைத்துள்ளனர்.
Joseph Campbell, Oriental Mythology, The Viking Press, New York, 1962, pp.219-220.
John Koller, The Indian Way, MacMillan Publishing Co., New York, 1982, p.113.

இதன்படி பார்த்தால், ஜைனத்தின் தொன்மை 2250-1950 BCE காலத்திற்கு செல்கிறது. ஆகவே, அது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்தியதரை நாடுகளில் பரவியது சாத்தியமே. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்.
Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

Greek philosophers

மேனாட்டவர் ஜைனத்தின் தொன்மையினை மறைத்தது, பௌத்தத்தின் காலத்தைக் குறைத்தது: இ. ஜே. தாமஸ் தமது “புத்தரின் வாழ்க்கை” என்ற நூலில் (1927 வருட பத்திப்பு), கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        இந்தியாவில் “ஜிம்னோஃபிஸ்டுகள்” அல்லது திறந்தமேனி சாமியார்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பௌத்தர்கள் இல்லை (முன்னுரை, ப.XIV).

•        மனிதனுக்கு வேண்டிய தத்துவங்கள் எல்லாம், அந்த திகம்பர இந்தியர்களிடம் இருந்தன (ப.104).

•        ஸ்டிராபோ, “சர்மன்”களை “ஜெர்மன்”கள் என்றும், பர்பைரியஸ் சுமரியன்கள் என்றும் குறிப்பிட்டனர். அந்த சாமியார்கள், ஜைனம் அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் (ப.105).

•        அலெக்ஸ்சாந்தர் தக்ஸசீலத்தில், இத்தகைய நிர்வாண துறவியர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்களைப் பிடித்தபோது, அவர்களுள் டௌலானஸ் என்ற வயாதானவர் அலெக்ஸ்சாந்தருடன் செல்ல மறுத்ததுடன், மற்றவரையும் அவனுடன் செல்ல தடுத்தார். பிறகு கலானஸ் என்பவனை வெற்றிக் கொண்டு பிடித்துச் சென்றதாகத் தெரிகிறது (ப.115).

•        “சாக்ரடீஸ் ஆத்மாவானது, எவ்வாறு ஒரு பறவை கூண்டில் அடைப்பட்டிருக்கிறதோ, அது மாதிரி, உடலில் சிறையிடப்பட்டுள்ளது என்கிறார். இது பைதகோரஸின் தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது. பைத்தாகோரஸ்
இந்தியாவிற்கு சென்றிருந்ததால், அத்தகைய தத்துவம் இந்தியாவினின்று பெறப்பட்டது என நம்பப்படுகிறது” (ப.122).

Alexander meeting gymnophists -medieval period

ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் “விஞ்ஞான ரீதியில் மதங்களின் ஒப்புமை” என்ற தமது நூலில், கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        “திபெத்தியர், மங்கோலியர் மற்றும் சீனர்களின் கோதமர் ஒரு ஜைனராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் 10-11 BCE நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். திபெத்தியர் அவர் 916ல் பிறந்து, 881ல் புத்தனாகி தனது 35வது வயது வரை போதனை செய்து 851 BCEல் இறந்ததாக குறிப்பிடுகின்றனர். இது பார்ஸவ முனிவரின் காலத்தை ஒட்டிவருகின்றது” (முன்னுரை, ப.XIX). [இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர தேதிகளை ஒத்துபோகவில்லை என்பது நோக்கத்தக்கது].

•        “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது” (ப.2).

•        “அசோகனும் ஜைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டவில்லை, ஏனெனில் தனது ஆட்சிகாலத்தில் 12ம் வருடத்தில் தான் தனது மதநம்பிக்கையை பிரகடனப் படுத்திக் கொள்கிறான். ஆகையால் அவனது கல்வெட்டு சாஸனங்கள் எல்லாம் ஒரு ஜைன ஆட்சியாளரையேக் காட்டிகிறது” (ப.20).

•        அப்துல் ஃபஸலின் “ஐனி-அக்பரி” என்ற நூலின்படி, தனது பிரதிநிதி உஜ்ஜயினியில் 260 BCEல் இருக்கும்போது, தந்தை பிந்துசாரர் மற்றும் தாத்தா சந்திரகுப்தர் மகத பேரரசை ஆண்டு கொண்டிருந்தபோதும், அசோகன் காஷ்மீரத்தில் ஜைனத்தை ஆதரித்தான் என்பதாகும். புத்தன் இறந்து நூறு ஆண்டுகள் கழிந்தும், பௌத்தத்தைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை, ஏனெனில், அது ஜைனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அசோகன் அவர்களிடையேதான் தனது மென்மையான-மிருதுவான ஜைனத்தை வாழ்க்கையின் புனிதத்துவம், அமைதி, தர்மம், சகோதரத்துவம் முதலிய கொள்கைகளுடன் பரப்பி வந்தான். அதுமட்டுமல்லாது, தனது கல்வெட்டுகளில் ஜைனர்களுக்குப் பிரியமான, “தேவநாம் பியா திஸ்ஸா” (கடவுளுக்கு/தேவனுக்குப் பிரியமான திஸ்ஸா) என்றுதான் தன்னை அழைத்துக் குறிப்பிட்டுக் கொண்டான் (ப.29). [“அசோகனது கல்வெட்டுகள்” தேவநாம் பியா திஸ்ஸா மற்றும் அசோகன் என்ற இருவரது கல்வெட்டுகள் ஆகும். முன்னவர் ஜைன மதத்தைச் சேர்ந்த அசோகன் (கல்ஹனர் குறிப்பிட்டது), பின்னவர், பௌத்தத்தைச் சேர்ந்த அசோகன். ஆனால் வின்சென்டு ஸ்மித் வலுக்கட்டாயமாக இருவரும் ஒருவரே என்று வாதிட்டு, முன்னவரை மறைத்து விட்டான்].

Alexander meeting gymnophists 1470-80 CE

•        பிறகுதான், கௌதம சாக்கியமுனி போதிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜைன-புத்த மதம் சித்தாந்தங்களுடனும், வழிமுறைகளுடனும் இந்தியாவில் பரவியிருந்தது வந்தது ………… நிச்சயமாக அது பார்ஸ்வ மற்றும் மஹாவீரருக்கு முன்பு இருந்தது………….. 7ம் நூற்றாண்டு BCEலிருந்து இந்தியா, அம்மதத்தின் மையமாக இருந்தது. இமாலயத்திற்கு அப்பால், ஓக்ஸியானா, பாக்டிரீயா, காஸ்பியானா முதலிய பகுதிகளில் – அதே மாதிரியான கருத்துகள் மற்றும் பழக்க-வழக்கங்கள் பரவ ஆரம்பிக்கும் நிலை இருந்தது. கீழ்திசை உலகத்தில் தமது சந்நியாசிகளை 7ம் நூற்றாண்டிற்கு BCE முன்பே உலாவர செய்தனர் என்று சரித்திர ரீதியில் தெரிகின்றது. சீனாவிலிருந்து காஸ்பியன் வரை ஜைன-பௌத்தம் போதிக்கப்பட்டது என்பதனை காரணங்களுடன் நாம் நம்பலாம்…………அது மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸியானா மற்றும் இமாலயத்தின் வடக்கில் இருந்தது” (ப.29). [மஹாவீரர் காலம் 599-529 BCE, ஆகவே மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனும்போது 2600 BCEல் / 4600 YBPல் அத்தகைய மதம் அங்கு இருந்தது என்ன என்பது ஆய்விற்குறியது].

•        ஆகையால்தான், நாம் ஜெல்மோக்ஸிஸ், பைத்தோகோரஸ் முதலியோர் 7வது-6வது BCE நூற்றாண்டுகளில் ஜைனர்கள்-பௌத்தர்களின் குருவான “புத்தர் போதித்தது” போன்று போதித்து வந்தனர் என்பதைக் காணமுடிகின்றது (p.32).

•        ஸ்டிராபோ, குறிப்பிடுவதாவது, “த்ரகியன் என்ற குழுமம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர். மாசி எனப்படுகின்ற அவர்களது சகோதரர்கள் உயிருள்ள எதையும் உண்ணாமல் இருந்தனர்.” (p.32)

•        7ம் நூற்றாண்டில் BCE, ஹோமர் சொல்வதாவது, “அவர்களுள் பெரும்பாலோர் ……….. பாலைக்குடித்தே உயிர்வாழ்கின்றனர்……..பணத்திற்கு ஆசைபடுவதில்லை…….. ஜான் பாப்திஸ்து, ஏசு மற்றும் அவர்களது சீடர்கள் முதலியோர் அத்தகைய எஸ்ஸென் எனப்படுகின்ற ஆசியர்களைப் போன்றவர்களே (ஆசியாவைச் சார்ந்தவர்கள்)” (p.32).

•        ஜோஸஃபஸ் சொல்வதாவது, “இந்த எஸ்ஸென் சகோதரர் பழங்கால தேஸே மக்களைப் போன்று, அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, மது அருந்துவதில்லை, வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, தனியாக வாழ்கிறார்கள், பலி-சடங்குகள் செய்வதில்லை, ஆனால் ஜைனர்களைப் போன்று ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதிக்கின்றனர்” (ப.32).

•        ஜெல்மோக்ஸிஸ் ஜைனர்களை விட அதிகமாகவே ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதித்துள்ளார் (ப.35).

•        அவர், “இந்திய வாழ்க்கைச் சுழற்ச்சி……. உடலை விட்டு உடல் செல்லும் ஆத்மா……..மனிதனைப் போன்று விலங்குகளும் ஆத்மாக்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் துன்புறுத்தக்கூடாது……..” என்றெல்லாம் போதித்தார் (ப.36).

•        கெலே-சிரியாவைச் சேர்ந்த யூதர்கள், இந்தியர்களே ஆவர். அவர்கள் கிழக்கு
கலானி மற்றும் இக்ஷ்வாகு / கரும்பு-மக்கள் (இந்தியாவிலிருந்து வந்த) ஆவர். ஜூதேயாவில் வாழ்ந்த யூதர்கள், எஸ்ஸென்களே ஆவர், அவர்கள் இந்திய தத்துவ ஞானிகளிடமிருந்து உறுதியான மனப்பாங்கு, உணவு மற்றும் மனசாட்சி முதலியவை வாழ்க்கையில் தேவை என்பதனைப் பெற்றனர். கிரேக்கர்கள் அவர்களை சிரியர்கள் என்று தவறாக அடையாளங்கொண்டாலும், அவர்கள் ஜைன-பௌத்தர்களே ஆவர்
(ப.46).

•        202-193 BCEல், ஹான் வம்சம் சீனாவில் வலுப்பெற்றது. நூல்களை தொகுப்பவர், சூய் 600 CE காலம் வரை சீனா பௌத்தத்தை அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே அதற்கு முன்பு 200 BCEக்கு – முன்பு இருந்தது ஜைன-பௌத்தமே ஆகும் (ப.67).

Black Buddha - 1

மேற்கண்ட விவரங்களிலிருந்து அறிவதாவது, பௌத்தம் தோன்றி தனி மதமாக அடையாளங்காணும் முன்பே அத்தகைய ஒரு மதம் பாரதம் மட்டுமல்லாது, மத்தியதரைகடல் நாடுகள், மத்திய ஆசியா, சீனா முதலிய பகுதிகளிலும் இருந்தது தெரிகிறது. சில மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் அதனை எடுத்துக் காட்டியும், ஆதிக்க வர்க்க-ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சரித்திர புத்தக ஆசிரியர்கள் அந்த விஷயங்களை மறைத்து எழுதினர் எனத்தெரிகிறது. அவ்வாறு பௌத்தம், புத்தம் போன்ற மதம், ஜைன-பௌத்தம், ஜைனம் முதலியவை உலகம் முழுவதும் பரவியிருந்தபொது, அமைதியான நிலை இருந்தது காட்டுகிறது.

ஆகவே ஜைனத்தை மறைத்து தவிர்த்து, தனியாக எந்தவித பௌத்தமும் எழுந்திருக்க முடியாது. நிச்சயமாக ஜைனத்திலிருந்து, பௌத்தம் அஹிம்சாவாதத்தில் வேறுபட்டு தன்னை நீர்த்துக் கொண்டது, அத்தகைய மக்களை கவரவே அவ்வாறு சமரசம் செய்து கொண்டது எனத்தெரிகிறது. அதனால் தான் புத்தர் புலால் உண்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 81வது வயதில் பன்றிக்கறி / மாமிசம் உண்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் எனத் தெரிகிறது. பௌத்தர்களும் சரியான மாமிச உணவு உண்பவரே. எனவே அவர்களது அஹிம்சை மற்ற உயிர்களை வதைக்காதே போன்ற கொள்கைகள் செல்லுபடியாகாது.

வேதபிரகாஷ்
17-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Was Buddha a black - some sculptures with curled hair etc- more