Posts Tagged ‘அசோகன்’

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பதுமுதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

Rakhladas Banerjee and John Msrshall, IVC controversy

புத்தரின் தேதியை குறைப்பது, இந்திய சரித்திர காலத்தைக் குறிப்பது: “அலெக்சாந்தரின் படையெடுப்பிற்கு முன்னர் 326 BCE, இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை,” என்று[1] எதேச்சதிகாரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், மஹாவீரரும், புத்தரும் அவர்களை அடக்கினர். அவர்களது சரித்திர ஆதாரங்களை அழித்து, அவர்களை மறைக்கவே மேனாட்டவர் முயன்றனர். ஆனால், பெரிய சிலைகள், மடாலயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் முதலியவை மறைக்க முடியவில்லை. மேலும், எகிப்திய லக்ஷாரில் இருந்து புத்தர் சிலை அவர்களை அடக்கியது. ஏனெனில், அது புத்தரின் தேதியை 1887-1807 BCEக்கு எடுத்துச் செல்கிறது, அது, புத்தரின் பாரம்பரிய தேதியுடன் ஒத்துப் போகிறது[2]. சந்திர, சூரிய, சந்திர-சூரிய வருடக்கணக்கு பின்பற்றப்பட்ட முறைகளினால், புத்தருடைய தேதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பகாலங்களில் சந்திரமாதக் கணக்கைத்தான் மக்கள் பின்பற்றி வந்தனர். சந்திரனை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அது பூமியை சுற்றி வரும் போது, தேய்பிறை-வளர்பிறை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு, ஆண்டிற்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொண்டனர்.  அந்த 15 நாட்களை “பஞ்சாங்க முறைப்படி[3]” வாரம், திதி[4], கரணம்[5], நட்சத்திரம் மற்றும் யோகம்[6] என்றும் பிரித்துக் கொண்டனர். பௌத்தர்களும் இம்முறையினை உலகம் முழுவதும் பின்பற்றி வந்தனர். இதனால், பௌத்தத்ததின் தொன்மையினை ஏற்றுக் கொண்டால், அத்தகைய காலக்கணக்கீட்டுமுறை, வானவியல் முதலிய ஜானங்களின் தொன்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அது இந்திய வரலாற்றுத் தொன்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், அவர்கள் இதனை எப்படியாவது எதிர்த்து, மறைத்து, காலத்தைக் குறைப்பது என்று முடிவு கொண்டனர்[7].

Dipavamsa, Mahavamsa

தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை உருவாக்கி காலக்கணக்கீட்டை கெடுத்தது: தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை ஆங்கிலேயர் பண்டிதர்களை வைத்து உருவாக்கி, பௌத்தத்தின் தொன்மையினை குறைத்தனர். இதனை, உண்மையான ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்தனர். “இந்தியர்களுக்கு சரித்திர அறிவு இல்லை,” என்ற போது, “ராஜதரங்கனி” அவர்களை மிரட்டியது. அதில் உள்ள ஜைன அசோகன் அவர்களை பயமுருத்தினான். ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே[8]. மகாபாரத தேதியும் திகைக்க வைத்தது. அதாவது, “கட்டுக்கதை, புராணம்” என்பவை எல்லாம் சரித்திரம் ஆனது. இவற்றை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், ஜைன அசோகன் மறைக்கப் பட்டான், அவனது “தேவநாம் பிய திஸ்ஸா” கல்வெட்டுகள், பௌத்த அசோகனுடையது என்று மாற்றி எழுதினார்கள். அதன்படி, அசோகனுடைய காலத்தை 1200 வருடங்கள் குறைத்தனர்.

buddha-at-luxor

புத்தருடைய தேதி, இந்திய சரித்திரத்திற்கு முக்கியமானது: புத்தர் எந்த காலத்தில் இருந்தால் என்ன, நிறைய புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறவர்கள், சரித்திரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். புத்தருடைய தொன்மை, இந்திய சரித்திரத்தின் தொன்மைக்குள்ள ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு படிவுகளின் கீழ், ஒரு பௌத்த சைத்தியத்தை, ரக்லதாஸ் பானர்ஜி கண்டு பிடித்ததை, ஜான் மார்ஷல் மறைத்து, புகைப்படங்களையும் மாயமாக்கி விட்டு, அவருடைய கட்டுரையினையும் வெளியிடாமல் செய்தார்[9]. சில பௌத்த கட்டுமானங்களின் சில ஆடிகள் கீழே 5000 வருட தொன்மையான நாகரிகம் இருந்தத்தை பானர்ஜி கண்டு பிடித்தார். சங்கராச்சார்யா போன்று, புத்த மடாதிபதிகள் தொடர்ந்த போது, அவர்கள் “புத்தர்,” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆதி-தீர்த்தங்கரர், ஆதி-புத்தா போன்ற தத்துவங்கள் ஜைன-பௌத்தங்களில் உள்ளன. “ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் / 1616ம் ஆண்டில் பேரறிவாளன் தோன்றுவான் / புத்தன் தோன்றுவான், என்று மணிமேகலை சொன்னது, என்ன வருடம், என்றால் தெரியவில்லதேன்கிறார்கள். நிச்சயமாக அது மணிமேகலைக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதால், மற்ற காலக்கணக்கீட்டில் வருகின்ற வருடமாகவேண்டும். எப்படியிருந்தாலும் BCEல் தான் வரவேண்டும் என்பதால், அதன் சரித்திர உண்மைநிலயை மறுக்க முடியாது.

Pre-christian Buddhism in Britain - Ireland

பௌத்தமும், மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். உதாரணத்திற்கு, ஏ.ஏ.ஃபூரர் என்பரது வழக்கு திகைப்படைய வைப்பதாக இருக்கிறது[10].  இத்தகைய அந்நியர் எழுதிய சரித்திரத்தை இந்தியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது[11]:

  1. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  2. 2,500 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
  3. 1000 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்

உண்மையில், குழப்புவதற்காகவே, இவ்வாறான தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம், ஏனெனில், முதல் மற்றும் மூன்றாவது தேதிகள் தவறு என்பது பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது, ஆனால், இரண்டாம் தேதி, மேனாட்டவர்ளுக்கு ஒத்துப் போகிறது.

© வேதபிரகாஷ்

30-04-2018

Buddhas skull, China

[1] Referred to as “sheet anchor of Indian history” and denying history before it and mentioning IVC as “Proto-historic,” further historical evidences are also discredited.

[2] R.G.N . Prasad, “The Date of Buddha’s Mahäparinirväna“, Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1986), pp. 77-88. A version of this paper was also read in 1985 at the 7th Conference of the International Association of Buddhist Studies in Bologna.

[3]  வளர்பிறை-தேய்முறை, சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கவனித்து, பதிவு செய்து, கணித்து தயாரிப்பது பஞ்சாங்கம் ஆகும்.

[4] திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன.

[5] ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

[6] சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[2] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

[7] John Bentley, Hindu Astronomy,

[8] http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

[9] Rakhladas Banerjee,

The first round of excavations revealed a Buddhist stupa belonging to the Kusana period (2nd and 3rd centuries). As the area around the stupa was dug up, the archaeological team came upon microliths (tiny flints, part of a bigger tool) and pieces of pottery that did not match anything found earlier. Further excavations revealed a 5,000-year-old civilisation only a few feet below the Buddhist structure. Rakhaldas received a letter from the then director-general of the ASI, H. Hargreaves. The letter came along with a 166-page typewritten document – the article on Mohenjodaro that Rakhaldas had sent Marshall four years ago. The letter read: “Sir John thinks it could be unkind to not let you know that many of your theories are quite untenable and your statements incorrect.” Hargreaves also urged Rakhaldas to get his “report” printed before the book by Marshall was out so “there are no misunderstandings”. The photographs, he informed, had gone missing. The book, Mohenjodaro and the Indus Civilisation, edited by Sir John Marshall was published in 1931. In the foreword, Marshall mentions Rakhaldas’s name as something he “can’t pass over in silence” and says “to him belongs the credit of having discovered if not Mohenjodaro itself, at any rate its high antiquity”.

[10] Alois Anton Führer – Führer had an unusual religious career. He served as a Catholic priest but in 1887 converted to Anglicanism. Following his expulsion from government service in India, Führer made plans to become a Buddhist monk. Quoting the Ceylon Standard, the Journal of the Mahabodhi Society noted: “Much interest has been excited in Buddhist and other circles at the prospect of Dr Führer coming to Ceylon to join the Buddhist priesthood. The Press notices recently made regarding this gentleman have given rise to grave suspicion. We understand that Dr Führer will have an opportunity given him of refuting the charges made against him before he is accepted by the leading Buddhists here as an exponent of the religion of Buddha.” These plans seem to have come to nothing because in 1901 Führer re-converted to the Christian Catholic Church of Switzerland. Führer’s archaeological career ended in disgrace. Under official instructions from the Government of India, Führer was relieved of his positions, his papers seized and his offices inspected by Vincent Arthur Smith on 22 September 1898 Confronted by Smith about his archaeological publications and his report to the Government, Führer was obliged to admit “that every statement in it [the report] was absolutely false.” These activities were presaged by Führer’s publications on Sanskrit texts and law which, as shown by Andrew Huxley, are effectively works of plagiarism, large portions being copied from the writing of Georg Bühler.

[11] வேதபிரகாஷ்,  புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது,

https://buddhismstudies.wordpress.com/2010/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மதரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையாபொய்யா? (14)

T W Rhys Davids Buddhist scholar

ரைஸ் டேவிட்ஸ் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.

Buddhism and violence

புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக்  கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.

Persecution of the Buddhists in India - Sasanka as per Bana and Zuanzang

சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sasanka

மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sudhanvan

குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மதரீதியிலான தண்டனை:  கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).

பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- nothing mentioned in Pali texts

பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மதரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).

பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.

 

கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

சகிப்புத்தன்மைசிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- acknowledging John Ware Edgar

ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு  ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

 

வேதபிரகாஷ்
01-10-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப் பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

 

15-05-2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

Mahavira and Buddha.looking alike

ஜைன-பௌத்த சந்திப்புகள், உரையாடல்கள் மற்றும் எதிர்ப்புகள்: ஜைனம் பௌத்தத்திற்கு முற்பட்டது என்பதில் சரித்திர ரீதியாக எந்த ஐயமும் இல்லை, ஆனால் சரித்திர ஆதாரம் தான் இல்லை, அதாவது ஜைன காலத்தைச் சேர்ந்த எழுதபட்ட ஆவணங்கள் / கல்வெட்டுகள்தாம் இல்லை. எனவே, மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள், ஜைனத்தின் தொன்மை மற்றும் சரித்திரத்தை மறைத்து விட்டனர். பாவம், ஜைனர்களும் எழுத்தறிவு இல்லாமலேயே பலதுறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர்! அது எப்படி என்பதைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கும் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மட்டுமன்றி, அவர்களது மதத்தலைவர்களான மஹாவீரர் மற்றும் புத்தர் இவர்களின் உருவ சிலைகளிலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமல் சிரமமாகவே இருந்தது.

Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932, p.286-287.

எழுத்தறிவு இல்லாமல் எப்படி சிற்பங்கள் செதுக்கப்பட்டன?: எப்படி ஜைன சிற்பங்கள் பௌத்த சிற்பங்கள் என்று அடையாளங்காணப்பட்டு, ஜைனத்தின் கலை மற்றும் அதன் தொன்மையினையும் மறைத்தனர். சிற்பக்கலை இந்தியாவில் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கவில்லை என்றால், சிற்பிகள் அத்தகைய உயிரோட்டமுள்ள மஹாவீரர்- புத்தர் சிலைகளை வடித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாது, இந்திய எழுத்துமுறை அசோகன் காலத்தில்தான் திடீரென்று பிறந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டு, இம்மாதிரி காலகக்கணக்கீட்டைக் குறைத்து சரித்திரத்தையும் குறைக்கின்றனர்.

* கல்வேலை தெரிந்தவர்களுக்கு, சிற்பங்களை வடிப்பவர்களுக்கு எழுததெரியாமலா போய்விடும்?

* கணிதம், வடிவக்கணிதம், வடிவமைப்பியல், பாறையியல், உலோகவியல், நுணுக்கமான கருவிகளை உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றை அறிந்தவர்கள் எழுத்தெரியாத மண்டுகளாக மண்டுகளாக இருந்துள்ளனர் என்பது சரித்திர புதிரே!

9வது-7வது BCE நூற்றாண்டுகளில் ஜைன கலை-கட்டிடங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை!

இருப்பினும், ஜைன பண்டிதர்கள் ஜைனத்தின் கலை-கட்டிடங்களின் தொன்மை சிந்துசமவெளி நாகரிகத்திற்கு செல்கிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
“பசுபதி” எனப்படுகின்றவர்தாம், ரிஷபதேவராகிய முதல் தீர்த்தங்கரர். ஜோஸப் காம்பெல், ஜான் கொல்லர் முதலியோரும் அத்தகையக் கருத்தை வைத்துள்ளனர்.
Joseph Campbell, Oriental Mythology, The Viking Press, New York, 1962, pp.219-220.
John Koller, The Indian Way, MacMillan Publishing Co., New York, 1982, p.113.

இதன்படி பார்த்தால், ஜைனத்தின் தொன்மை 2250-1950 BCE காலத்திற்கு செல்கிறது. ஆகவே, அது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்தியதரை நாடுகளில் பரவியது சாத்தியமே. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்.
Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

Greek philosophers

மேனாட்டவர் ஜைனத்தின் தொன்மையினை மறைத்தது, பௌத்தத்தின் காலத்தைக் குறைத்தது: இ. ஜே. தாமஸ் தமது “புத்தரின் வாழ்க்கை” என்ற நூலில் (1927 வருட பத்திப்பு), கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        இந்தியாவில் “ஜிம்னோஃபிஸ்டுகள்” அல்லது திறந்தமேனி சாமியார்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பௌத்தர்கள் இல்லை (முன்னுரை, ப.XIV).

•        மனிதனுக்கு வேண்டிய தத்துவங்கள் எல்லாம், அந்த திகம்பர இந்தியர்களிடம் இருந்தன (ப.104).

•        ஸ்டிராபோ, “சர்மன்”களை “ஜெர்மன்”கள் என்றும், பர்பைரியஸ் சுமரியன்கள் என்றும் குறிப்பிட்டனர். அந்த சாமியார்கள், ஜைனம் அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் (ப.105).

•        அலெக்ஸ்சாந்தர் தக்ஸசீலத்தில், இத்தகைய நிர்வாண துறவியர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்களைப் பிடித்தபோது, அவர்களுள் டௌலானஸ் என்ற வயாதானவர் அலெக்ஸ்சாந்தருடன் செல்ல மறுத்ததுடன், மற்றவரையும் அவனுடன் செல்ல தடுத்தார். பிறகு கலானஸ் என்பவனை வெற்றிக் கொண்டு பிடித்துச் சென்றதாகத் தெரிகிறது (ப.115).

•        “சாக்ரடீஸ் ஆத்மாவானது, எவ்வாறு ஒரு பறவை கூண்டில் அடைப்பட்டிருக்கிறதோ, அது மாதிரி, உடலில் சிறையிடப்பட்டுள்ளது என்கிறார். இது பைதகோரஸின் தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது. பைத்தாகோரஸ்
இந்தியாவிற்கு சென்றிருந்ததால், அத்தகைய தத்துவம் இந்தியாவினின்று பெறப்பட்டது என நம்பப்படுகிறது” (ப.122).

Alexander meeting gymnophists -medieval period

ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் “விஞ்ஞான ரீதியில் மதங்களின் ஒப்புமை” என்ற தமது நூலில், கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        “திபெத்தியர், மங்கோலியர் மற்றும் சீனர்களின் கோதமர் ஒரு ஜைனராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் 10-11 BCE நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். திபெத்தியர் அவர் 916ல் பிறந்து, 881ல் புத்தனாகி தனது 35வது வயது வரை போதனை செய்து 851 BCEல் இறந்ததாக குறிப்பிடுகின்றனர். இது பார்ஸவ முனிவரின் காலத்தை ஒட்டிவருகின்றது” (முன்னுரை, ப.XIX). [இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர தேதிகளை ஒத்துபோகவில்லை என்பது நோக்கத்தக்கது].

•        “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது” (ப.2).

•        “அசோகனும் ஜைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டவில்லை, ஏனெனில் தனது ஆட்சிகாலத்தில் 12ம் வருடத்தில் தான் தனது மதநம்பிக்கையை பிரகடனப் படுத்திக் கொள்கிறான். ஆகையால் அவனது கல்வெட்டு சாஸனங்கள் எல்லாம் ஒரு ஜைன ஆட்சியாளரையேக் காட்டிகிறது” (ப.20).

•        அப்துல் ஃபஸலின் “ஐனி-அக்பரி” என்ற நூலின்படி, தனது பிரதிநிதி உஜ்ஜயினியில் 260 BCEல் இருக்கும்போது, தந்தை பிந்துசாரர் மற்றும் தாத்தா சந்திரகுப்தர் மகத பேரரசை ஆண்டு கொண்டிருந்தபோதும், அசோகன் காஷ்மீரத்தில் ஜைனத்தை ஆதரித்தான் என்பதாகும். புத்தன் இறந்து நூறு ஆண்டுகள் கழிந்தும், பௌத்தத்தைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை, ஏனெனில், அது ஜைனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அசோகன் அவர்களிடையேதான் தனது மென்மையான-மிருதுவான ஜைனத்தை வாழ்க்கையின் புனிதத்துவம், அமைதி, தர்மம், சகோதரத்துவம் முதலிய கொள்கைகளுடன் பரப்பி வந்தான். அதுமட்டுமல்லாது, தனது கல்வெட்டுகளில் ஜைனர்களுக்குப் பிரியமான, “தேவநாம் பியா திஸ்ஸா” (கடவுளுக்கு/தேவனுக்குப் பிரியமான திஸ்ஸா) என்றுதான் தன்னை அழைத்துக் குறிப்பிட்டுக் கொண்டான் (ப.29). [“அசோகனது கல்வெட்டுகள்” தேவநாம் பியா திஸ்ஸா மற்றும் அசோகன் என்ற இருவரது கல்வெட்டுகள் ஆகும். முன்னவர் ஜைன மதத்தைச் சேர்ந்த அசோகன் (கல்ஹனர் குறிப்பிட்டது), பின்னவர், பௌத்தத்தைச் சேர்ந்த அசோகன். ஆனால் வின்சென்டு ஸ்மித் வலுக்கட்டாயமாக இருவரும் ஒருவரே என்று வாதிட்டு, முன்னவரை மறைத்து விட்டான்].

Alexander meeting gymnophists 1470-80 CE

•        பிறகுதான், கௌதம சாக்கியமுனி போதிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜைன-புத்த மதம் சித்தாந்தங்களுடனும், வழிமுறைகளுடனும் இந்தியாவில் பரவியிருந்தது வந்தது ………… நிச்சயமாக அது பார்ஸ்வ மற்றும் மஹாவீரருக்கு முன்பு இருந்தது………….. 7ம் நூற்றாண்டு BCEலிருந்து இந்தியா, அம்மதத்தின் மையமாக இருந்தது. இமாலயத்திற்கு அப்பால், ஓக்ஸியானா, பாக்டிரீயா, காஸ்பியானா முதலிய பகுதிகளில் – அதே மாதிரியான கருத்துகள் மற்றும் பழக்க-வழக்கங்கள் பரவ ஆரம்பிக்கும் நிலை இருந்தது. கீழ்திசை உலகத்தில் தமது சந்நியாசிகளை 7ம் நூற்றாண்டிற்கு BCE முன்பே உலாவர செய்தனர் என்று சரித்திர ரீதியில் தெரிகின்றது. சீனாவிலிருந்து காஸ்பியன் வரை ஜைன-பௌத்தம் போதிக்கப்பட்டது என்பதனை காரணங்களுடன் நாம் நம்பலாம்…………அது மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸியானா மற்றும் இமாலயத்தின் வடக்கில் இருந்தது” (ப.29). [மஹாவீரர் காலம் 599-529 BCE, ஆகவே மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனும்போது 2600 BCEல் / 4600 YBPல் அத்தகைய மதம் அங்கு இருந்தது என்ன என்பது ஆய்விற்குறியது].

•        ஆகையால்தான், நாம் ஜெல்மோக்ஸிஸ், பைத்தோகோரஸ் முதலியோர் 7வது-6வது BCE நூற்றாண்டுகளில் ஜைனர்கள்-பௌத்தர்களின் குருவான “புத்தர் போதித்தது” போன்று போதித்து வந்தனர் என்பதைக் காணமுடிகின்றது (p.32).

•        ஸ்டிராபோ, குறிப்பிடுவதாவது, “த்ரகியன் என்ற குழுமம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர். மாசி எனப்படுகின்ற அவர்களது சகோதரர்கள் உயிருள்ள எதையும் உண்ணாமல் இருந்தனர்.” (p.32)

•        7ம் நூற்றாண்டில் BCE, ஹோமர் சொல்வதாவது, “அவர்களுள் பெரும்பாலோர் ……….. பாலைக்குடித்தே உயிர்வாழ்கின்றனர்……..பணத்திற்கு ஆசைபடுவதில்லை…….. ஜான் பாப்திஸ்து, ஏசு மற்றும் அவர்களது சீடர்கள் முதலியோர் அத்தகைய எஸ்ஸென் எனப்படுகின்ற ஆசியர்களைப் போன்றவர்களே (ஆசியாவைச் சார்ந்தவர்கள்)” (p.32).

•        ஜோஸஃபஸ் சொல்வதாவது, “இந்த எஸ்ஸென் சகோதரர் பழங்கால தேஸே மக்களைப் போன்று, அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, மது அருந்துவதில்லை, வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, தனியாக வாழ்கிறார்கள், பலி-சடங்குகள் செய்வதில்லை, ஆனால் ஜைனர்களைப் போன்று ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதிக்கின்றனர்” (ப.32).

•        ஜெல்மோக்ஸிஸ் ஜைனர்களை விட அதிகமாகவே ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதித்துள்ளார் (ப.35).

•        அவர், “இந்திய வாழ்க்கைச் சுழற்ச்சி……. உடலை விட்டு உடல் செல்லும் ஆத்மா……..மனிதனைப் போன்று விலங்குகளும் ஆத்மாக்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் துன்புறுத்தக்கூடாது……..” என்றெல்லாம் போதித்தார் (ப.36).

•        கெலே-சிரியாவைச் சேர்ந்த யூதர்கள், இந்தியர்களே ஆவர். அவர்கள் கிழக்கு
கலானி மற்றும் இக்ஷ்வாகு / கரும்பு-மக்கள் (இந்தியாவிலிருந்து வந்த) ஆவர். ஜூதேயாவில் வாழ்ந்த யூதர்கள், எஸ்ஸென்களே ஆவர், அவர்கள் இந்திய தத்துவ ஞானிகளிடமிருந்து உறுதியான மனப்பாங்கு, உணவு மற்றும் மனசாட்சி முதலியவை வாழ்க்கையில் தேவை என்பதனைப் பெற்றனர். கிரேக்கர்கள் அவர்களை சிரியர்கள் என்று தவறாக அடையாளங்கொண்டாலும், அவர்கள் ஜைன-பௌத்தர்களே ஆவர்
(ப.46).

•        202-193 BCEல், ஹான் வம்சம் சீனாவில் வலுப்பெற்றது. நூல்களை தொகுப்பவர், சூய் 600 CE காலம் வரை சீனா பௌத்தத்தை அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே அதற்கு முன்பு 200 BCEக்கு – முன்பு இருந்தது ஜைன-பௌத்தமே ஆகும் (ப.67).

Black Buddha - 1

மேற்கண்ட விவரங்களிலிருந்து அறிவதாவது, பௌத்தம் தோன்றி தனி மதமாக அடையாளங்காணும் முன்பே அத்தகைய ஒரு மதம் பாரதம் மட்டுமல்லாது, மத்தியதரைகடல் நாடுகள், மத்திய ஆசியா, சீனா முதலிய பகுதிகளிலும் இருந்தது தெரிகிறது. சில மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் அதனை எடுத்துக் காட்டியும், ஆதிக்க வர்க்க-ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சரித்திர புத்தக ஆசிரியர்கள் அந்த விஷயங்களை மறைத்து எழுதினர் எனத்தெரிகிறது. அவ்வாறு பௌத்தம், புத்தம் போன்ற மதம், ஜைன-பௌத்தம், ஜைனம் முதலியவை உலகம் முழுவதும் பரவியிருந்தபொது, அமைதியான நிலை இருந்தது காட்டுகிறது.

ஆகவே ஜைனத்தை மறைத்து தவிர்த்து, தனியாக எந்தவித பௌத்தமும் எழுந்திருக்க முடியாது. நிச்சயமாக ஜைனத்திலிருந்து, பௌத்தம் அஹிம்சாவாதத்தில் வேறுபட்டு தன்னை நீர்த்துக் கொண்டது, அத்தகைய மக்களை கவரவே அவ்வாறு சமரசம் செய்து கொண்டது எனத்தெரிகிறது. அதனால் தான் புத்தர் புலால் உண்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 81வது வயதில் பன்றிக்கறி / மாமிசம் உண்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் எனத் தெரிகிறது. பௌத்தர்களும் சரியான மாமிச உணவு உண்பவரே. எனவே அவர்களது அஹிம்சை மற்ற உயிர்களை வதைக்காதே போன்ற கொள்கைகள் செல்லுபடியாகாது.

வேதபிரகாஷ்
17-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Was Buddha a black - some sculptures with curled hair etc- more

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain