Posts Tagged ‘சீனாவின் பௌத்தப் பிரச்சாரம்’

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

ஒக்ரோபர் 18, 2019

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

Bodhidharma-sculpture in Mahabalipuram

குங்ஃபூவும் போதிதருமனும்: போதி தருமன் பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர். சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு ஒன்று போதிதருமன் பற்றி கூறுகிறது.  டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் அரசரின் மகன் என்கிறது. டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng). தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன-ஜப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர். மகாசன், சுவலபில் போன்ற ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறனர். யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை).

Bodhidharma-Tamil mythologization

ப்ராஃடன்[1] யாங் சுவான்சீ பதிவை மறுப்பது: அக்காலப் பாரசீகத்தை பஹலவர் என்ற அரச மரபினர் ஆண்டனர். அந்த பஹலவர் பெயரும் பல்லவர் பெயரும் ஒற்றுமையாய் உள்ளதாலே யாங் சுவாங்சீ பதிவுகளை எழுதியவர். பல்லவரான போதிதருமரை பஹலவர் என மயங்கி பாரசீகத்தைச் சேர்ந்தவர் என எண்ணியிருக்கக் கூடும். இதற்கு வழுசேர்க்கும் விதமாக போதி தர்மாவின் சீடரெனக் கருதப்படும் தான்லின் போதிதருமரை தென்னிந்தியர் எனக்கூறியதையும் கொண்டு பிராட்டன் என்னும் ஆய்வாளர் போதிதர்மா பாரசீகத்தவர் எனக் கூறப்பட்டதை மறுக்கிறார். போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் II -னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.  கந்தவர்மன் II -னின் மூன்று மகன்கள் என அறியப்படுவோர் – 1. முதலாம் சிம்மவர்மன், 2. இரண்டாம் விஷ்ணுகோபன், 3. இரண்டாம் குமாரவிட்ணு. கால ஒற்றுமையின் படி, போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (475-550 CE விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (340 CE) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (450-500) 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (563 BCE) போதிதர்மா வரை (550 CE). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை. ஆனால், இவர்கள் எல்லோருமே, ஆன்டி பெர்கூசன் ஆராய்ச்சியை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது தெறிகிறது.

Bodhidharma-Tamil mythologization-by Tamil group

போதி தர்மர் பற்றி ஆன்டி பெர்கூஸன் கூறுவது: ஆன்டி பெர்கூசன் என்பவர் 1978களில் போதிதர்மர் சம்பந்தப் பட்ட இடங்களுக்குச் சென்று, சீனமொழியில் உள்ள இலகீயங்களைப் படித்து, ஆராய்ச்சி செய்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் பல விவரங்களைக் கொடுத்துள்ளார். போதிதர்மர் பற்றி அறிய டௌஸ்வான் [Daoxuan pronounced as Dawswan 596-667 CE] என்ற டாங் காலத்தைய பௌத்த சரித்திர ஆசிரியர் மற்றும் பண்டிதர் முக்கியமானவர்.  பிறகு வூ [Wu 502-549 CE] என்கின்ற சீன அரசன். இவர்கள் மூலம் தான் போதிதர்மர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன, ஏனெனில்,  இவர்கள் காலத்தில் தன், போதிதர்மர் அங்கு சென்றுள்ளார். இவர், ஜென் பௌத்தத்தின் ஆரம்ப குரு, பிதாமஹர் என்றெல்லாம் போற்றப் படுகிறார். ஜென் என்பது, சைனாமயமாக்கப் பட்ட, இந்திய பௌத்தம். அவர் இந்தியாவின் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த பிராமணர்[2]. கண்கள் நீல நிறத்தில் இருந்தன [Blue-Eyed Barbrian], அதனால், சீனர் இவரை “நீலக் கண் காட்டுமிராண்டி” என்றே அழைத்தனர். 527ல் குவாங்சௌக்கு வந்து, வூவை சந்திக்க நான்சிங்கிற்கு [Nanjing] சென்றதாக உள்ளது. வூவிற்கு பௌத்தத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், அவர் “போதிசத்துவ மஹராஜா” [Bodhisattva Emperor] என்றே அழைக்கப் பட்டார். உள்ளூர் கதைகளின் படி, போதிதர்மர் யாங்-சீ [Yang-tse] நதியைக் கடந்து, ஷாவாலின் கோவிலை அடைந்தார். அக்கோவில் பின்புறத்தில் இருந்த குகையில் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து 536ல் இறந்ததாக உள்ளது. அவரது உடல், டிங்லிங் [Dinglin] என்ற, “சமாதி காடுகளில்” புதைக்கப் பட்டது. அது லுயோயாங் [Luoyang]  என்ற புராதன நகரில் ஒரு கோவிலில் உள்ளது.

Bodhidharma-Tamil mythologization-books produced

டௌஸ்வான் என்ற சீன சரித்திர ஆசிரியர் கூறுவது: டௌஸ்வான் தொகுத்து வெளியிட்ட, “தொடர்ந்த பிரசித்தி பெற்ற சந்நியாசிகளின் சுயசரிதைகள்” [Continued Biographies of Eminent Monks] என்றதிலிருந்து, போதிதர்மரைப் பற்றி அறிய முடிகின்றது. அத்தகைய விவரங்கள் முன்னமே இருததால், “தொடர்ந்த” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுவதாவது[3]: “போதிதர்மர்: தென்னிந்தியாவிலிருந்து வந்த பிராமணர். அவருடைய ஆன்மீக ஞானம் விஸ்தாரமானது. அவரது (போதனைகளைக்) கேட்டவர், தெளிவு பெற்றனர். மஹாயானபௌத்த முறைகளில் ஆழ்ந்த மனத்துடன் ஈடுபட்டிருந்தார். தியானத்தின் எல்லா முறைகளையு அறிந்து, தெரிந்த வல்லவர். சீனாவைத் தேர்ந்தெடுத்து யோகாசாரத்தை போதித்தார். 479ல் வியூ-சோங் வம்சாவளி காலத்தில் தெற்கு-சைனாவிற்கு வந்தார். பிறகு வடக்கில் உள்ல யூ / வை என்ற வம்சாவளி அரசனிடம் சென்றார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம், ஜென்னை போதித்தார். இவ்விதமாக, நாடு முழுவதும் சென்று அவர் போதித்தார். பலர் அவர் போதித்ததை எதிர்த்தனர், குறை கூறினர். தௌயூ [Daoyu] மற்றும் யூய்கே [Huike] என்ற இருவர் சீடர்கள் ஆகினர்…..அவர் பணி தொடர்ந்தது…………………………..”

Bodhidharma-Tamil mythologization-by Tamil groups

சரித்திரம் எழுதப் படும் முறை: சரித்திரம் [history] என்பது உண்மையில் இப்படித்தான் நடந்தது என்று பாரபட்சமின்றி ஆதாரங்களுடன் எழுதுவது. அது எழுதப் பட்டது, எழுதப் படுவது என்பது இல்லை, ஆனால், உண்மையிலே நடந்தது ஆகும். இகு ஆதாரங்கள் – முதன்மை [primary sources] மற்றும் இரண்டாம் தர [secondary sources] என்று இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. முதன்மை, பிராதான மூலங்கள் நடந்த சம்பவ காலத்தைச் சேர்ந்தவை அல்லது பிறகு குறுகிய ஆண்டுகளில் பதிவு செய்யப் பட்டவை. இரண்டாம் தர ஆதாரங்கள் என்பது, மற்றவர் சொன்னதை, எழுதியை வைத்து எழுதுவது. இங்குதான், பாரபட்சம் போன்றவை நுழைகின்றன. இட்டுக்கதை, கட்டுக் கதை, மாயை [myth] முதலியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உண்டு, இந்தியா, சைனா போன்ற மிகபுராதனமான நாடுகளின் சரித்திரம், தொடர்ந்து வருபவை. அதனால், அவற்றின் தொன்மை சரித்திரத்தை தினம்-தினம் நடந்தது போல எழுத முடியாது. அதனால் எல்லாமே கட்டுக் கதை ஆகிவிடாது, ஏனெனில், அங்கு மாயையே சரித்திரமாக [mythistory] உள்ளது. அதனால், அம்மாயையை நீக்கினால் [demythologization] சரித்திரம் வெளிப்படும். அம்முறை சரித்திரம் எழுதும் முறை [historiography] எனப்படும். அதற்காக, விஞ்ஞான முறையில், மற்ற வர் ஏற்கும்படி, கடைப்பிடிக்கப் படும் முறை, [Historiography methodology] எனப்படும், அதுவும் எந்தவிதமான சித்தாந்தம் [ideology] மூலம் கரைப் படிய / பாதிக்கப் படக் கூடாது.

Bodhidharma-Shaolin temple

பிரச்சாரங்களில் சரித்திரம் ஒதுக்கப் படுவது: தமிழகத்தை, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், இந்த வகை பரிசோதிக்கும் போது தம்மைப் பற்றிய குறிப்பும் கிடையாது இரண்டாவது பருவம் ஏழாம் அறிவு திரைப்படம் பற்றிய கதைகள் தமிழகத்திலும் பல அமைக்கப்பட்டுள்ளது சில குறிப்புகளை வைத்துக்கொண்டு குறிப்பாக காஞ்சிபுரத்திலிருந்து பல்லவர். பிறகு, இணைதளங்களில், பிரச்சார ரீதியில், பதிவுகள், வீடியோக்கள் முதலியன வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுதைய மோடி-லி பிங்க் சந்திப்பிறுகுப் பிறகு, அத்தகைய பிரச்சாரம் அதிகமாகக் கூடும். எல்லாமே தமிழ் என்கின்ற கூட்டங்களும், இதில் சேரக் கூடும், பிரச்சாரம் செய்யக் கூடும்.  எல்லாம் தமிழ்-தமிழ் என்றால், அவர்களுக்கு கண்மூடித் தனமான ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் பொய்கள், கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டாலும், கவலைப் படுவதில்லை. அதாவது, தெரிந்தே அதரவு கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. இவற்றைப் பரப்ப, ஊடகவாதிகளும் தயாராக இருக்கிறார்கள் மற்றும் ஒத்துப் போகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒருவேளை அவர்களுக்கும், இத்தகைய பிரச்சாரங்களினால் பணம், சலுகை, உபசாரம் முதலியவை கிடைக்கின்றன போலும்.

© வேதபிரகாஷ்

17-10-2019

Bodhidharma-Tamil mythologization-travelling by bamboo

[1] Jeffrey Lyle Broughton, The Bodhidharma anthology: The earliest records of Zen. Univ of California Press, 1999.

[2]  Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012, see indtroduction, p.4, 14.

[3]  Ibid, pp.14-17.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மதரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையாபொய்யா? (14)

T W Rhys Davids Buddhist scholar

ரைஸ் டேவிட்ஸ் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.

Buddhism and violence

புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக்  கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.

Persecution of the Buddhists in India - Sasanka as per Bana and Zuanzang

சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sasanka

மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sudhanvan

குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மதரீதியிலான தண்டனை:  கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).

பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- nothing mentioned in Pali texts

பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மதரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).

பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.

 

கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

சகிப்புத்தன்மைசிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- acknowledging John Ware Edgar

ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு  ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

 

வேதபிரகாஷ்
01-10-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப் பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

 

15-05-2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

Sankara vijaya accounts

ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrine, www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan,  Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.

Sankara vijaya texts - later period

18-19வது நூற்றாண்டுகள் வரை திருத்தப்பட்ட சங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரி சங்கரவிஜயத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீய சங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University,  Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.

Sankara vijaya accounts

காலின் மெகன்ஸி, ஓலைச்சுவடி சேகரிப்பு, பிரதியெடுத்தல், பிழைதிருத்தங்கள் பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.

sringeri - Kanchi controversies

புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:

  1. சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
    சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
  2. மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
  3. ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
    வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
  4. மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
  5. சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
    அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
  6. “மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
    வருகிறது (ப.49).
  7. ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
    என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
    நம்பொகிறோம் (ப,98).

Sankara vijaya accounts- vimsara-he preaching to Arabs

ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]

Sankara and Kapalikas

ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].

Sankara and Kapalikas- fight

ஆதிசங்கரர் சுதன்வன் படைகளுடன் சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சுதன்வன்அரசன்ஒரு கட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.

சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.

Sankara was defetated by Buddhists

பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).

ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.

சைனாவில் பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

வேதபிராகாஷ்
30-09-2009.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

ஹூணர்களால் பௌத்தம் அழிந்தது (478-637): பிறகு ஹூணர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது என்ற கருதுகோள் வருகிறது. மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் ஹூணர்களைப் பற்றி கூறுவதாவது: ஹூணர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடிமக்கள். பைஜான்டின் எழுத்தாளர்கள் அவர்களை “ஹெப்தாலைட்டுகள்” – வெள்ளைநிறத்தவர் – வெள்ளை ஹூணர்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் துருக்கிய-மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவீன எழுத்தாளர்கள் அட்டிலாவைச் சேர்ந்த ஹூணர்களுக்கும் இந்த ஹூணர்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஏனெனில் இவர்கள் இரானிய இனத்தைச் சார்ந்தவர்கள். கிரேக்கர்கள்,
சாகர்கள் மற்றும் குஷானர்களைப் போல, அவர்களும் மலைகள், சமவெளிகள் கடந்து இந்தியாவைத் தாக்க வந்தவர்கள் எனத் தெரிகிறது. ஹூணர்களுடன் போரிட்டு குமாரகுப்தனே இறந்ததாக “குப்த சரித்திரம்” கூறுகிறது. 500 க்கு மேலே மேற்கு இந்தியாவை அவர்கள் முழுவதுமாக பிடித்துவிட்டதால், அவர்கள் ஆட்சி புரியவும் தொடங்கி விட்டனர். தோரமானன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன் இருவருமே அரசர்களாக ஆட்சி புரிந்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் “குப்த பேரரசு” மறைந்ததாக சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990. ப.67-69.

Tang Emperor Wuzong

சைன அரசனது அடக்கு முறைகளால், மங்கோலியாவிலிருந்த ஹூணர்கள் வெளியேறி மற்றவர்களைத் தாக்கினார்களா?: உண்மையில், சைனர்களின் அடக்குமுறைகளால் அவர்கள், இந்தியாவிற்கு வர நேர்ந்தது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் எனத்தெரிகிறது. ஆகவே அத்தகைய அடக்குமுறை, பௌத்ததிற்கு சாதகமாக இருந்த சைனாவில், திடீரென்று வந்திருக்கமுடியாது. எனவே இந்தியாவிற்கு வந்தவர்கள் ஹூணர்களா, பௌத்தர்களா அல்லது வேறு மதத்தினரா என்று நோக்கத் தக்கது. ஏனெனில், “ஹுணர்கள்’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவில் நுழைந்ததாக சொல்லப்படும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்துமதம் தான், ஏனெனில் அவர்கள் சூரியன், சிவன் முதலியவர்களை வணங்கியதாக அவர்களது கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன (Gwalior Stone Inscription of Mihirakula (ca. early 6th century CE). மேலும் விவரங்களுக்கு, கீழே காணவும்.

Toramana coin

ஜைனர்கள் இந்தியா முழுவதும் பலமாக இருந்த நிலையில், ஹூணர்கள் எப்படி பௌத்தர்களை மட்டும் தாக்கியிருக்க முடியும்?: ஹூணர்கள், பௌத்தர்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதில், பல கேள்விகள் எழுகின்றன:

*மேலும், அதேகாலத்தில், மேற்கு இந்தியாவில் இருந்த பலமான மதம் ஜைனம் ஆகும். பிறகு எப்படி, ஹூணர்கள் ஜைனர்களை விடுத்து, பௌத்தர்களை  மட்டும் குறிவைத்திருக்க முடியும்?

*“ஹிந்துத்வா-அரசர்கள்” குப்தர்களைத் தாக்கி அவர்களது பேரரசையே
மறையச்செய்திருக்க முடியும்?
*ஒருவேளை அவர்கள் ஜைனர்களாக இருப்பார்களோ? ஏனனில், அவர்களது செயல்கள் ஜைனத்திற்குத்தான் ஆதரவாக உள்ளது.

*ஒருவேளை, ஹூணர்களும், ஜைனர்களும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திகொண்டு, இந்தியாவைத் தாக்கியிருக்கக் கூடுமோ?

* 712ல் அரேபிய படையெடுப்புத் தொடங்குகின்றது. அவர்களும் ஜைனர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

* பிறகு வரும் “ஆதிசங்கரரும்” ஜைனர்களை கண்டுகொள்ளாமல், பௌத்தத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்!

இதென்ன வேடிக்கை? எப்படி எல்லோருமே ஜைன-அபிமானிகளாக உள்ளார்கள்?
நிச்சயமாக இங்கு ஒரு “சரித்திர புதிர்” உள்ளது. அதாவது, சரித்திர ஆசிரியர்கள் செய்துள்ள புரட்டு வேலைத் தெரிகிறது.

Kanishka, Huvishka coins

தோராமானன், மிஹிரகுலன் தேதிகளை ஆங்கிலேயர் மாற்றியது: தோரமானன், மிஹிரகுலன் என்ற பெயர்கள் ஐரோப்பியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது தெரிகின்றது. ஏனெனில், ஹூணர்கள் என்றாலே அவர்களுக்கு பயம், அதிலும் அட்டிலா என்பவனுடைய பெயரைக் கேட்டால், ஐரோப்பிய குழந்தைகள் சிறுநீர் விட ஆரம்பித்துவிடும் (Count Dracula in Bram Stoker’s novel Dracula claims to be descended from Attila: “What devil or what witch was ever so great as Attila, whose blood is in these veins?”). அவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் என்று ஹூணர்கள் (Huns) மற்றும் வாண்டல்கள் (Vandals) என்று இரு மக்கட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றனர் (vandal, vandalize, vandalism என்றால் தெரிந்திருக்கும்). ஐரோப்பா, மத்தியதரைகடல் நாடுகள் அவர்களால் பாதிக்கப் பட்டதால், இந்தியாவும் அதே காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆகவே, எப்படியாவது ஹூணர்களை இந்திய சரித்திரத்தில் நுழைக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய காலத்தையும் குறைக்கவேண்டும் என்று ஆங்கிலேய பண்டிதர்கள் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ராஜதரங்கிணியில் அத்தகைய பெயர்கள் வருவது அவர்களுக்கு வியப்பாகியது.

Rajatarangini Kalhana
ஆனால், கல்ஹணரின்படி, அவர்களது, தேதிகள் இவ்வாறு இருந்தன: ராஜதரங்கினியின் படி, அரசனின் பெயர்,        ஆண்ட காலம்,        காஷ்மீர சகாப்தத்தின்படி      மற்றும்  நடப்பு சகாப்தத்தின்படி இவ்வாறு இருக்கின்றன:

ஆண்ட அரசன் ஆண்டுகள் கல்ஹணர் தேதி இக்காலத்தவர் கொடுக்கும் தேதி
அசோகன் 48 1628-1676 1448-1400
ஜலௌகன் 56 1675-1732 1400-1344
தாமோதர-II 50 1732-1782 1344-1294
ஹுஸ்க, ஜுஸ்க, கனிஸ்க 60 1782-1842 1294-1234
அபிமன்யு 52 1842-1894 1234-1182
கோநந்த-III 35 1894-1929 1182-1147
விபீஷண 54½ 1929-1983½ 1147-1092½
இந்திரஜித் 35½ 1983½-2019 1092½-1057
ராவண 30 2019-2049 1057-1027
விபீஷண-II 35½ 2049-2084½ 1057-991½
கின்னர/நர 32084½-2124 991½-952
சித்த 69 2124-2184 952-892
உட்பலக்ஸ 30½ 2184-2214 892-861½
ஹிரண்யாக்ஸ 37½ 2214-2252 861½-824
ஹிரண்யகுல 60 2252-2312 824-764
வசுகுல 60 2312-2372 764-704
மிஹிரகுல 70 2372-2442 704-634
பக 40 2442-2482 634-591
கஹிதிநம்தன 30 2482-2512 591-564

*அசோகன் வருகிறான், ஆனால் பௌத்தன் அல்ல, ஜைனன்!
* அவனது தேதியோ 1448-1400 BCE!
*மிஹிரகுலன் உள்ளான் ஆனால், அவனின் தந்தை பெயர் தோரமானன் அல்ல!
*அவனது தேதியோ 704-634 BCE!
பிறகு எப்படி மாற்றுவது, தமது இச்சைக்கேற்றவாறு கணக்கை சரிகட்டுவது, தேதிகளை திருத்துவது, சரித்திரத்தைப் புரட்டுவது?

Hultzsch and Cunningham

ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் தேதிகளை மாற்றியமைத்தது: இதோ, திருவாளர் இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch), ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A. Cunningham), பேராசிரியர் வில்சன் (H. H. Wilson), டா. ஃபிலீட் (John Faithful Fleet) முதலியோரின் குழுமம் எப்படி வேலை செய்தது என்று விளக்குகிறார். ராஜதாரங்கிணியைப் பற்றி இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) எழுதும்போது, இந்த விவரங்களைத் தருகிறார், “ராஜதரங்கிணியில் கல்ஹணரின் காலக்கணக்கியலை மாற்றியமைப்பதைப் பற்றி, பேராசிரியர் வில்சன் (H. H. Wilson) கருதியபோது தனது கருத்துகளை சுருக்கக்குறிப்பாக இணைத்திருந்தார். ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A.Cunningham) 1843ல் தனது, “காஷ்மீரத்தின் பழங்காசுகள்” என்ற கட்டுரையில் அதனை பயன்படுத்தினார் (நாணயவியல் கால அட்டவணை, பகுதி.6, ப.1-38; Numismatic Chronicle, Vol.VI, pp.1-38) இருப்பினும் முந்தைய காலத்திற்கு திருப்திகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மிஹிரகுலனைப் பொருத்தவரையிலும் அத்தகைய முடிவுகள் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ராஜதரங்கிணியின்படி பெற்ற தேதி 2397 கலியுக சம்வத்ர ஆண்டு அல்லது B.C. 704; மற்றும் அவனது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு முடிகின்றது. பேராசிரியர் எச். எச். வில்சன் இந்த தேதியை 200 B. Cக்குக் குறைத்து கொண்டார்.  (loc.cit, p.81). ஆனால் சர். ஏ. கன்னிங்ஹாம் A.D 163 ல் வரவேண்டும் என்று முடிவெடுத்தார் (loc.cit, p. 18). “இருப்பினும் புதியதாக கண்டுபிடித்த கல்வெட்டுகளின் மூலம், டா. ஃபிலீட் (John Faithful Fleet) உண்மையான தேதி ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பித்தால்தான் வரும் எனக் கொண்டு, அவனது ஆட்சியின் ஆரம்பத்தை A. D 515ல் வைத்து, 530 A.Dல் முடியவேண்டும் எனத் தீர்மானித்தார். ஏனெனில் அந்த வருடத்தில்தான் அவன் அதிகாரம் இழந்து காஷ்மீரத்திற்கு சென்று அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். “இது கல்ஹணரின் முன்பு குறிப்பிட்ட விவரங்களில் எப்படி மாறுதல்களை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுயதுடன் ஒத்துப்போகிறது. அதுதான் நமக்கு குறிப்பிட்ட திட்டத்தைக் கொடுப்பதால், அதிலிருந்து தேதிகளை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதே மாதிரி கல்ஹணர், கனிஸ்கனுடைய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நோக்கத் தக்கது. தரங்கம்-I, வரி.18ன் படி, துரக்ஸ அரசனான கனிஸ்கன், கோநந்தன்-III, அரசாட்சிற்கு வருவதற்கு முன்பு B.C 1182ல் இருந்ததாக கல்ஹணரின் கூற்றுப்படி வருகின்றது. ஆனால், இது நமது கணக்கின்படி, உள்ள சாத்தியக்கூறுகளின்படி 77 A.Dக்கு வரவேண்டும். அதே மாதிரி அசோகனுடைய தேதியும் கல்ஹணரின்படி (தரங்கம்-I, வரி.191) முன்னதாக உள்ளது. ஆனால், கன்னிங்ஹாமின் படி, அந்த தேதி இப்பொழுது B.C 260க்கு வருகின்றது (Corp.Inscr.Indica, Vol.I, Preface, p.VII).

H H Wilson and J F Fleet

இப்பொழுது அத்தகைய தேதிகளை ஏன் மாற்றியமைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில்:. காஷ்மீர அரசர்களின் வம்சாவளியில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்ததாக பெயர்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம், மூதாதையர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் அரசாளவில்லை. ஆகவே, நமது கணக்கின்படி சில அரசர்களை எடுத்துக்கொண்டாலும், விட்டாலும், நடுவிலே குறை ஏற்பட்டாலும் அத்தகைய அத்தியாவசம் உள்ளதால், அவர்களை வம்சாளி பட்டியிலிருந்து நீக்கவேண்டும்”.

மேலே இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) கொடுத்த வாக்குமூலம் படி, நாம் தெளிவாக அறிவதவது யாதென்றால்:

  1. மோஹிலோகுலோ” “மிஹிரகுலன்ஆனது: ராஜதரங்கிணியின் மிஹிரகுலன் ஐரோப்பிய மனதுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. ஏனெனில், ராஜதரங்கிணியில், அவனைப் பற்றிய கதை, “அடில்லாவை/டிராகுலாவை” ஒத்துபோகிறது! ஒருபெரிய கல்லை, ஒரு மிகவும் கற்புள்ள பெண்தான் நகர்த்தமுடியும் என்றபோது, “சந்திரவதி” என்ற பெண் நகர்த்துகிறாள், ஆனால் மற்ற பெண்களால் முடியவில்லை. இதனால் எல்லா பெண்களையும் அவர்களது கணவன்மார்கள், சகோதரர்கள், உறவினர்களுடன் கொன்றுக் குவிக்கிறான்! [இதைத் தவிர பல கொடுமைகளைப் புரிகிறான். விவரங்களுக்கு ராஜதரங்கிணியைப் படிக்கவும்] ஆகவே “மோ-ஹி-லோ-கு-லோ” யுவான் சுவாங் குறிப்பிட்டப்படி ஒரு “மிஹிரகுலன்” கிடைத்துவிட்டான்! அதுவும் ஹூணரைப்போல கொடுங்கோலனாக இருக்கிறான்!
  1. தேதிகளை மாற்றியது: தேதிகள் உதைக்கிறது: எனவே  தேதிகளை மாற்ற முடிவு செய்கிறார்கள், மாற்றவும் செய்தார்கள். தேதிககளை எங்களுடைய வச்திக்காகக் குறைக்கிறோம் என்று எவ்வளவு நாஜுக்காக சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
  1. அரசர்களையே வம்சாளியிலிருந்து எடுத்து மறைத்தது: பல அரசர்கள் இடையில் பிரச்சினை செய்கிறார்கள்! அதாவது அவ்வாறு காலத்தைக் குறைக்கும்போது, இடையில் அரசாட்சி செய்த அரசர்களை என்ன செய்வது? ஒரே வழி, அந்த அரசர்கள் இல்லவே இல்லை என்று சொல்வது! எனவே பல அரசர்கள் இந்திய சரித்ததரத்திலிருந்து மறைந்து விட்டார்கள்!
  1. ஜைனஅசோகனை பௌத்தஅசோகனாக்கியது: பௌத்தமதமே “அசோகனின்”மீது ஆதரமாக உள்ளது. ஆனால், ராஜதரங்கிணியின் அசோகனோ ஒரு ஜைன மதத்தவனாக விஹாரங்களைக் கட்டியதாக உள்ளது. அதிலும் காஷ்மீர அரசனாக உள்ளான், மௌரியன் அல்லன்! ஆகவே, அந்த அசோகனையே மறைத்துவிடுவது! எனவே, ஒரு புதிய அசோகன், பௌத்தமத காவலனாக “ஒரு அசோகன்” உருவாக்கப்படுகிறான். கல்வெட்டுகள் கிடைக்கவேண்டுமே? உள்ளவையெல்லாம் “தேவநாம்பியாதிஸ்ஸா / தேவநாம்பிரிய” என்றுதான் உள்ளது. எங்குமே “அசோகன்” என்ற பெயர் இல்லை! 1915 வரை இக்கல்வெட்டுகள் எல்லாம் அசோகனுடைது என்று உறுதியாகத் தெரியாது. 1915ல்தான் மஸ்கி கலவெட்டு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் “தேவநா பியா” கூட “அசோக” என்ற வார்த்தையும் உள்ளது. வித்தியாசத்தை நன்றாக கவனிக்கவும். மேலும், இக்கல்வெட்டு மகதத்தில் அல்லது மௌரிய பேரரசு எங்கு வலுவாக இருந்ததோ அங்கு கிடைக்காமல், ஜைனம் ஆதிக்கம் செய்த பகுதியில் கிடைத்திருப்பது நோக்கத்தக்கது.
  1. 700 வருடகொள்ளுகொல்லுதாத்தாவை மகனாக்கியது!; இனி “தோரமானன்” என்பவனைக் கவனிப்போம். ராஜதரங்கிணியின்படி, 81வது அரசன் ப்ரவர்சேன / ஸ்ரேஸ்டஸேன / துஞ்ஞீனா என்பவன் ஆவன். இவனது இரண்டு மகன்கள் ஹிரண்யா மற்றும் தோரமான. ஹிரண்யா தோரமானனை சிறையில் அடைக்கிறான், அவன் சிறையிலேயே இறக்கிறான். அவன் வாழ்ந்த காலம் 16 BCE முதல் 14 CE வரை. ஆகவே, இவனுக்கு காலத்தால் 700 வருடங்களுக்கு முன்பு மிஹிரகுலன் (704-634 BCE) இருக்கிறான்! இருப்பினும் அவனை, இவனுக்கு மகனாக்குகிறார்கள்! என்னே சரித்திரத்தின் கோலம்?

Mihirakula - Vishnubakta 502-530 CE

  1. சௌரன்விஷ்ணு பக்தனாகிசிவபக்தனாகியது: பௌத்தர்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்றால் ஒருவன் சைவனாக இருக்கவேண்டும். எனவே அடுத்தது, இந்த “மிஹிரகுலனை” சைவனாக்கும் படலம் ஆரம்பிக்கிறது. இதற்கு குவாலியர் கல்வெட்டை உபயோகப்படுத்துகின்றனர். அதில்  வரும் தோரமானன், மிஹிரகுல என்ற பெயரோடு ஆண்டதாக உள்ளது. மேலும் அவன் வழி வந்த மகன், பெயரன் முதலியோர்களின் பெயர்கள் மாத்ரிதல, மாத்ரிதாஸ, மாத்ரிசேத என்றுள்ளன. மேலும் அவன் சூரியவழிபாடு செய்வதுபோல உள்ளது. ஒரு பதக்கத்தில் ஒரு மிஹிரன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணுவை கும்பிடும் மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது (Sardonyx seal representing Vishnu with a worshipper, Afghanistan or Pakistan, 4th-6th century CE. The inscription in cursive Bactrian reads: “Mihira, Vishnu and Shiva”. British Museum). என்ன செய்வது, எப்படியாவது சரிகட்டவேண்டுமே? “தோரமானன் என்பவன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்பதனை “தோரமானனின் மகன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்று மொழிபெயர்த்து, மிஹிரகுலனை தோரமானனுக்கு மகனாக்குகிறார்கள்! அதாவது, சூரியபக்தன், விஷ்ணு பக்தனாகி, பிறகு சிவபக்தனாகி விடுகிறான்!
  1. ஹூணனான இந்தியனும், ஹூணமாகிய இந்திய சரித்திரமும்: ஹூணன் என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானிலிருந்து வந்திருக்க வேண்டும் (மேலே விளக்கப்பட்டுள்ளது). “மிஹிர் / மிஹிர / மெஹர்” (= சூரியன்) என்ற பெயர் இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஜோடனை செய்யப்பட்டது. ஆனால் பாவம் காஷ்மீரத்திலேயே கல்ஹணருக்கு முன்பு “பத்மமிஹிர” (தரங்கம்.1-18) என்பவர் இருந்ததை கவனிக்கவில்லை! இருந்தாலும், அவரை எடுத்துவிட்டால் போயிற்று, என்பார்கள்! [முன்பு வராஹமிஹிரரையும் ஈரானிலிருந்துதான் வந்தார் என்றார்கள்] ஒரு இந்திய அரசனை, அதிலும் காஷ்மீரத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து சரித்திர-ரீதியாக இருந்த அரசனை மறைத்து இல்லாத ஒரு மிஹிரகுலனை உண்டாக்கி, அவனை “ஹூணனாக்கி”, ஹூணனாக இந்தியாவில் புகுந்து, தோற்றபிறகு காஷ்மீரத்திற்கு அனுப்பி வைக்கப் படும் ஒரு நிலையை இந்திய சரித்திரத்தில்தான் காணலாம்.

Devanampiya Tissa Asoka and Lanka

சித்தாந்தம் போன்ற காரணிகளால் இந்திய சரித்திரம் பாதிக்கப்படுகிறதா?: ஆராய்ச்சி என்று மாய்ந்து-மாய்ந்து இவ்வாறு சரித்திரத்தை புரட்டுகிறார்கள் தலைகீழ் மாற்றங்கள் செய்கிறார்கள், ஆனால், இத்தகைய மோசடிகளை எந்த பிரபல (eminent), முற்போக்குள்ள (progressive), பரந்த-விரிந்த மனதுள்ள (broad-minded), செக்யூலரிஸ (secular), மார்க்ஸிஸ (Marxist) மற்றும் எந்த சரித்திர ஆசிரியருக்கும் தெரியவில்லை! இத்தகைய மோசடிகளுடன், இந்திய சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. இருப்பினும், சில சரித்திர ஆசிரியர்கள், உண்மைகளை அங்கங்கு சொல்லியிருக்கிறார்கள்: “யசோதர்மன் மந்டசோர் கல்வெட்டில் மிஹிரகுல மற்றும் ஹூணர்கள் இருவரையும் குறிப்பிட்டாலும், இருவருன் தனி என்பதனை அறியும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” (ப,197).
R. C. Majumdar and A. S. Pusalkar, A History of the Indian People, Lahore, 1946, p.197, 196 etc.

“மிஹிரகுலன் ஒரு ஹூணன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” (ப.196).

இப்பொழுது, கே.டி. சேத்னா என்பவரும், இந்த விவரங்களைத் தருகிறார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi,
2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese
chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial
Guptas.
இவர் எடுத்துக்காட்டுவதாவது, மிஹிரகுலனின் காலம் 540 CE இல்லை, BCEல்தான் வரும், யுவான் சூவாங் காலத்தில் குப்தர்கள் இருந்திருக்க முடியாது;

அசோகனின் தேதி மாற்றப்பட்டது: அசோகனது காலம் சுமார்.1000 BCE வரை செல்லும்;
K. D. Sethna, Ancient Indian in New Light, Aditya Prakashan, New
Delhi, 1997. ஆங்கிலேயர்களின் காலக்கணக்கியலில் பல முரண்பாடுகள் உள்ளதை
எடுத்துக்காட்டி, இதில் இவர் கொடுக்கும் தேதிகள்:
950-914 BCE – reign of Asoka, thus Pushyamitra came after him.
221-181 BCE – Kumaragupta
181-169 BCE- Skandagupta
140 BCE – Toramana invaded Malva from Kashmir
137 BCE – Toramana died
100 BCE- Mihirakula came to power

இவை இந்திய பாரம்பரிய காலக்கணக்கியல் மற்றும் மேனாட்டு காலக்கணக்கியல், இரண்டிற்கும் மாறுபட்டதாகும். குப்தவசத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனை விடுத்து மௌரியவம்சத்தின் சந்திரகுப்தனை, அலெக்ஸ்சாந்திரன் காலத்துடன் வைத்ததில்தான் இந்திய சரித்திரத்தில் பல குளறுபடிகள் நேர்ந்தன. இதனால் 800 முதல் 1200 வருடங்கள் வரை பல முக்கிய தேதிகளில் வித்தியாசம் வந்துகொண்டே இருக்கும். மேலும், இந்த தேதிகள் எல்லாம் 70 முதல் 150 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலிலேயர்கள் தோராயமாக என்று வைத்துக்கொண்டு circa என்று குறிப்பிட்டு வந்தனர். ஆனால், circaவை விட்டுவிட்டு, நிலைநிறுத்திய தேதிகளைப் போல, பிறகு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கிருஷ்ணமாச்சாரியார் தமது “இந்திய சமஸ்கிருத வரலாறு” என்ற நூலில் எவ்வாறு ஆங்லிலேயர் தேதிகளைக் குறைத்தர்கள் என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஆனால், இவை ஆராய்ச்சிசெய்யும் மாணவர்கள் மற்றும் சிலருக்குத் தான் தெரிய வாய்ப்புள்ளது. தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவதில்லை.
M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature, Motilal Banarasidas, New Delhi, 1993.
D. S. Triveda, Indian Chronoloy, Bharatiya Vidhya Bhawan, Bombay, 1958.
கோட்டா வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலேயர்களின் பல சரித்திர குளறுபடிகளை, திரிபுகளை, ஏன் கள்ள ஆவணங்கள் தயாரித்தது முதலியவற்றை எடுத்துக் காட்டி பல புத்தகங்களை 1950களுள் வெளியிட்டார். இவர் R. C. Majumdar, K. D. Sethna முதலியோருடன் இதைப் பற்றி கடித ததடர்பும் கொண்டிருந்தார். பிறகு, பொள்ளாச்சி மஹாலிங்கத்தின் ஆரார்ச்சி நிறுவனமும் அதன் அடிப்படையிலேயே
சென்று, வானவியல் ரீதியாக தேதிகளை நிறுவ முயற்ச்சி செய்தது.

வேதபிராகாஷ்
29-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

12-05-2017

Gwalior inscription of Mihirakula

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

மார்ச் 19, 2013

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

Buddhist monk attacked in a train at Central Chennai2

 

உணர்ச்சிப் பூர்வமாக நடந்து வரும் போராட்டங்களும், பிரச்சினைகளும்: தமிழகத்தில் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதாக வீடியோ மற்று புகைப்படங்கள் வெளியானதிலிருந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், இலங்கை-ஈழ விடுதலை இயக்கத்தார் முதலியோர் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்டர்லிங் ரோடில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என்று அவை போராட்டங்கள் காலை நேரங்களில் நடத்தின. ஒரு நாள் பந்த் என்றும் அறிவித்து ஆர்பாட்டம் செய்தனர். இப்பொழுது, புத்த பிக்குகள், குறிப்பாக யாத்திரிகர்கள் தாக்கப்படுவது பிரச்சினையாகியிருக்கிறது.

Buddhist monk attacked in a train at Central Chennai5

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியிலிருந்து 19-03-13 அன்று சென்னை வந்த, புத்த சாமியார்கள் இருவர், மர்ம நபர்களால் தாக்கப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது[1]. ரயில்வே போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடினர்[2]. இலங்கை ஊடகங்கள் எல்.டி.டி.ஈ. அதரவாளர்கள் புத்த பிட்சுகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன[3]. கருணதிலக அமுனுகம என்றறைலங்கை வெளியுறவுத்துறை செயலாளர், இந்தியாவில் பிராயணம் செய்யும் ஶ்ரீலங்கை யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளது[4]. தமிழக அரசும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் என்பவரும் அத்தகைய வேண்டுகோளை விடுத்திருந்தார்[5].கடந்த ஜனவரி மாதம், 2011ல் எழும்பூரில் உள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டது. அதில் நான்கு துறவிகள் தாக்கப்பட்டனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, உள்ளே மற்ற பொருட்களும் உடைக்கப்பட்டன[6].

Buddhist monk attacked in a train at Central Chennai3

குறிப்பாக எஸ்.6ல் நுழைந்து புத்த பிக்குகள் தாக்கப்பட்டது: இலங்கை கண்டியை சேர்ந்த, புத்த சாமியார் பண்டாரா, 40, தலைமையில், 19 பேர், இந்தியாவில் உள்ள புத்தகயாவிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டில்லியிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் “எஸ் 6′ பெட்டியில் ஒன்றாக பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. திடீரென, மூன்று மர்ம நபர்கள், “எஸ் 6′ பெட்டிக்குள் புகுந்தனர். அங்கு காவி உடையிலிருந்த புத்த சாமியார் பண்டாராவையும், அவருக்கு அருகில் சாதாரண உடையிலிருந்த புத்தசாமியார் வங்கீசாவையும் பிடித்து இழுத்து அடித்தனர்[7]. அவர் பயத்தில் அலறியதால், அவருடன் பயணம் செய்ய மற்றவர்கள், அவரருகில் ஓடிவந்து, மர்ம நபர்களை தடுத்தனர்; எதிர்த்து அடிக்கவும் முயன்றனர். பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்களின் தாக்குதலை, பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே போர்ட்டர்கள் பார்த்துவிட்டு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதற்குள்ளாக தகராறில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புத்த சாமியார்கள் இருவர் மற்றும் இவர்களுடன் வந்திருந்த இலங்கையை சேர்ந்த, 17 பேரையும், ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில், 17 பேரை, எழும் பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், வேனில் அனுப்பி வைத்தனர்.

Buddhist monk attacked in a train at Central6

புத்த பிக்குகளிடம் போலீஸ் விசாரணை: புத்த சாமியார்கள் இருவரையும், பாதுகாப்பாக நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ரயில் பெட்டியில் நடந்தது என்ன? தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் ஏதும் தெரிவிக்க முடியுமா?’ எனவும் கேட்டனர். இதற்கு புத்த சாமியார் பண்டாரா, “மூன்று பேர் வந்தனர். இருவர் பேன்ட் சர்ட் அணிந்துஇருந்தனர். ஒருவர் பேன்ட், டி சர்ட் அணிந்திருந்தார். மூன்று பேரும், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியதும், “நீங்கள் இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள், சிங்களர்களே திரும்பி போங்கள்’ என, திட்டினர். அப்போது, எங்களை அவர்கள் தாக்கினர்’ எனவும் கூறினார். தன் முகத்திலும், நெஞ்சிலும், காலிலும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியவர், இடது காலில் இருந்த காயத்தையும், போலீசாரிடம் காட்டினார். பொலீசார் அவர் மிகவும் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக கூறினர். காலின் மீது ஒரு கட்டைப் போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளனர் என்று கூறினர்[8]. தவிர ரூ.40,000/- அடங்கிய பை ஒன்றும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்[9]. காவி உடை அணிந்திருந்த புத்த சாமியாரை, வேறு யாரும் திடீரென தாக்கி விடாமலிருக்க, முன்னெச்சரிக்கையாக, அவரது காவி உடை மீது, சாதாரண உடை அணியுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். விசாரணைக்கு பிறகு, புத்த சாமியார் இருவரும், மற்றொரு வேனில் எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு, போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Buddhist monk attacked in a train at Central Chennai

புத்தசாமியார்களையும், அவர்களுடன்வந்திருந்தவர்களையும்தாக்கிவிட்டு, இரண்டேநிமிடத்தில்அங்கிருந்ததப்பிஓடியுள்ளனர்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் வந்து, ஆறாவது பிளாட்பாரத்தில் நின்றததும், பயணிகள் இறங்கியபோது, திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர், பெட்டியின் உள்ளே நுழைந்து புத்த சாமியார்களையும், அவர்களுடன் வந்திருந்தவர்களையும் தாக்கிவிட்டு, இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர். இதை, தனியார் “டிவி’ நிறுவனத்தின், கேமராமேன் வீடியோவில் பதிவு செய்து உள்ளார். செய்தி நிருபரும் அவருடன் இருந்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் பற்றி இவர்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா என, விசாரிப்பதற்காக, ரயில்வே போலீசார், இவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புத்த சாமியார்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடியோவில், பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளையும் போலீசார் பார்த்தனர்.

Buddhist monk attacked in a train at Central7

மர்ம நபர் தொலைபேசியில் தனியார் டிவிக்கு அவர்கள் வருவதை தொலைபேசி மூலம் அறிவித்தனராம்: இதன்பிறகு, “புத்த சாமியார்களும், இலங்கை நாட்டினரும் ரயிலில் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?’ என, கேட்டதற்கு, “எங்கள் அலுவலக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார். அதனால் தான், நாங்கள் வந்தோம். மர்ம நபர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதுஎன, தெரிவித்தனர். இதன் பிறகு, இருவரையும்போலீசார் அனுப்பிவிட்டனர். தாக்கியவர்கள் ஒரு ட்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று “தி ஹிந்து” பெயர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளது[10]. இப்படி குறிப்பாக ரெயில் பெட்டியில் நுழைவது, இரண்டு நிமிடங்களில் அடித்துவிட்டு மறைவது, ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையாக இருந்து வீடியோ பிடிப்பது எல்லாம், ஒரு குறிப்பிட்ட யிவி-குழுமத்தின் திறமையாகவேத் தெரிகிறது. யதேச்சையாக வீடியோ அவ்வாறு எடுக்க முடியாது. “எஸ் 6” பெட்டிக்குள் தாக்குதல் நடக்கும், அதை படம் பிடிக்கலாம் எனும்போது, போலிஸாருக்கு நிச்சயம் தகவல் அளித்திருக்கலாம், இரந்த முழுநிகழ்ச்சியை அறவே தவித்திருக்கலாம்.

Mahabodhi centre, Chennai Egmore

வேதபிரகாஷ்

19-03-2013


[3] Pro-LTTE Tamils in Tamil Nadu attack another Sri Lankan Buddhist monk, Mon, Mar 18, 2013, 09:40 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

http://www.colombopage.com/archive_13A/Mar18_1363623022CH.php

[4] Karunathilake Amunugama, Lanka’s Ministry of External Affairs’ Secretary said Colombo has lodged a formal request with the Indian authorities in this connection. Sri Lanka’s concerns arose after two successive attacks against Buddhist monks and a group of pilgrims.

http://www.deccanherald.com/content/319782/sri-lanka-calls-indian-protection.html

[5] Tamil Nadu Government took this decision after the Sri Lanka’s Deputy High Commissioner Prasad Kariyawasam made such a request from the state government and the central government.

http://www.dailymirror.lk/news/26850-special-security-for-lankan-pilgrims.html

[6] An incident of stone pelting has been reported from Bodhimaya, the Buddhist centre in the capital city of Tamil Nadu.Four monks were injured in the attack, which took place on Monday night. Window panes were broken and the centre was vandalised in the attack.”What I have been told that 10-15 people came. An auto driver called me…I live in the neighbourhood…I came here immediately. By then the monks were taken to the hospital. I do not know what exactly happened here,” said Kapil Alexander, a local resident.

http://ibnlive.in.com/news/chennai-buddhist-centre-attacked-four-hurt/141438-3.html

[8] The police said the attack on Mr. Bhandara had been quite brutal. “They slapped the monk, hurled abuse at him and hit him on the leg with a blunt object,” an officer said. The monk sustained injuries on his left leg and the group lodged a complaint with the GRP in which they said they had been carrying Rs. 40,000 in cash, which they found missing after the assault.

[10] The Government Railway Police have registered a case and are investigating. They have also intensified checks on all trains. “We suspect that those who indulged in the attack are from a Tamil organisation,” a police officer said.

http://www.thehindu.com/news/national/sri-lankan-monk-attacked-on-train-in-chennai/article4522981.ece

 

புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது!

ஜூன் 13, 2010

புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது

Buddha's skull1

Buddha's skull1

புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது: சீனாவின் கிழக்கு பகுதியில் நஞ்சிங் மாகாணம் உள்ளது. இங்கு குய்ஸியா என்ற இடத்தில் பழமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கவுதம புத்தரின் மண்டை ஓடு என தெரிய வந்தது.

Buddha's skull2

Buddha's skull2

சீனாவின் பௌத்தப் பிரச்சாரம்: சீனாவைப் பொறுத்த வரைக்கும், பௌத்தத்தை அடக்கியாள நினைக்கிறது. திபெத்தை ஆக்கிரமித்து, அதனை கட்டுக்குள் வைத்திருக்க ராணுவத்தை உபயோகித்து வருகிறது. பௌத்தத்தை வைத்துக் கொண்டு, இந்தியாவிலும் நுழைந்து வேவு பார்க்கிறது. இந்த நிலையில் தாம் பௌத்தத்தை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் முறையில், அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து டெலிவிஷன்கள் மற்றும் இண்டர்நெட்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Buddha's skull3

Buddha's skull3

காலநிலையில் முரண்பாடு, குளறுபடிகள் அது பொய் என்று நிரூபிக்கிறது: இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.  மேலும், இந்த மண்டை ஓட்டை கடந்த ஆண்டு ஆகஸ்டு 2009 மாதம் கண்டுபிடித்ததாகவும், 10 மாத ஆய்வுக்கு பிறகு தான் இது புத்தரின் மண்டை ஓடு என உறுதி செய்ததாகவும் தெரிவித்தனர்.

Buddha's skull4

Buddha's skull4

பௌத்தமும், மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது:

  1. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  2. 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
  3. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்