Posts Tagged ‘ஹிந்துகுஸ்’

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

Annala and antiquities of Rajasthan - TOD

ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு முன்னமே விளக்கப்பட்டது [பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (4) தேதி 17-09-2009]. இனி ராஜபுத்திரர்களின் வளர்ச்சி, பௌத்தத்தைப் பாதித்ததா என்று பார்ப்போம். எப்படி ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் குழப்பம் உள்ளதோ, அது மாதிரி ராஜபுத்திரர்களுக்கும், ஜைனத்திற்கும்; ராஜபுத்திரர்களுக்கும், மார்வாரிகளுக்கும்; ராஜபுத்திரர்களுக்கும் அஹிம்சைக்கும் இடையேயுள்ள குழப்பங்கள் உள்ளன. ஆனானப்பட்ட காலனெல் ஜேம்ஸ் டோட் என்பாருக்கே அத்தகைய முரண்பாடான சிந்தனையிருந்ததை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர் ராஜஸ்தான் மக்களைப் பற்றி ஆய்ந்து விவரமாக எழுதியுள்ளார்.

Col. James Tod, Annals and Antiquities of Rajasthan, (in three volumes), Motilal Banarasidas, New Delhi, 1971 (1920).

ராஜஸ்தானில் உள்ளவர்கள் எல்லாம் ராஜபுத்திரர்களோ, ஜைனர்களோ, அஹிம்ஸாவாதிகளோ அல்லர்; மார்வாரில் வாழும் ராஜஸ்தானியர், அதிலும் ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்களே அஹிம்ஸாவாதிகள்; அதிலும் திகம்பர ஜைனர்கள் மிகக்கட்டுப்பாடுள்ளவர்கள். ஆனால், ராஜபுத்திரர்கள், வீரர்கள், பராக்கிரமசாலிகள், சண்டை-போர் விரும்பிகள். அவர்களுக்கும் அஹிம்சைக்கும் சம்பந்தம் இல்லை. 8-11வது நூற்றாண்டுகளில் வட-இந்தியாவில் ஏற்பட்ட அவர்களது வளர்ச்சி, முகமதியரது படையெடுப்பு காலத்துடன் இணைந்திருப்பதைக் காணலாம். இருப்பினும், முகமதியர்களின் படையெடுப்புகளால்தாம் அவர்கள் வளர்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. மஹாபாரத யுத்தத்திற்கு பிறகு க்ஷத்திரிய வம்சங்கள் பிரிந்தன. ஒரு அரச பரம்பரையிலேயே வித்தியாசங்கள் ஏற்பட்டு தனித்தனி வசங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. சில காரணங்களால் விலக்கப்பட்ட ராஜவசத்தினர்தாம் கிரேக்கர்கள் என்று எட்வர்டு ஈ, போக்கோக், காலனெல் ஜேம்ஸ் டோட் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். கிரேக்கத்தின் மீதான “திகம்பரத்தின் தாக்கம்” முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது.
Edward Pococke, Indian in Greece, Cosmos Publications, New Delhi, 1975.

The Hindu Temple in Bandar Abbas is a historical monument that was constructed in 1892
ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது: ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது சரித்திரம் மூலம் அறியலாம் (7ம்நூற்றாண்டு BCE முதல்). சேதகா (7ம் நூற்றாண்டு BCE), ஸ்ரீநெக் (601-552 BCE), அஜாதசத்ரு (552-518 BCE), நந்த வம்சத்தினர் (4ம் நூ.BCE), சந்திரகுப்த மௌரியன் (320 BCE), சம்பிரதி (220 BCE), காரவேல (174 BCE), முதலிய ராஜாக்கள், பேரரசர்கள் தொடங்கி, வட-இந்தியா மற்றும் தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்தில் ஜைனத்திற்கு அரச-ஆதரவு அதிகமாகவே இருந்தது. விசித்திரமாக, களப்பிரர்களின் ஆட்சி மட்டும், தமிழர்களுக்கு எதிராக இருந்தது. ஆகவே இத்தகைய அரச-ஆதரவு ஜைனத்திற்கு இருந்தது, அதேகாலங்களில் பௌத்தத்திற்கு இல்லை அல்லது குறைந்தது என்பதை நோக்கத்தக்கது.

Temple at Nubia, Sudan, Africa-1

இந்தியஅரசர்களின், இந்துக்கள் ஆதிக்கம் பரவியிருந்தது: முதல் நூற்றாண்டுகளில் மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்திய அரசர்கள்
ஆண்டுவந்திருக்கின்றனர். ஏனெனில், அவர்களின் நாணயங்களில் இந்தியக் கடவுளர்கள்தாம் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, அக்காலத்தில் அந்த பிரதேசங்களில் இருந்த கோவில்கள், கட்டிடங்கள், சிற்பங்கள் முதலியனவும் இந்தியாவின் முத்திரையை/தாக்கத்தை எளிதில் காணலாம். காந்தாரம் / காந்தஹார் முழுமையாக இந்தியர்கள் / இந்துக்கள் வாழ்ந்த பிரதேசம். இங்கிருந்து மற்ற இடங்கள் எல்லாம் மிக அருகாகமைதான்.

* கஜானா / கஜினி 200 மைல்கள்;
* கோர் / கோரி / குர் / குரிஸ்தான் 220;
* நிஷாபூர் / நிஷாபுரி 420;
* பிராமணாபாத் / மன்சூரா 430 (சோநாத்திலிருந்து 300);
* லிங்கா / லிங்கப்புரி 650;
* ஜாமிந்தவர் 50;
* பாமியன் 250 (இங்கிருந்த புத்தசிலைகள்தான் தாலிபன்களால் இடித்து
நொறுக்கப்பட்டது);
* சப்ஸவர் 200;
* ஹரி-ரூத் 250;
* மைநந்த 50;

* ஹிந்துகுஸ் 300 (ஹிந்து = ஜிந்துக்கள், குஸ் = ரத்தம் வருமாறு
அறுத்தல் / கொல்லுதல், ஹிந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட இடம்);

* கர்ஷிஸ்தான் / கரிஜிஸ்தான் (கர்ஜ் = மலை, ஷார் = சக்தி வாய்ந்த தலைவன்,
அதாவது சக்தி வாய்ந்த மலை அரசன் = கிரி-ராஜ);
* காஃபிரிஸ்தான் / ஹிந்துக்கள் வாழும் நாடு;

[பெயர்கள் எல்லாம் எப்படி இந்திய மொழியில் உள்ளது என்பதனை அறியலாம்.       அதுமட்டுமல்லாது, இப்பகுதிகளில் இந்தியர்கள் / ஹிந்துக்கள் / ஹெதன்ஸ் / காஃபிர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்ததாக அவர்களே குறிப்பிடுகின்றனர் (ப. 70)]. இவையெல்லாம் பழைய சரித்திர புத்தகங்களில் பார்க்கலாம். முஹம்மது நாஸிம் சென்ற சரித்திர ஆசிரியர் எழுதிய The Life and times of Sultan Mahmud of
Ghazana, Cambridge at University Press, 1921, புத்தகத்திலும், வரைப்படத்திலும் காணலாம்.

Hittite Empire Period. Bogazkoy, Hat

இப்பகுதிகளை ஆண்ட மன்னர்களின் பெயர்கள்: பல இடங்களின் பெயர்கள் மட்டுமல்லாது, அரசர்களின் பெயர்களும் இவ்வாறு உள்ளன:

* ஜெயபால் (ஹிந்துஸாஹிய்யா வம்சத்தைச் சேர்ந்தவன். ஒரு லட்சம்
வீரர்களுடன் கஜானா வரைச் சென்று முகமதியரை விரட்டியடித்தவன),
* அனந்தபால்
* பிராமணபால்
* பாஜி ரே
* பீம்ராஜா / பீம்தேவா
* பீம்பால்
* திரிலோசனபால்
* சந்திரபால்
* சந்திர ரே
* கந்த ராஜா
* கோபால்வர்மா

* ஜெயபால்
* ஜெய சந்த்
* ஜானகி ராஜா
* கபகன் ராஜா
* மூல்சந்த் ராஜா*
* நந்த ராஜா
* பரூஜ்பால்
* ராஜ்யபால்
* ராம்ராஜா
* வித்யாதரா

 

இவர்கள் எல்லாம் காஷ்மீரத்திலிருந்து மேற்கே காஸ்பியன் கடல் வரை, வடக்கே
கோடானையும் தாண்டியுள்ள பகுதிகளை ஆண்ட ராஜாக்கள். எனவே, இவர்கள் இருந்த வரை, அரேபிரர்கள், பாரஸீகர்கள் முகமதியராக மாறியப் பிறகும் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், பிறகு இந்திய அரசர்கள் தோற்க ஆரம்பித்தனர். கீரத் மற்றும் நூர் ஆறுகளுக்கு இடையேயிருந்த இடம் “மகிழ்ச்சிகரமான பள்ளத்தாக்கு” (Pleasant Valley) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் சிங்கத்தை / சிங்க உருவங்களை வழிபட்டு வந்தனர். அது நரசிம்மர் என்று பல ஆசிரியர்கள் எடுத்துக் காட்டினாலும், இவர் அதை சாக்கிய சிங்கம் எனக்குறிப்பிட்டு, அதனால் அந்த இடத்தில் பௌத்தர்கள் நிறைய வாழ்ந்திருக்கலாம் என்கிறார் (ப.74-75). இதனால், மஹ்மது (8thcent.CE) அங்கு படையெடுத்துச் சென்று அங்குள்ள வரை முகமதியர்களாக்கினான். கர்மதியர், பாதினி மற்றும் முதாஜிலித் முதலிய மக்கள் ரகசியமாக தமது முன்னோர் மதத்தை பின்பற்றுவதை அறிந்து அவர்களை ஒடுக்க பல கொடுமையான முறைகளைக் கையாண்டான். மக்களைப் பிடித்து கழுவிலேற்றினான், கல்லால் அடுத்துக் கொன்றான், விலங்குகளை மாட்டி இழுத்துச் சென்றான்; அவர்கள் வீடுகள் சோதனையிடப் பட்டு அவர்கள் பூஜித்து வந்தவை, புத்தகங்கள் எல்லாம் எரிக்கப்பட்டன; 50 ஒட்டகங்களின் மீது ஏற்றப்பட்ட புத்தகங்களை குவித்து, எறியூட்டி அதில் கர்மதியர் அதில் கழுவேற்றப் பட்டனர் (ப.83, 160).
Muhammad Nasim, The Life and times of Sultan Mahmud of Ghazana, Cambridge at University Press, 1921.

Bogozkoy temple- central citadel

இந்துக்கள் / பௌத்தர்கள் தனிமையில் இருந்தது: ஈராக்-ஈரானின் பெரும்பகுதிகள் 12வது நூற்றாண்டுகள் வரை தனியாக, அமைதியாக இந்திய-மக்கள் (காஃபிர்கள்) வாழ்ந்த்து வந்துள்ளார்கள் எனத்தெரிகிறது (காஃபிரிஸ்தான்). அமைதி விரும்பும் அவர்கள் தமது பாதுகாப்பிற்கு பாதுகாவலர்கள், சேனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. ஏனனில், மஹ்மது கஜானா (11th.cent.CE). அங்கு மலைகளை உடைத்து, பாறைகளை உடைத்து, சாலைகளை போட்டு அங்கடைந்து. மக்களைத் தாக்குவதாக உள்ளது. இங்கு, பௌத்தர்கள், இந்துக்களுடன் சேர்ந்து போராடியதாக தெரியவில்லை. முன்பு, விஹாரங்களில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருந்தவர்கள், இங்கு எப்படி இருந்தனர் என்று தெரியவில்லை. சண்டையிட்டது மற்றும் அத்தகைய வெறிகொண்ட முகமதியரை எதிர்த்து போராடியவர்கள், சிந்து, ராஜஸ்தான், காந்தாரம், பஞ்சாப், காஷ்மீர இந்து அரசர்கள்தாம். ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் வலுவிழுந்த நிலையைக் காணலாம். முகமதியம் வளர்ந்தற்கும், பௌத்தம் தேய்ந்ததற்கும் இங்கு நிச்சயமாக சம்பந்தம் உள்ளதைக் காணலாம். ஆகவே, பௌத்தர்கள் பெருமளவில் முகமதியமதத்தில் இணைந்திருக்க வேண்டும். இங்கு சில கவனத்தை ஈர்க்கும் வகையிலுள்ள விஷயங்களை நோக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind

புத், பூத், புத்து என்றெல்லாம் பௌத்தர்கள் அழைக்கப்பட்டதேன்?: பாரசிகமொழியில் “புத் / பூத்” (but / buth / Budd) என்றால் விக்கிரகம் / சிலை என்று பொருள். ஐரோப்பிய எழுத்தாளர்கள் இதை “புத் / புத்தா” என்றும் பொருள்கொண்டு தவறாக எழுதினர். பிறகு “தேபால்” என்ற வார்த்தை 120 அடி உயரம் மற்றும் அதே அளவு விட்டம் கோபுரம் கொண்ட கட்டிடமாகும் (துக்பது-இ-கிராம், ப.10). ஆனால் எம். ரைனாட் போன்றவர்கள், “தேபால்” என்றால் ஒரு பௌத்த கோவிலை மட்டுமல்லாது, ஒரு பௌத்த ஸ்தூபத்தையும் குறிக்கும்; புத் என்ற வார்த்தை ஃபோத் என்றதிலிருந்து என்பதைவிட ஃபேதௌ என்ற சொல்லிலிருந்து பெறலாம். சைனர்கள் அவ்வாறே அழைக்கின்றனர், என்கிறார். கிலேப்ரோத் என்பவர் “ஃபௌ-ரௌத்” என்றால் இறந்தவர்களின் உடலின் ஒரு பாகத்தைக் கொண்ட (relic), பிரமிட் / சேபல் (Chapel) போன்ற நினவிடங்களைக் குறிக்கும், என்கிறார். (quoting from Hammer-Purgstall, Burnouf, Fergusson).
Elliot and Dowson, The History of India: As told by its own historians, Low-Price Publications, New Delhi, Vol.I, pp.504-505.

Gorri Jo Mandar - Pakistan

சிரமணர்கள் யார் – சிரமணர்களும், பௌத்தர்களும் ஒன்றா?: Sramanas, Sramanes, Sarmanes, Sarmanae, Germanae, Samanaei, Semnoi என்று பலவாறு குறிப்பிட்ட “ஸ்ரமனா” என்ற வார்த்தை பௌத்தர்களைத் தான் குறிப்பிடும் என்கின்றனர் (Ibid, 506, fn.1). முன்பு இதே வார்த்தை ஜைனர்களுக்ககக் குறிப்பிடப் பட்டதை நினைவு கூறலாம். அவ்வாறு பௌத்தர்கள் அதிகமாக இருந்தபோது, அரேபியர்களுக்கு / முகமதியர்களுக்கு எதிராக அவர்கள் போராடியதாக இல்லை. இந்து ராஜாக்கள்தாம் அவர்களை எதிர்த்து போராடியுள்ளனர். ஆகவே, இருந்த பௌத்தர்கள் ஒன்று இஸ்லாமிய கத்திக்கு இரையாகியிருக்க வேண்டும் அல்லது மதம் மாறியிருக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-5

சிரமணர்களும், பிராமணர்களும்: “சிரமணர்கள் / பௌத்தர்கள்” இருந்தது முன்பு குறிப்பிடப்பட்டது. ஆனால், “சிரமணாபாத் / புத்தபாத் / பௌத்தபாத்” என்று இருந்ததாக முகமதியர் சொல்லவில்லை. மேலும் பிராமணர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள், முகமதிய எழுத்தாளர்களில் காணப்படுகின்றன. “பிராமணாபாத்” என்ற ஊர் இருந்தது, அதில் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் இருந்தது, தாஹிர் இறந்தபிறகு, முஹமது காசிமிடம் சென்று பிராமணர்கள் பேசியது (p.184), பிறகு காசிம் அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று குவித்து, பிராமணாபாதை இழித்தது முதலிய விவரங்கள் தாரிக்-இ-தஹிரி என்ற நூல் விளக்குகிறது (pp.259-260). இங்கு இந்துக்கள் வழிபடும் கோவில் “புத் கோவில்” என்றே அழைக்கப்படுகிறது! பௌத்தர்கள் அங்கிருந்தற்கான எதிர்மறை அத்தாட்சிகள் (negative evidences) என்று எல்லியட் மற்றும் டாவ்ஸன் குறிப்பிடுகிறார்கள்:

* புரோகிதம் இருந்தது எங்குமே குறிப்பிடப்படாமை.

* மற்ற சடங்குகள் அவர்களால் செய்யப்பட்டது

* விதவைகள் எரிக்கப்பட்டது

* பூணூல் அனிந்தது, அணிவிக்கப்பட்டது

* சம்பிரதாயங்கள், நோன்புகள், பூஜைகள் செய்தது அல்லது

* மற்ற பிராமணர்களுக்கு என்று அடிப்படையாக உள்ள எந்த சடங்குகள்
நடத்தப்படாமை / பின்பற்றப்படாமை

இவையெல்லாம் இல்லாததால், பௌத்தர்கள் தாம் “பிராமணாபாதில்” இருந்திருக்கவேண்டும் என்று வாதிக்கிறார். வீடு-வீடாக அவர்கள் பாத்திரத்தில் பிச்சையெடுத்தது, பௌத்த சடங்கைத்தான் குறிக்கும் என்றும் வாதிக்கிறார் (ப.506). ஆனால், பிராமணர்கள்தாம் முஹமது காஸிமுடம் பேசுகின்றனர் (ப.182); அப்பொது அவர்கள் சொல்வதாவது, கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு, விக்கிரங்களும் உடைக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் இப்பொழுதெல்லாம் முன்போன்று சடங்குகள், சம்பொரதாயங்களை செய்வதில்லை; வீரர்கள், வியாபாரிகள் முதலியோரும் நிறுத்திவிட்டதால் தாங்கள் ஏழ்மையில் உழல்வதாகவும், அதனால் அவர்களால் வரி கட்ட முடியாது என்கின்றனர் (ப.185); உடனே காஸிம் ஹஜ்ஜாஜ் என்பாரிடம் அனுமதி பெற்று யூதர்கள், கிருத்துவர்கள் போன்று தனது ராஜ்யத்தில் பழையபடியே மதத்தைப் பின்பற்றலாம் (ப.186), ஆனால் அவன் அவர்கள் தமது மதத்தை பின்பற்ற வேண்டுமானால் ஜெஸியா வரி கட்டி வாழலாம் என்று ஆணையிடுகிறான்; இதனால் அவர்கள் தாமிர பாத்திரங்களை எடுத்துக் கொண்டு பிச்சைக் கேட்கிறார்கள்; மேலும் அவ்வரியை சேகரிக்கவும், பிராமணர்களையே நியமிக்கிறான் (ப.184)!

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-2

ஹிந்துபௌத்த மதங்கள் சேர்ந்தே இருந்தன: ராஜா ஹிந்துவாக இருப்பார், ஆளுனர்கள் பௌத்தர்களாக இருப்பர். பிராமணாபாதின் அரசன் ஒரு பௌத்தனாக இருந்தான். அவனது ஆன்மீக குரு ‘சமனி புதுகுய்’ ஒரு பைத்தவிஹாரத்தை வைத்திருந்தார். ஆனால் இத்தகைய நிலை காசிம் படையெடுத்து வந்தபோது, அவௌகளின் நெருப்பு மற்றும் கத்திகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை. அவர்களது ஜெபமாலைகள் முகமதிய கத்திகளுக்கும் ஈடாகவில்லை. அவர்களது அன்பும் அமைதியும் அவர்களது நெருப்பு மற்றும் கத்திகளின் முன்பு சாய்ந்தன. தேபால், சேஹ்வான், நெரூன், பிராமணாபாத், அலோர், மூல்தான் முதலியவை வீழ்ந்தன. இந்தவிதமாக ஒன்றரை வருடங்களில் அங்கிருந்த ஹிந்து ராஜ்யம் அழிந்து, இருளில் மூழ்கியது.

T. Thakur, Sindhi Culture, University of Bombay, 1959, pp.14-15.

ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் பிறகு
வலுவிழுந்திருக்க வேண்டும். முகமதியம் வளர-வளர, பௌத்தம் தேய்ந்தது, இந்து அரசர்கள் (இப்பொழுதைய) இந்தியாவிற்கு வெளியே போரிட்டது, பிறகு, முகமதியர் அங்கிருந்த இந்து அரசர்களைக் கொன்று அல்லது மதம் மாற்றி முகமதியர்களாக்கிய பிறகு, (இப்பொழுதைய) இந்தியாவிற்குள் நுழைவது கொள்ளை அடிப்பது முதலிய நிகழ்ச்சிகளைக் காணலாம்.

Temple at Nubia, Sudan, Africa-Lion temple

இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா: முஹமதுவிற்கு (570/571-632 CE) மற்றும் இஸ்லாமிற்கு முன்பான அரேபியாவைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் விவரமாகக் கூறுவதில்லை. அரேபியர்கள் இந்தியர்களைப்போலவே விக்கிரங்களை வணங்கிக் கொண்டு, தீர்த்தயாத்திரைகள் செய்துகொண்டு, நாடோடிகளாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதிருஷ்டம் (ஜத்), நல்லகாலம் (சத்), வரம் / தேவை (ரிதா), நட்பு (வத்), உயர்ந்த இடம் / பதவி (மனாஜ்), என்ற ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுளை / தேவதையை வைத்திருந்தனர். எழுதப்பட்ட இலக்கியங்கள் இல்லையென்றாலும், நினைவிலேயே வைத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகள் இருந்தன. ஆனால், அரேபியரிடம் குலச்சிந்தனகளால் அடையாளங்காண முற்படும்போது, பிரிவுகள் ஏற்பட்டபோது தங்களுக்குள் சண்டையிட்டு தனித்து வாழ்ந்தனர். இதனால், தமது அடிப்படை தேவைகளுக்குக்கூட மற்றவர்களை நம்பி வாழவேண்டியிருந்தது. இப்பொழுது போலவே, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அப்பொழுதும் மற்ற மக்களின் மற்றும் பொருட்களின் உதவி இல்லாமல் அவர்களுக்கு சாதாரண வாழ்க்கைக் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. முன்பு இஸ்லாம் என்ற தீவிரமான பிணைப்பினால் அரேபியர்கள் இ ணைக்கப்பட்டு, மற்றவர்களை கொள்ளையிட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். வர்த்தகப் பொருட்களை ஏற்றிச்செல்லும் கூட்டங்களை (caravans) வழி பறிசெய்து, கொள்ளையடித்து, பிணைக்கைதிகளுக்காக பணம் பறித்து, மற்றமக்களை உறிஞ்சியே வாழ்க்கை நடத்தி வந்தனர்.
M. M. Ahariff (Ed.&Trans.), A History of Muslim Philosophy, Vol.1, LPP, New Delhi, 1999, see under chapter.VI, Pre-Islamic Thought, pp.126-135.

“அதேமாதிரி, முகமதியரின் மத்திய ஆசிய படையெடுப்புத் தாக்குதல்களும் பௌத்தர்களின் கலையை முடிவிற்கு எடுத்து வந்தது. கஸ்கர் என்ற பிரதேசத்தின் ராஜா, கிஜில் என்ற இடத்திலுள்ள விஹாரங்களை இடித்தொழித்தான். துருக்மேனிஸ்தானம் தான், எப்படியோ முகமதியரின் தாக்குதலிருந்துத் தப்பித்தது. மங்கோலியர்களின் கொடுமைகள் மற்றும் இஸ்லாத்தின் குரூரங்கள்
பௌத்தம் தாக்குப் பிடிக்கமுடியாமல் மறைந்தது”.

Benjamin Rowland, The Art and architecture of India: Buddhist, Hindu, and Jain, London, Puffin, 1971, p.196.

E. von Grunebaum, Byzantine Iconoclasm and the Influence of the Islamic Environment, History of Religion, 2,  no.1 (1962), pp. 1.

Buddha sculptures resembling Greek-2

உருவவழிபாடு இருந்த மக்களிடம் உருவவழிபாடு எதிர்க்கும் மதம் உருவானது: இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எப்படி உருவ வழிபாடு / விக்கிர ஆராதனை அரேபியா முதல் சிந்து வரை பரந்து-விரிந்து, வெகுஜனமக்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரையிலும் இருந்து வந்தபோது, அத்தகைய மக்களிடையே, எப்படி அப்படியே தலைகீழாக மாறிய அல்லது உள்ள மத-சமூக நம்பிக்கை-சம்பிரதாயங்களுக்கு எதிராக ஒரு புதிய மதம் தோன்றியிருக்கவேண்டும்? முதல் நூற்றாண்டுகளில் எப்படி, உருவவழிபாடு /விக்கிர ஆராதனை வேண்டும் என்று ஹீனயானப்பிரிவு தனியாக செயல்பட்டதோ, அதேபோல அது வேண்டாம் என்ற ரீதியில் முகமதியம் / இஸ்லாம் உருவெடுத்தது நோக்கத்தக்கது. மேலும், அங்கிருந்த விக்கிரங்களின் பெயர்கள் அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்று அழைக்கப் பட்டு அவை “அல்லாவினுடைய மகள்கள் /புத்திரிகள்” என்றே குறிப்பிடப்பட்டன (குரான்). இதைத் தவிர காஃபா / காஃபத்துல்லா (கடவுள் வசிக்கும் இடம்) என்று சொல்லப்படும் இடத்திலேயே சுற்றிலும் 360 விக்கிரங்கள் இருந்ததாகவும் முஹமது அவற்றையெல்லாம் உடைத்தெரிந்து விட்டு, காஃபா-கல்லை மட்டும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாக முகமதிய ஆசிரியர்ளே குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும், அரேபியாவிலிருந்து கிழக்கேயுள்ள நாடுகளில் விக்கிரங்கள் / சிலைகள் 21ம் நூற்றாண்டுகள் வரை இருந்தத்து தெரிய வருகின்றது (பாமியன்
புத்த சிலைகள் உடைக்கப்பட்டன).

Temple at Nubia, Sudan, Africa

பௌத்தர்கள் முகமதியர்களாகியது: 1026ல் முஹ்மதுவின் புகழ் பரவும்போது, கடா-கான், ஈகூர்-கான் முதலிய அரசர்கள் அவனுடன் சம்பந்தம் வைத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால், மஹ்மதுவோ அவர்கள் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுக்கிறான் (ப.36). இந்த இரு பகுதிகள் கடா மற்றும் ஈகூர் சைனாவின் மாகாணங்கள் (ப.16, அடிகுறிப்பு.3). மேலும் முன்பு, இலக்-கான் என்பவன், குரஸானில் 1006ல் நுழையும்போது, அவன் சுக்பால் அல்லது நவாஸா ஷா என்பனுக்கு அரசாக்கத்தை ஒப்புவித்து செல்வதாக உள்ளது (ப.98). நவாஸா ஷா என்றால் ஷாவினுடைய பேரன் (ப.98, அ.கு.1). ஷா என்ற பாரசீக வார்த்தை க்ஷ்த்திரிய என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் (ப.60, அ.கு.4). ஆகவே, இவர்கள் பௌத்தத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள், அரேபிய இனத்தவரல்லாததால், இஸ்லாமியர்களாக இருப்பினும், திருமணம் உறவுகள் வைத்துக் கொள்ளும் வரையில் விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஆகவே, அவர்கள் தங்களது பௌத்த அடையாளங்களை மனதளவிலும் துடைத்துப் போட்டுவிட்டு, தமது புதிய மதமான இஸ்லாத்தின் மீதுள்ள விசுவாசத்தைக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டர்கள் எனத்தெரிகிறது. என்றுமே புதிய மதம்-மாறிகள் அதிகமான வெறியுடன் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் தமது செயலை, அதாவது பழைய மதத்தை விட்டு புதிய மதத்தற்கு சென்றதை, நியாயப்படுத்த வேண்டியுள்ளது, மேலும் புதிய மதத்தினரிடம் நம்பிக்கைப் பெறவேண்டும் என்றால், ஏதாவது பழைய மதத்தினருக்கு எதிராக பெரியதாகச் செய்தால்தான் தமது நிலைப்பாடு வெளிப்படும், அங்கீகரிக்கப்படும் எனும்போது, அவர்களது அழிக்கும் வெறி பழைய மதத்தின்மீது திரும்புகிறது. [மாலிக்காஃபூரை இங்கு நினைக்கத் தக்கது. அவன் இந்துவாக இருந்து
முகமதியனாகிய பிறகு, அவன் இந்து மக்களுக்கு, மதத்திற்கு விரோதமாக செய்த செயல்கள் தமிழ் மக்களே நன்கு அறிவர்].

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-4

இந்துக்கள் ரகசியமாக மத்தைப் பின்பற்றியது குறைந்து, மறைந்தது: இடைக்காலத்தில் (19ம் நூற்றாண்டு வரை), ஐரோப்பிய யாத்திரிகள், இவ்விடங்களில் பிரயாணம் செய்தபோது, முகமதியத்திற்கு-முந்தைய அரேபியா வரை அந்நிலையிருந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். அதே மாதிரி, “பட்டு-யாத்திரிகர்-பாதை” (Silk-route) எனப்படும் இந்திய வடமேற்கு திசை வழியாக, மத்திய ஆசியா மூலம் சீனா வரையிலான இடங்களில் முதலில், இந்து பிறகு பௌத்தத்தின் எச்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது (இன்றளவும் அகழ்வாய்வில் அத்தகைய சிற்பங்கள், உடைந்த நிலையில், மற்ற ஆதாரங்கள் கிடைப்பதும் நோக்கத்தக்கது). இதே நிலைதான் இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானின் அப்பொழுதயை நிலை. இஸ்லாம் தலையெடுத்தபிறகு, இந்துக்கள் ரகசியமாக 20-21வது நூற்றாண்டுகள் வரை அவ்விதமாக வாழ்ந்து அவஸ்தைப் பட்டது, எப்போதாவது, ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் [2009ல், உள்ள சீக்கியர்கள் ஜெஸியா செல்லுத்த வேண்டும் என்று தாலிபான்கள் ஆணையிட்டது ஞாபகம் இருக்கும்].

யுத்ததர்மத்தைக் கடைபிடிக்காத முகமதியர்: ஏனெனில், முக்கியமாக முகமதியர் பொழுது சாய்ந்தபின்னரும், இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர், பின்பக்கமாக வந்து தாக்கினர் (ப.90),சாதாரண மக்களை துன்புறுத்தினர்; அவர்கள் பொருட்களைக் கொள்ளையிட்டனர்; பெண்களை அபகரித்துச் சென்றனர்; தோற்ற / பிடிக்கப்பட்ட வீரர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்பட்டன (ப.64); இத்தகைய யுத்ததர்ம மீறல்களை இந்தியர்கள் என்றும் பார்த்தது கிடையாது. அவர்கள் இப்பொழுதுமே, காலை சூரியோதயம் முதல், மாலை அஸ்தமனம் வரை யுத்தம்; இரவில் இல்லை; புறமுதுகிட்டு ஓடுபரைத் தாக்குவது கிடையாது; ஆயுதமற்றவர்களைத் தாக்குவது கிடையாது முதலிய விதிகள் முகமதியர் என்றும் பின்பற்றியதில்லை. அமைதியாகத் தனித்தனியாக ஆண்டுவந்த அவர்கள், முகமதியர்கள் தாக்கியபிறகு அத்தகைய முறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட ராஜாக்கள் முகமதியர்களை எதிர்த்து போரிட்டடலும், அவர்களது துரோகம், வஞ்சகம், வெறி, முதலிய செயல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்று துவண்டனர். கப்பம் கட்டி / ஜெஸியா செல்லுத்தி வாழ்ந்தனர். அனால் 712ற்குப் பிறகு, 12-13ம் நூற்றாண்டுகளில், இப்பகுதியே மாறிவிட்டது.

Buddha sculptures resembling Greek-Buddha-Herakles

ராஜபுத்திரர்களின் பலம் குறைந்ததால், ஜைனம் தேய்ந்தது, பௌத்தம் முகமதியத்தில் கரைந்தது: இவ்வாறு, ராஜபுத்திரர்கள் வளர்ந்தது தான், பௌத்தர்கள் வட-நாட்டில் வலுவிழந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி தள்ளப்பட்டு, மத்தியத்தரைகடல்-நாடுகள், மத்திய ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளை அடைந்தனர் எனலாம். முதலில் ஜைனம் இவ்வாறு பரவியது, பின்னர் பௌத்தம் சென்றதும் இவைக்களுக்கு இடையேயுள்ளக் குழப்பங்களைக் காணலாம். அங்குள்ள பௌத்தமத நினைவுச்சின்னங்கள் அதை மெய்ப்பிக்கிறது. மேலும், தெற்கிலும் சைவம்- வைணவம் வளர ஆரம்பித்தது, பௌத்தத்திற்கு ஆதரவாக இல்லை. மேலே குறிப்பிட்டபடி, அரசவம்சத்தினரின் ஆதரவு ராஜஸ்தானத்தில் ஜைனத்திற்கு இருந்ததால், பௌத்தம் அங்கு வளரமுடியாமல் போயிற்று. ஜைனத்தின் அஹிம்சை பௌத்ததை விட மேலானது. ஆகவே, க்ஷ்த்தியர்களின் பாதுகாப்போடு, ஜைனம் வளர்ந்தது. அதாவது குறிப்பாக ராஜபுதனத்தினரின் வளர்ச்சி,

  • முன்னம் கிரேக்கரைத் தடுத்தது;
  • பின்னர் ஹுணர்கள்-சாகர்கள்களைத் தடுத்தது;
  • அரேபியரைத் தடுத்தது;
  • முகமதியம் வளர்ந்த பின்னர் இஸ்லாத்தைத் தடுத்தது

[இவர்களை வென்று அடக்கி-ஒடுக்கியதால் விக்கிரமாதித்யன் சரித்திரத்திலிருந்து மறைக்கப் பட்டான்]; இதனால் ஓரளவு பௌத்தம் காப்பற்றப்பட்டது எனலாம். ஆனால், ராஜபுத்திரர்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் முகமதியர்களின் தாக்குதல்களால் வலுவிழந்தபோது, பௌத்தமும் முகமதியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

Gandhara remains - Pakistan

தீவிர அஹிம்சை தீவிரவாதத்திற்கு இடம் கொடுக்கும்: என்னதான் அஹிம்ஸாவாதியாக இருந்தாலும், தன்னைத் தாக்க வரும் எதிரியிடமிருந்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவன் தனது கையை உயர்த்தாமல் இருப்பான் என்று சொல்லமுடியாது. ஒன்று அடிவாங்கக்கூடிய சக்தி இருக்கவேண்டும். சாத்விக உணவு உண்ணும், அஹிம்ஸாவாதிகள் அவ்வாறு இருபார்களா என்பது சந்தேகமே. இல்லை, அடி தனது மீது விழாமல் இருப்பதற்காவது, கையை உயர்த்த வேண்டியுள்ளது. இரவில் விளக்கு வைத்தால், பூச்சிகள் விழுந்து சாகுமே என்றிருந்த அஹிம்சாவாதிகளும், இருட்டைப் போக்கவேண்டும் என்றபோது, விளக்குகளை வைக்கவே செய்தனர், செய்கின்றனர். ஆகவே, காலத்தின் கட்டாயமாக, பிறகு நிச்சயமாக முகமதியிரிடமிருந்துத் தங்களைக் காத்துக் கொள்ள ராஜபுத்திரர்கள் போராடவே அவசியமாக இருந்தது. மேலும், முகமதிய-ராஜபுத்திர போர்களிடமிருந்து, ராஜபுத்திரர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிகின்றது. எனவே, முகமதியம் மத்தியத்தரைகடல் நாடுகளிடமிருந்து வலுவுடன் பரவ ஆரம்பித்தபோது, நிச்சயமாக பௌத்தர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். பலாத்காரமாக மதம் மாற்றப்பட்ட பௌத்தர்கள், மனோரீதியில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நிலைக்கும் மாறியிருக்கலாம். எப்பொழுதுமே, புதியதாக மதம் மாறியவர்கள், தாம்
புதியாதாக ஏற்றுக்கொண்ட மதத்தினை மிகவும் தீவிரமாகவே ஆதரித்துப்பேசுவர். ஏனெனில், தாம் செய்தது அல்லது தமக்கு செய்யப்பட்டதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

வேதபிரகாஷ்
05-10-2009.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-3