Posts Tagged ‘லாமா’

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

Foundations - Dharmakirtis philosophy

சிறுபிள்ளை, சிறுவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனரா, எப்பொழுது?: அக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்ற சிறுபிள்ளை / சிறுவன் “ஆளுடைய பிள்ளை” திருஞான சம்பந்தர் தான், அவர் தான் 638-656 காலத்தில் 16 வயது வாழ்ந்து, சமண-பௌத்தர்களை தர்க்கத்தில் வென்றவர். இதனை, தர்மகீர்த்தி பற்றி ஆராய்பவர்கள் கவனிக்காமல் இந்ருந்தது / இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. “மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்”, என்றெல்லாம் தாரநாதர் விவரிப்பதும் நோக்கத்தக்கது. ஒருவேளை அக்காலத்திலேயே சம்பந்தர் சிறு வயதில் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தி, பௌத்தர்-ஜைனர்களை வென்றதால், அவர் புகழ் பரவி, அதற்கேற்றார்போல, 17ம் நூற்றாண்டில், தாரநாத அப்புத்தகதை எழுதும் போது, தர்மகீர்த்தியை உயர்த்தி, சங்கராச்சார்யவை சிறுபிள்ளையாக்கி, குறைத்துக் காட்டினார் போலும்! இருப்பினும் சம்பந்தர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார், சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்தார், என்றெல்லாம் கவனிக்கத் தக்கது. மேலும், சிறுவர்கள் மீது வன்முறையினை திணிப்பது, அதாவது, தோற்றால், இறக்க வேண்டும் போன்ற சரத்தையும் நோக்கத் தக்கது. ஏனெனில், சம்பந்தர், அதே காரணத்திற்காகத் தான், சிலர் ஜைனரை கழுவேற்றி வீட்டார் என்ற வாதத்தை வைத்து எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்கள் இத்தகைய விவரங்கள் முழுவதையும் படிப்பதில்லை போலும்.

kumarila bhatta - Tantravarttika- Dharmakirti

14-15 வயது பையனுடன் சண்டை போட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தது ஏன்?: சம்பந்தர் காலம் [c.638-654 CE] என்பதால் அவர் 16 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாகிறது. அப்படியென்றால், அந்த வயதிலேயே உடனுக்குடன் செந்தழில் பதிகம் பாடக் கூடிய திறமைப் பெற்றிருந்தார்; மத-தத்துவங்களில் வாதம் புரிய வல்லவராக இருந்தார்; மருத்துவம் முதலியவற்றையும் அறிந்திருந்ததால் கூன்பாண்டியனின் நோயையும் தீர்த்தார் என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. அதனால், சிறுவயதிலிருந்தே அவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்தார் என்றாகிறது. ஆகவே, அத்தகைய சிறுவனுடன், வாதிட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. அக்காலத்தில் ஒருவர், இன்னொருவருடன் வாதம் புரிவார். தோற்றால், ஒப்புக் கொண்டு மற்றவரின் தத்துவத்தை, ஞானத்தை ஒப்புக்க்கொள்வார். ஆனால், ஜைனர் மற்றும் பௌத்தர் காலங்களில் தான், ஒன்று தங்களது மதத்தை ஏற்றுக் கொள் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கையுடன் வாதப்போரை ஆரம்பித்து வைத்தனர். அரசு சார்பில் மதத்தலைவர், ராஜகுரு போன்றோர் தோற்றால், அந்த அரசனை மதமாற்றி, அந்த அரசையும் அவர் மதசார்பான நாடாக்கினர். இவ்வாறு தான், ஒரு காலகட்டத்தில், பாரதம் முழுவதும் அதிகார ரீதியில் ஜைனர் மற்றும் பௌத்தர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரான, சனாதன, வேத அல்லது இந்து நம்பிக்கையாளர்களை முழுவதுமாக மாற்ற முடியவில்லை.

Sstarving Buddha - sallekhana - suicide

சமணர்கள் வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள்: ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, “நாணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்காணொணா முத்தி இன்பம் காணலாம்,” என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கள். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது[1]. தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்ளத. வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருணைத் திறம் நன்கு புலப்படுகின்றது. அதுகாறும் வெளிவராத “தக்கயாகப் பரணி” நூலை ஶ்ரீமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரோடு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்” பார்த்துக் கொண்டும் இருந்தார். எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என எடுத்துக் காட்டப்படுகிறது[2].

Sallekhana and starving Buddha

தர்மகீர்த்தி தடுத்தது, சங்கராச்சார்ய கங்கையில் குதித்து செத்தது மற்றும் சம்பந்தர் தடுத்தது, சமணர் கழுவேறியது: தர்க்கத்தில் தோற்ற சங்கராச்சார்ய கங்கையில் குதிக்கும் போது தர்மகீர்த்தி தடுத்தது, பௌத்தத்தை ஏற்ருக் கொள்ல சொன்னார். இது வாரணாசியில் நடந்தது.  அதேபோல சமணர் தோற்று கழுவேற எத்தனித்த போது, சம்பந்தர் தடுத்த போது, அவர்கள் கழுவேறினார்கள். அதாவது, வாதத்தில் தோற்றவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கை, சரத்து அக்காலத்தில் உண்டானதா என்று கவனிக்க வேண்டும். முகமதியர் பின்னர், இதே கொள்கையினைக் கடை பிடித்தது தெரிந்ததே. ஆக, இதில் வன்முறை ஊக்குவிப்பு என்பது எவ்வாறு நடக்கிறது, தானாக சாக ஒப்புக் கொள்வது என்பது தற்கொலையிலிருந்து வேறுபட்டதா, இல்லை, அவ்வாறு சாகாவிட்டாலும், சாவு அவர்களுக்கு காத்திருக்கிறது என்ற நிலையிருந்ததா, அல்லது, மரண தண்டனை கொடுத்து, இத்தகைய கதைகளை புராணம் போல எழுதி வைத்தனரா, முதலியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆனால், இப்பொழுது, மதவாத, வகுப்புவாத திரிபுவாதங்கள், செக்யூலரிஸ போர்வையில், இந்துமதத்திற்கு , பிராமணர்களுக்கு எதிராக வைத்து எழுதி வருகின்றனர். அதில், எடுத்துக் காட்டப்பட்ட உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Jains persecuted - sculpture from Chidambaram

தர்மகீர்த்தி இந்தியரா, வெளிநாட்டவரா?: விகிபிடியா[3] தர்மகீர்த்தி பற்றி இவ்வாறு கூறுகிறது, “தர்மகீர்த்தி  (Dharmakīrti) (கி பி 7-ஆம் நூற்றாண்டுஇந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய  பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் எழுதிய நூல் ஹேதுபிந்து ஆகும். கி பி ஏழாம் நூற்றாண்டில் சுமத்திரா தீவில் பிறந்த தர்மகீர்த்தி சைலேந்திரன் என்ற பெயரில் இளவரசராக வாழ்ந்தவர். ஸ்ரீவிஜயம் பகுதியில் அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கிய இவர் பின்னர் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த இயல் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பௌத்த சமய தத்துவங்களில் சிறந்து விளங்கியவரும்காஞ்சிபுரத்தில் பிறந்தவரும், பௌத்த சமய துவக்க கால தர்க்க தத்துவ அறிஞராகவும் விளங்கிய திக்நாகரின் புகழ் பெற்ற பௌத்த தத்துவங்களுக்கு மீள் விளக்க உரைகள் எழுதியவர். இவரை எதிர்த்து வாதிட்ட  குமரிலபட்டரை நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியவர்”. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பிராமணர், சங்கரர வென்றவர் என்று எல்லாவற்றையும் விடுத்திருக்கிறார். அதாவது ஆங்கில[4] “தர்மகீர்த்தி” ஒருமாதிரியாகவும், தமிழ் “தர்மகீர்த்தி” வேறுமாதிரியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்[5]. ஒருவேளை இவ்வுண்மையினை அறிந்து, தமது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்று ஒருதலைப் பட்சமான விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர் போலும்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Jain impaled - Avudaiyar Temple-2

[1]  நாம் அறிந்த கி.வா.ஜ, பக்கம்.237.

[2]https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C.pdf/238

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

[4] https://en.wikipedia.org/wiki/Dharmakirti

[5] If we go by Tibetan sources, he seems to have been born in South India and then to have moved to the great monastic university of Nālandā (in present day Bihar state) where he was supposedly in contact with other Buddhist luminaries, such as Dharmapāla (530–561 C.E.).https://plato.stanford.edu/entries/dharmakiirti/