பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire, 1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

15 பதில்கள் to “பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?”

  1. தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா? | Critical Says:

    […] https://buddhismstudies.wordpress.com/2010/02/20/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%… […]

  2. vedaprakash Says:

    இது முதலில் மின் தமிழில் பதிவானது, அப்பொழுது சிலர் விமர்சித்திருந்தனர். அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்:

    kra narasiah

    9/11/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

    Indian merchant guild did penetrate south China with Hinduism. Evidences are available for this. Dated to thirteenth century and credited to Late T N Subramaniam, for recognising in 1956, from Quanzhou, a famous medievval port in South China, is an important inscription. The inscription is engraved in two stones (originally a single stone) part in Tamil and part in Chinese. I have already posted the picture of this (DR. N Kannan) in the inscription site.
    In 1281, a merchant (Tamilian) called Champanda Perumal, with the permission of Chechai Khan (son of Kubla Khan?) built a siva temple, called it after Khan as ThiruKhaneeswar, at Quanzhou.

    Probably in late 13th century, the Tamil merchants withdrew from China, due, may be to, political reasons, and if they had not, THERE WOULD HAVE BEEN MUCH MORE HINDU INFLUENCE in China as well.

    This has to be studied with the weakening Pandyas in Tamilnadu, and later decline of Chola as well during this period of history. Religions were, are and always will be part of political system even if people from roof top shout about secularism. This happened with all religions and all countries.

    Studying in isolation a particular religion without political background, therefore does not help at all.
    Narasiah

    • vedaprakash Says:

      Vedaprakash Vedaprakash

      9/15/09

      Translate message to English

      நரசய்யாவின் “செக்யூலரிஸ” விமர்சனம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
      “மதங்கள் எல்லாம் அரசியல் அமைப்பின் பகுதியாக இருந்தன, இருக்கும்,
      என்னதான் செக்யூலரிஸ கூச்சலிட்டாலும் இருக்கும். அத்தகைய நிலை எல்லா
      மதங்களிலும், நாடுகளிலும் இருந்தன. ஆகவே, ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசியல்
      பின்னணியுடன் ஆராயாமல், மதத்தை மட்டும் தனியாக ஆராய்வது உதவாது”, என்று
      பௌத்தம் தோன்றிதிலிருந்து 12ம் நூற்றாண்டு காலத்தை விடுத்து,
      சோழர்காலத்தில் இப்படி இருந்தது என்று வாதிப்பது வியப்பே! இவ்வாறு
      வர்த்தமான-காலபேதங்களை விடுத்து பொதுவாக “புதுமைப்படுத்தப்பட்ட”
      எண்ணங்களை எல்லாருக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் கூறுவது மிகவும்
      சுலபம். ஆனால், சரித்திர ரீதியில் அது உள்ள கோளாரை எடுத்திக் காட்டி
      விடும்.
      “குவான்சௌ”வில் இருந்த சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவில்கள் மறைந்த
      ரகசியத்தை சொல்லாமல் இருப்பதும் “செக்யூலரிஸத்தின்” அறிவுஜீவித்தனமோ
      அல்லது வேறுவிதமோ தெரியவில்லை.

      ஜான் கையின் (John Guy) புத்தகத்தைக் குறிப்பிடுபவர், மேற்கண்ட விஷயங்களை
      அவர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டாமலிருப்பதும் வேடிக்கைதான்.

  3. vedaprakash Says:

    LNS

    9/11/09

    I’m aware of this inscription. My point was that one need not despair
    that Hinduism did not strike root overseas. One has to take an
    inclusive view of various Indian religious traditions and take comfort
    in the fact that Buddhism indeed has. On the other hand, that same
    Buddhism seemed to have died out in India – point of the original
    question.

    To look at this question, one needs to look at what happens when a
    religious tradition seemingly ‘dies’ out. Look at various strands of
    Siva worship – each of which was distinct from the others at least as
    far as its adherents are concerned – and see how all of them have got
    subsumed under one rubric, that of Saivism. Inscriptions talk of
    Saivas, kapalikas as distinct groups. Even as late as the 1400’s, the
    composer Annamayya talks of Saivas worshiping Siva and Kapalikas
    worshiping Adi Bhairava as distinct groups.

    Likewise the traditions of Vishnu-Krishna worship e.g., Krishna as
    cowherd, Narayana as the supreme god, the worship of the trio Krishna-
    Balarama-Subadhra (as in Puri even today) all of which were distinct
    in history, all have over the ages got assimilated under one single
    Vaishnava religion.

    This process has obviously been ongoing in history itself. For
    example, the paripATal talks of an image of Krishna and Balarama in
    the KaLLazakar temple in Madurai but just a few centuries later
    there’s no Balarama image. In fact, in the Sangam times, there was
    also a distinct tradition of worshiping the 5 heroes of the Vrshni
    group as seen in the aimpaTaittAli. This tradition has disappeared. In
    fact there’s hardly any Balarama worship in Tamilnadu.

    Obviously so what happened when Buddhism ‘disappeared’? Many of its
    myths were adopted by Tamil Saivism, as many modern historians tell
    you. That’s one sure sign of a set of adherents of a tradition being
    accommodated under another tradition. But like Adibhairava is
    accommodated as Siva, it would perhaps be harder though not
    inconceivable, that Buddha be accommodated as Siva. Tamil Buddhists
    were around in Tamilnadu, I’m sure, till as late as the 14th century.
    So where did they disappear as their numbers steadily diminished –
    that’s an interesting question. To illuminate this question, you must
    look at Saivism and other traditions in Tamilnadu today e.g., Aiyanar
    worship, ayyappan worship etc. Looking at Buddhism alone will not
    necessarily be illuminative. Maybe an influential segment emigrated to
    Ceylon. But we also know, as Prof Stanley Thambiah tells us, that
    these Tamil Buddhists (as did other Tamils) over the centuries adopted
    Sinhala as their mother tongue. So where did the Tamil Buddhists go –
    perhaps nowhere. They’re still amongst us. As a question, it’s not
    very different from the question say, ‘where did the Kapalikas go?’ or
    ‘where did the Balarama worshippers go?’

    btw, was this Siva temple at Guangzhou meant for the use of the guild
    members who were obviously Saiva’s or was it for the local populace.
    But almost 700 years before this Siva temple, the Tang dynasty had
    declared Buddhism as a state religion. This was on the strength of
    individual bhikshu’s etc, not some imperial conquest. That was what I
    had wanted to say.

    Hope this helps,

    LNS

    • vedaprakash Says:

      Vedaprakash Vedaprakash

      9/15/09

      Translate message to English

      LNSன் வாதமும் அது போன்றதே. இந்துமதமோ, பௌத்த மதமோ வியாபார பொருளல்ல,
      ஆகவே ஏதோ தரக்கட்டுப்பாட்டு அடையாளங்களைத் தரித்துக் கொண்டு கப்பலில்
      ஏற்றப்பட்டு அனுப்பப்படவில்லை. அது “அறிவுஜீவாத்மான ஏற்றுமதியோ”, “கடல்
      கடந்த பண்டிதத்தனமோ” அல்ல. “பிராமணர்கள்” கடல் கடக்கக் கூடாதென்றால்,
      எப்படி அவர்கள் செல்ல முடியும்? ஆகவே முறணான வாதங்களை வைக்கக்கூடாது.

  4. vedaprakash Says:

    Maravanpulavu K. Sachithananthan

    9/12/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

    Quanzhou is in Fujian northwest of Taiwan.
    Guangzhou is in Canton northwest of Hongkong.
    Both names are in the above references.

    Which is the port area where Siva temple ThiruKhaneeswar is located?

    2009/9/11 LNS
    – show quoted text –


    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan

  5. vedaprakash Says:

    N. Ganesan

    9/14/09

    Translate message to English

    On Sep 11, 7:11 pm, “Maravanpulavu K. Sachithananthan”
    wrote:
    > Quanzhou is in Fujian northwest of Taiwan.Guangzhou is in Canton northwest

    > of Hongkong.
    > Both names are in the above references.
    >
    > Which is the port area where Siva temple ThiruKhaneeswar is located?
    >
    கடலீச்சரம் உடைய திருக்கானேசுவரர் தைவான் அருகே கோயில்கொண்டவர்.
    கான் = இந்து, இசுலாமிய கடலாடிகள் (உ-ம்: நாகைப்பட்டினம்) சீன அரசன்
    பெயரைத் தமிழில் எழுதிய முறை. செங்கிஸ் கான்.

    முதன்முதல் இதுபற்றி வந்த புஸ்தகம்:
    G.Ecke and P.Demieville,The twin pagodas of Zayton,a study of later
    Buddhist sculpture in China,Harvard University
    Press,Cambridge,Massachusetts,1935.

    Ananda K.Coomaraswamy,Hindu Sculptures at Zatyon,Ostasiatische
    Zeitschrift 1933 19:5-11.Berlin-Leipzig,Verlag von Walter de Gruyter.

    ராஜு பவுன்துரை கட்டுரை:

    Click to access Pounduran_raju.PDF

    (இது விக்கியில் இடம்பெறணும்).

    John Guy,Tamil Merchant Guilds and the Quanzhou Trade.,
    Emporium of the World,Maritime Quanzhou,1000-1400,Tuta Sub Aegide
    Pallas,Boston,2001.

    R.Poundurai In B.Li,et al (eds) Geoinformatics and
    Scoioinformatics,Early Contacts of South India and China:an
    Exploration of the Phenomenon of Hindu Diaspora,The Proceedings of
    Geoinformatics ’99 Conference,Ann Arbor,19-21 June 1999,the
    Association of Chinese Professionals in GIS-Abroad,Berkeley,CA,USA.

    Subramaniam, A Tamil colony in Medieval China,South Indian Studies

    Har Prasad Ray,Indian settlements in medieval China:a preliminary
    study,The Indian Journal of Asian studies,1989.

    Best,
    N. Ganesan

  6. vedaprakash Says:

    naras…@gmail.com

    9/14/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

    According to N Karashima, the inscription coming chronologically first is the one in Wat Thong Museum in southern Thailand. In Tamil Brahmi letters “perum pattan kal” This is the earliest Tamil Brahmi writing in SE Asia.
    This stone indicates the migration of a Tamil Goldsmith and was found in a place called bead mound – obviously where beads works were undertaken.
    Tauka Pa inscription now preserved in Nakhon Si Thammarat museum, and was discovered along with a stone Vishnu and and other statues of Pallava style.
    The Tamil inscription mentions that a tank was constructed by someone and put under care of Manikkramaththar , senamugattar, and another similar body. Manikramam is a famous merchant guild flourished in ninth to fourteenth centuries in Tamilnadu and Kerala.
    The next Tamil inscription is from Barus, in NW Sumatra
    Karashima details all of tehm in his article.
    Narasiah

  7. vedaprakash Says:

    kra narasiah

    9/14/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

    The work is titled
    ANCIENT AND MEDIEVAL COMMERCIAL ACTIVITIES IN THE INDIAN OCEAN: TESTIMONY OF INSCRIPTIONS AND CERAMIC SHERDS
    Report of the Taisho University Research Project 1997 – 2000
    Edited by Noboru Karashima
    Published by Taisho University.

    my friend Dr Rajagopal was associated with this work and Dr P Shanmugam who spoke during the release of my book Kadal Vazhi Vanikam has also written an article. Dr. Y. Subbarayulu was a major contributor during the research.

    Narasiah

  8. vedaprakash Says:

    N. Kannan

    9/10/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?
    Translate message to English

    2009/9/10 LNS :

    > சுருங்கச்சொல்லின் – பௌத்தம் என்பது Hinduism for export – அவ்வளவு
    > தான் 🙂
    >
    உண்மையில் பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டு ஜப்பான் வந்த அமெரிக்கர்கள் பின்
    இந்தியா வந்து இந்தியப் பெரும் ஞானமறிந்து ஹரே கிருஷ்ணா! அல்லது இரமணர்
    அல்லது சித்தர் மரபில் பிடிபட்டுவிடுகின்றனர். பௌத்தம் இந்தியா வெளியே
    வைக்கும் தூண்டில் 😉

    க.>

    • vedaprakash Says:

      Vinodh Rajan

      9/10/09

      Translate message to English

      > சுருங்கச்சொல்லின் – பௌத்தம் என்பது Hinduism for export – அவ்வளவு
      > தான் 🙂
      >
      அடக்கொடுமையே !

      அப்ப, பாலி ஹிந்து மதம், ஜாவா, சுமத்திரா இங்கெல்லாம் இருக்கிறது
      என்னவாம் ?

      ஒரு காலத்தில், ஹிந்து மதமும் தென் கிழக்காசியாவுக்கு பௌத்தத்துடன்
      ஏற்றுமதி செய்யப்பட்டது.

      பௌத்தமும் சைவமும் இங்கு அடித்துக்கொள்ள, அங்கு இரண்டும் ஒற்றுமையாக
      இருந்தது தான் முரன் !!

      V

      • vedaprakash Says:

        Vinodh Rajan

        9/11/09

        Yup, I should have used “Brahmanism” than “Hinduism”. Oh Well, I
        thought Brahmanism is derogatory and offensive. Anyways
        //But in the long run

        they have not been very loyal to Indian cultural influence either.
        When the wind blew Islam they seem to have inclined towards it. //
        The people still have a Dharmic feel. Which the Islamists are trying
        hard to remove all dharmic traces. rewriting textbooks, erasing
        history and blah blah blah.(you know what those guys do .. )

        //In China however, Buddhism has

        strictly been an Indian intellectual export. Buddhism in Korea and
        Japan were secondary intellectual exports from India, with China as a
        via media. //
        So ?

        —-

        When the Chinese, first translated the Agamas, do you think Hinduism
        (as we know now ) existed then ? Given, that the Vaidika Tradition
        then, was quite distinct from the Buddhist Traditions.

        As per your terms, Using Hinduism and Buddhism are Ant-Historical ;

        And you claim, Buddhism is export quality Hinduism, and contradict
        your own statements ?

        —-

        Why don’t you elaborate and qualify your statement on Buddhism being
        “Export Quality” Hinduism ?

        V

        • vedaprakash Says:

          Vinodh Rajan

          9/11/09

          //If you subsume various religious traditions emanating from
          India under historical Hinduism, then Budhism is subsumed under
          Hinduism, see? This is what I meant. //

          I have no idea how you can subsume a Nastika Anatmavada Tradition into
          an Astika Atmavada Tradition and again a blatant misuse of the term
          “Hinduism”.

          Anyways…

          Take Care

          V

      • vedaprakash Says:

        Vedaprakash Vedaprakash

        9/15/09

        Translate message to English

        வினோத் ராஜனின் சுருக்கமான விமர்சனம், “பௌத்தம் என்பது ஏற்றுமதிக்கான
        இந்துமதம்” என்பது, வினோதமானதா, விபரீதமானதா, விகல்பமானதா என்று சரித்திர
        உண்மைகள் எடுத்துக் காட்டும். “இந்துமதம்” எப்படி, எவ்வாறு 6வது
        BCEநூற்றாண்டிலிருந்து அவ்விதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது, அதுவும்
        “பௌத்தம்” என்ற போர்வையில், என்று ஆதாரங்களுடன் எடுத்துக்
        காட்டவேண்டும்.
        “இந்து மதத்தை எதிர்த்த, வேரறுக்கத்துடித்த பௌத்தம் அவ்வாறு
        “இந்துவேடமிட்டு” ஏற்றுமதியானதென்றால், “பௌத்தர்கள்” என்ன மானமற்றவர்களா,
        இளிச்சவாயர்களா, பாஷாண்டிகளா? “பௌத்தர்கள்” அத்தகைய பாஷாண்டி வேலைகளில்
        ஏடுபட்டிருந்தால், அது அவர்களுக்குக் கேவலமேயன்றி, பெருமையில்லை.

        வேதமதம் / இன்றைய இந்துமதம் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் அல்ல. வேதமத்தை
        எதிர்த்த பௌத்தமதமும் அவ்வாறே. அது எந்த விதத்திலும் ஒரு “வியாபார
        சின்னம்”, “வாணிக அடையாளம்”, “வர்த்தக முத்திரை” ஆகாது.

  9. vedaprakash Says:

    Mohanarangan V Srirangam

    9/23/09

    Re: [MinTamil] Re: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?
    Translate message to English

    திரு வேத ப்ரகாஷ் கொடுத்துவைத்தவர். பெரும் கட்டுரைகளை இட்டு அதற்கு இவ்வளவு உன்னிப்பான படிப்பாளர்கள் ஏற்பட்டு, விவாதமும் நடைபெறுவது மின்தமிழுக்கே உரிய சிறப்பு. குழும வடிவில் ஒரு மின்கோட்டுக் கல்லூரியாக தோற்றம் அளிக்கத் தொடங்கியுள்ளது.

    மேடை களைகட்டுகிறது! வேதப்ரகாஷ், வினோத் தயவில். நன்றி
    – show quoted text –

பின்னூட்டமொன்றை இடுக